மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் வரலாறு
கி.பி 5-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டிய மன்னன். ‘மதுரை மீனாட்சி‘(Madurai Meenakshi Amman)அம்மனுக்கு கோவிலை கட்டினார். இக்கோவில் கட்டப்பட்டு உள்ள இடத்தில்தான் முன்பு ஸ்ரீ இந்திர தேவன் சிவலிங்கம் ஒன்றை வைத்து பூஜித்து வந்தார். மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் மீனாட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆக்ஷி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கண்கள் என்று அர்த்தம்.
தல விருட்சம்: கடம்ப மரம்
சிறப்பு:
மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இத்திருக்கோவில் மிகுந்த புனித தலமாக கருதப்படுகிறது. மீனாட்சி(Madurai Meenakshi Amman) அம்மனுக்கு பச்சை நிற பட்டு விசேஷமாக கருதப்படுகிறது. வருடம் தோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாணம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது வழங்கப்படும் திருமாங்கல்ய கயிற்றை கன்னிப் பெண்கள் பக்தியுடன் பெற்றுக் கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
பரிகாரம்:
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி(Madurai Meenakshi Amman) அம்மனை தரிசித்து வந்தால் நம்முடைய வேண்டுதல்களை எளிதில் நிறைவேறும். மீன் எப்படி தன் குஞ்சுகளை உணவிட்டு காக்கின்றதோ அதைப் போன்று தன்னை நாடி வரும் பக்தர்களை காத்து அம்மாவைப் போல் அரவணைப்பாதால் நாம் மீனாட்சி அம்மா என்று இவரை அன்புடன் அழைக்கின்றோம்.
வழித்தடம் :
இக்கோயில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது.மேலும் இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள இணைய தளத்தை தொடர்பு கொள்ளவும் ..
http://www.maduraimeenakshi.org/