குருகுல தேவி அம்மன்
குருகுல தேவி வரலாறு:
குருகுல தேவி அம்மன் சிவந்த நிறம் கொண்டவள். நான்கு கைகளை உடையவள். கைகளில் வில்லும், அம்பும், உடுக்கையும் கொண்டு மிகுந்த சக்தி உடையவளாக அருள்பாலிக்கிறாள். இவள் காளி அம்மனின் அம்சமாவாள்.
சிறப்பு:
குருகுல தேவி அம்மன், தேய்பிறை 15 திதிகளில் ஒருவராவாள் . மிகுந்த சக்தி கொண்டவள் ஆவாள். நம்மை துன்பங்களில் இருந்து காத்து நன்மையைப் பெற்றுத் தரும் தன்மை கொண்டவள். வராகியின் அம்சமாக தோன்றப்படும் குருகுல தேவி ,லலிதாம்பிகையின் குணத்தை கொண்டவள்.
மூன்று முக்கிய மந்திரங்களால் குருகுல தேவியை வழிபடும் போது நம்முடைய தாரபலம் பெருகும்.
பரிகாரம் :
ஸ்ரீவித்யா மந்திரத்தை பயன்படுத்தி, ஒரு லட்சம் முறை சிவப்பு நிற மலர்களால் பூஜிக்க நமக்கு அளவற்ற ஆற்றலை தருவார். தீய சக்திகளின் தவறான நோக்கத்தை அழித்திட குருகுல தேவி பெண்ணில் பல விதமான தோற்றத்தை எடுத்து அத் தீய சக்தியை தன்னுள் அடக்கிக் கொள்கிறாள்.
ஓம் குரு குலே சுவாஹா என்ற மந்திரத்தை உச்சரித்து, நாம் குருகுல தேவியை பூஜித்து வர நமக்கு சர்வ வல்லமையும் கிடைக்கும்.
அம்மன் அமைந்துள்ள இடம் :
சென்னைக்கு அருகில் உள்ள ரத்தினமங்கலம் என்ற கிராமத்தில் 108 அம்பிகையரில் ஒருவராக குடி கொண்டுள்ளாள்.