வாலை உபாஸன மந்திரம்
வாலை உபாஸன மந்திரம் பூஜை விதி:
காலையில் ஸ்நானம் செய்து மடிகட்டி திருநீரணிந்து அனுஷ்டானம் முடித்துக்கொண்டு மன ஒருமையுடன் ஒரு சுத்தமான இடத்தில் இருந்துகொண்டு அடியிற்கண்ட தியானம் செய்து அடியிற் கண்டவிவரப்படி சக்கரம் எழுதி பூஜை செய்து மூல மந்திரம் ஜெபிக்கவும்.
சாணத்தால் தரை மெழுகி மஞ்சள் தூள் செய்து மேற்படி தூளினால் முக்கோணமிட்டு முக்கோணத்துள் குங்குமம் பரத்தி விபூதியினால் அதன் மத்தியில் அச்சரமெழுதி,விபூதியினால் மூன்று மூலைக்கும் சூலாயுதம் எழுதி பூஜிக்கவும்.
தியானம்:
அன்பத்தொன் றராளி ,கலிததநுலதே வேதமாகுந்நசாகி
கொம்பத் தன்போடு பூக்கும் குஸீமததையில் யேந்துன்ன,
பூந்தேன், குழம்பே ,செம்போல்த்தார் பாணடம்ப,பார்த்த
சௌபாக்கிய அம்பேநின் பாதம் கும்பிடிந்நேன் கழலிண
களையா தீஸ்வரி ,புவனேஸ்வரி
மேற்படி மூல மந்திரம்:
ஓம், ஸ்ரீம், ஓம் ,ஓம்க்ரீம், சௌவும், திரிபுவனே சக்தி, மமசுவாகா.உரு 1008
பூஜை விவரம்:
தீபம் வைத்துக் கெண்டிச் செம்பில் ஜலம் வைத்து, அதற்கு கும்ப வஸ்திரம் மஞ்சள் நனைத்து கட்டி ,வெற்றிலை மூன்று கும்பத்தில் சுற்றிலும் வைத்து, தென்னை ஓலையில் சுத்தமான 5 துணி பந்தம் செய்து, தேங்காய் எண்ணெயில் நனைத்து கொளுத்தி, நாலு பக்கம் நாலுபந்தம் கும்பத்திலும், ஒருபந்தம் கெண்டி நுனியிலும் வைத்து ,வாழையிலை போட்டு அவல், பொரி கடலை, தேங்காய், பழம் ,பச்சரிசி பொங்கலிட்டு வைத்து ,வெற்றிலை பாக்கு ,புஷ்பம் ,சூடம், சாம்பிராணி, தூப தீபம் கொடுத்து ,மேற்கண்ட மூல மந்திரம் செபிக்க சித்தியாகும். சித்தியானபின்
இதன் நன்மை:
தினம் காலை மாலை ஸ்னானம் செய்து, அனுஷ்டானம் முடித்து மேற்படி உரு108 செய்து கொண்டு வந்தால் ஏவல், சூனியம் ,பில்லி,கண்ணேறு, நாவேறு,எதிரியாளியால் செய்ய பட்ட எவ்விதத் துன்பமும் அணுகாது சுபம்..