லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்
பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி-திருவாதிரை-சுவாதி-சதயம்-அசுவினி-மகம்-மூலம்
சனியின் பூசம், அனுஷம் ,உத்திரட்டாதியில் லக்னம் அமைந்தால்
அடுத்த நடக்கவிருப்பதை எளிதாக கண்டறியும் ஆற்றல் மிக்கவர்.தைரியசாலி என்பதால் எந்த சூழ்நிலையும் கலங்காமல் எதிர்கொள்வார் தேவைக்கேற்ப முடிவுகளை எடுப்பார்.பிறரை நம்பி வாழாதவர்.சுபகிரக பார்வை பெற்றால் அதிகார பதவி ,அரசாங்க நன்மை, மக்கள் பணி மக்களால் போற்றப்படும் யோகம் கிடைக்கும்.வலு பெற்ற சுபகிரக பார்வை பெரும் பதவி பெரிய தொழிலதிபராக மாற்றும்.
பாவ கிரக பார்வை பெற்றால் கெட்ட எண்ணம் கொண்டவர், சுயநலத்திற்காக அடிக்கடி மனதை மாற்றிக் கொண்டு தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக் கொள்வார்.உள்ளே அழுதாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கௌரவம் காப்பார்.
ஊருக்கே தெரிந்த விஷயம் யாருக்கும் தெரியாது என எண்ணி வாழக் கூடியவர் அவர் தேவைக்கு ஏற்றார்போல் எப்படியும் தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி ஆக இருப்பார்.நட்பு கிரக பார்வை இருந்தால் கெட்டவர்களால் நன்மை பெற்று தான் என்ற ஆணவத்துடன் வலம் வருவர்.
பிறர் மனதை நோகடிக்கும் குரூர எண்ணம் பெறுவர்.கூட்டு பாவ கிரக பார்வை பெற்றால் ஆயுதத்தால் பிறரை மிரட்டி ஆயுதத்தால் அழிவர் ,கெட்டவர்களில் கேடு கெட்டவர் ஆக இருப்பர்.தசாபுத்தி நன்றாக அமைந்தால் உலகை மிரட்டும் சக்தியாக இருந்து கெட்ட தசை வந்ததும் நான்கு சுவற்றுக்குள் முடங்கிப் போகவர்.
ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் லக்னம் நின்றால்
பலருக்கு ஆச்சரியம் தரும் வகையில் திடீர் வளர்ச்சி அடைவர், சகல உலக சுகங்களையும் திகட்ட திகட்ட அனுபவிப்பர், பரம்பரை கெளரவம் காப்பர்.குல தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருப்பர்.சுபகிரக பார்வை பெரும் கோடீஸ்வரர் ஆக மாற்றும் பிறரால் கணிக்க முடியாத அறிவுத் திறன் கொண்டவராக ஆச்சரியப்படுத்துவர்
பெண்கள் மீது பற்று கொண்டு அவர்களுக்காக போராடுபவராக இருப்பர்.நல்ல தசா புத்திகளில் சொந்த ஊரை விட்டு வெளிநாடு சென்று பொருளீட்டவும் ,புகழ் பெறவும் யோகம் கிடைக்கும் எதிர்பாராத புகழும் பணமும் கிடைக்கும்
பாவ கிரக பார்வை இருந்தால் யாரையும் மதிக்காத குணமும் முன்னோர்களைப் பழிப்பவர்களாகவும்,பெற்றோர்களை மதிக்காதவர்களாகவும் இருப்பர்.திருமணத்திற்குப் பிறகு சங்கடங்களை அனுபவிப்பர்.அறிவுரை சொல்பவர்களை மதிக்காமல் தவறு செய்தது மட்டுமல்லாமல் கண்டிப்பவர்களையும் எடுத்தெறிந்து பேசுவர்.தான் செய்தது எல்லாம் சரி என்றும் தவறுகளில் இருந்து தப்பித்து கொண்டதாகவும் தனக்குத்தானே புகழாரம் சூட்டிக் கொள்வர்.தானே தன் வாழ்க்கையை சிதைப்பர்.கெட்ட தசா புத்திகளில் யாருமற்ற அனாதையாகி இருந்த இடம் தெரியாமல் போய் விடுவர்
கேதுவின் மகம், மூலம், அசுவினி லக்னம் அமைந்தால்
இழப்புகளால், அவமானங்களால் மிகச் சிறந்த தத்துவஞானியாவர்.ஏமாற போகிறவர்களுக்கு காக்கும் கடவுளாகவும், ஏமாந்தவர்களுக்கு உபதேசம் செய்து வாழ வழிசெய்யும் மேதையாகவும் இருப்பர்.தற்கொலை எண்ணம் கொண்டவர்களையும் தன் அறிவுரையால் காப்பாற்றுவார்.சுப கிரக வலிமை பெற்றால் ஊர் தலைவராகவும்,சுபபலம் வலுத்தால் உலகம் போற்றுவராகவும் மாறுவர்.
சாதாரணமாக பிறந்து கோடீஸ்வரராகவும், சரித்திரம் படைப்பவராகவும் மாறுவர் மக்களை வசீகரிப்பர் பலருக்கு பணத்தால் உதவியும் குணத்தால் நன்மையும் செய்வார்.சுப தசை பெரும் யோகத்தை தரும்
வலு குறைந்த பாவ கிரக பார்வை குழப்பமான மனநிலையை தரும் வலுப்பெற்றால் பைத்தியமாக்கி விடும்.ஆணவமே அழிவுக்குக் காரணமாகும் உலகில் இல்லாததை இருப்பதாக சொல்லி அதைத் தேடி தோல்வி அடைவர், அவமானம் அடைவர்
காலங்களை வீணடிப்பர், யாரும் மதிக்க மாட்டார்கள், மந்த புத்தி ,பிறரைக் கெடுக்கும் எண்ணம் மேலோங்கும் ,ஏமாற்றி பிழைப்பர், நன்றி கெட்டவர்
லக்னம் நின்ற நட்சத்திராதிபதி கிரகத்தின் பலத்தை பொருத்தே குணமும் வாழ்க்கையில் சுக துக்கங்களின் பலனும் இருக்கும் ஆதலால் லக்னத்தின் நட்சத்திராதிபதியை அறிந்து அதனை மேம்படுத்துதாலே எதிர்காலத்தை வளமாக்க சிறந்த வழி
லக்னாதிபதியை விட லக்னாதிபதி நின்ற நட்சத்திராதிபதியை விட லக்னம் நின்ற நட்சத்திராதிபதி சுப தன்மை பெற்றால் தான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் லக்னாதிபதி தசை யை விட சுப ஆதிபத்யம் பெற்ற லக்னம் நின்ற நட்சத்திராதிபதி தசை வந்தால் கோடீஸ்வரராகவும் ,அழியா புகழும் பெறுவர்.