Homeஜோதிட குறிப்புகள்ஜோதிடமும் தொலைபேசி எண்களும் 

ஜோதிடமும் தொலைபேசி எண்களும் 

ஜோதிடமும் தொலைபேசி எண்களும்

உங்கள் கைப்பேசியில்(Mobile number astrology) 10 எண்கள் அடக்கம் அதன் கூட்டுத் தொகையில் முதலிடம் வகிக்கும்

உதாரணமாக:94371 86210 என வைத்துக்கொண்டால் அந்த மொத்த எங்களையும் கூட்டினால் 41 வரும் அதையும் கூட்டினால் 5 வரும் அதுவே அந்த அலைபேசியின் ஆதார எண்

இனி ஒவ்வொரு எண்ணிற்கான விசேஷ தன்மைகளை காண்போம்!

தலையெழுத்தை மாற்றும் -திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

மொபைல் எண் கூட்டுத்தொகை :1

  • இது சூரிய ஆதிக்கம் கொண்டது.
  • சாதனை புரியும் எண்.
  • திறமையை வெளிப்படுத்தும்.
  • பிறரின் எண்ணங்களை உள்வாங்கி செயல்படும் தன்மை உடையது.
  • வாழ்க்கையில் வீரச்செயலுக்கு துணைபுரியும்.
  • தன்னம்பிக்கையூட்டும். புகழ், வெற்றிக்கு அயராது பாடுபடும்.
  • அதிஷ்ட தினம்: ஞாயிறு, திங்கள், வியாழன்
  • மிக அதிஷ்ட தினம்: ஞாயிறு
  • அதிர்ஷ்ட எண்: 1,2,3,7,9
  • துரதிர்ஷ்ட எண்: 4,6,8
  • அதிர்ஷ்ட திசை: வடமேற்கு, மேற்கு
  • அதிஷ்ட நிறம் :ஆரஞ்சு, மஞ்சள், தங்க நிறம்.

மொபைல் எண் கூட்டுத்தொகை :2

  • சந்திர ஆதிக்கம் கொண்டது.
  • நேசம், விட்டு கொடுக்கும் மனோபாவம் இரு மனம் கொண்ட எண்.
  • வெற்றி-தோல்விக்கு துணைபோகும், கலைஞர்களுக்கு உற்ற துணை புரியும்.
  • வியாபாரத்துக்கும், ஆடம்பர செயல்களுக்கும், பெண் அரசியல்வாதிகளுக்கும், திருமண தரகர்களுக்கும், அழகுசாதன விற்பவர்களுக்கும், திறம்பட உதவி புரியும் எண்.
  • அதிஷ்ட தினம்: திங்கள்,செவ்வாய்
  • மிக நல்ல நாள்: வெள்ளி
  • அதிர்ஷ்ட எண்: 1,2, 3,7
  • துரதிர்ஷ்ட எண்: 4,5
  • அதிர்ஷ்ட திசை: தென் மேற்கு.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இளநீலம், தூய வெண்மை.

mobile number astrology

மொபைல் எண் கூட்டுத்தொகை :3

  • குருவின் ஆதிக்கம் கொண்டது.
  • விடா முயற்சியும் வெற்றியும் சுலபமாகும்.
  • எந்த எதிர்வினையும் சமாளிக்கும்.
  • திருமண தடை போக்கும்.
  • சமாதான தூதுவராக செயல்படும்.
  • காதலர்களுக்கு ஏற்ற எண்.
  • மூளைத் திறனை அதிகரித்து துணைபுரியும்.
  • பரந்த மனப்பான்மை தரும்.
  • எதிரிகளை தன்வசப்படுத்தும்.
  • முன்வைத்த செயலை பின் வைக்காத எண்.
  • பள்ளி மாணவர்கள், மதபோதகர்கள், ஆலய புரோகிதர்களுக்கு உற்ற துணை புரியும் அற்புத எண்.
  • அதிஷ்ட தினம்: செவ்வாய் ,வியாழன், வெள்ளி.
  • மிக நல்ல நாள்: செவ்வாய்
  • அதிஷ்ட எண்:1,2,3,9
  • துரதிர்ஷ்ட எண்: 5,6
  • அதிர்ஷ்ட திசை: கிழக்கு
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வயலட்

நவகிரக பரிகார கோவில்கள் வழிபாடு

மொபைல் எண் கூட்டுத்தொகை :4

  • ராகுவின் ஆதிக்கம் கொண்டது .
  • திடநம்பிக்கை ஏற்ற எண்.
  • விட்டுக் கொடுத்தல் சகிப்புத்தன்மை இல்லாத எண்.
  • திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு ஏற்ற எண்.
  • பிறரால் சகிக்க முடியாத செயலுக்கு துணைபோகும்.
  • பணவரவையும் செலவுகளையும் உருவாக்கும்
  • ஆரோக்கிய செயல்களை உருவாக்கும்.
  • வேதனைகளை கட்டுப்படுத்தும்.
  • கடின உழைப்புக்கு துணைவரும்.
  • ரகசிய-தீய செயலுக்கு துணை புரியும்.
  • அதிஷ்ட தினம்: ஞாயிறு, திங்கள் சனி
  • மிக நல்ல நாள்: சனிக்கிழமை
  • அதிர்ஷ்ட எண்: 2, 4, 5 ,6, 7
  • துரதிர்ஷ்ட எண்: 1,3,8
  • அதிஷ்ட திசை: தெற்கு
  • அதிர்ஷ்ட நிறம்: கிரே,ப்ளூ, கோல்டன் பிரவுன்

தொடர்ச்சி அடுத்த பதிவில் …..

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!