திருமுல்லைவாயில் கொடியுடையம்மன்
கொடியுடையம்மன் வரலாறு:
இக்கோவில் ‘மாசிலாமணீஸ்வரர் கொடியுடையம்மன்’ ரூபத்தில் இருக்கும் சிவபெருமான், பார்வதிதேவிக்கு கட்டப்பட்டுள்ளது. ‘தேவி கொடியுடையம்மன்‘ கிரியா சக்தியின் உருவமாக திகழ்கிறாள். எனவே நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பு கொடியிடை அம்மனை வழிபடுவது சிறப்பு.
பவுர்ணமி தினங்களில் காலையில் மேலூர் திருவுடையம்மனையும், மதியம் திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், மாலையில் திருமுல்லைவாயில் கொடியுடையம்மனையும் வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.
இக்கோவிலில் இருக்கும் ‘மாசிலாமணீஸ்வரர்’ தன் பக்தர்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்பவர். தொண்டைமான் அரசனுக்கு உதவி செய்ய தன் நந்தியை அனுப்பியதால் மற்ற ஆலயங்களைப் போல் இல்லாமல் இவ்வாலயத்தில் மட்டும் நந்தி சிவ பகவானை நோக்கி இல்லாமல் அவருக்கு கிழக்கே பார்த்திருப்பதாக அமைந்திருக்கும்.
பரிகாரம்:
இவ்வாலயத்தில் மட்டும் ‘மாசிலாமணீஸ்வரர் கொடியுடையம்மன்‘ சிவபெருமான் பார்வதியின் ரூபத்தில் இருக்கும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அமைந்துள்ளது. இடம்மாறி அமர்ந்திருக்கும் இந்த ஈசனையும் அம்மனையும் நாம் வழிபட நமக்கு நல்லதொரு மாற்றம் கிடைக்கும். பவுர்ணமி ,அமாவாசை கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை ,புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
வழித்தடம்:
சென்னையிலிருந்து ஆவடி செல்லும் வழித்தடத்தில் அம்பத்தூருக்கு மிக அருகில் ‘திருமுல்லைவாயில் கொடியுடை அம்மன்‘ ஆலயம் அமைந்துள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இருந்தும் அரசு பேருந்துகள் அடிக்கடி உள்ளன. திருமுல்லைவாயிலில் புகைவண்டி நிலையம் உள்ளது.
கோவில் இருப்பிடம்