ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025 -ரிஷபம்
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
இதுவரைக்கும் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மேஷத்தில் இருந்து வந்த ‘ராகு பகவான்’ இப்போது 11-ம் இடத்திற்கு செல்கிறார். இதே சமயத்தில் 6ம் இடத்தில் இருந்த கேது 5-ம் இடத்திற்கு செல்கிறார். இது அல்லவை குறைந்து நல்லவை அதிகரிக்கும் காலகட்டம் அதே சமயம் எதிலும் கவனமும் நிதானமும் மிக மிக முக்கியம்.
வேலை
பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும் அதே சமயம் எதிர்பாராத இடமாற்றமும் வர வாய்ப்புகள் உண்டு அதை தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள் சிலருடைய தவறான வழிகாட்டலை நம்பி இருக்கும் பணியை விட்டால் இழந்ததை திரும்பப் பெறுவது குதிரை கொம்பாகி விடலாம் வீணான புலம்பலை தவிர்த்தாலே இந்த காலகட்டம் உங்களுக்கு உன்னதமாக இருக்கும் உணர்ந்து செயல்படுங்கள்.
குடும்பம்
வீட்டில் நிம்மதி நிலவும் உறவுகளிடையே வீண் குதர்க்கம் வேண்டாம் சுப விசேஷங்கள் படிப்படியாக வர தொடங்கும் விடுபட்ட நீத்தார் கடன்களை செய்வது நன்மை தரும் ஆடை ஆபரணம் சேரும் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் வீடு மனை வாங்கும் சமயத்தில் பத்திரங்களில் முழு கவனம் செலுத்துங்கள் பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் உங்கள் வார்த்தைகளை கடுமையாக்கி அதை செல்லா வாக்காக ஆக்கிக் கொள்ள வேண்டாம் உடன் பிறந்தவர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.
தொழில் -வியாபாரம்
வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் நிதானத்தையும் நேர்மையையும் கடைபிடிப்பது அவசியம் மூன்றாவது நபரை நம்பி முதலீடுகளை செய்து ஏற்றத்தை ஏமாற்றிக்க வேண்டாம் யாருடைய தவறான வழிகாட்டலையும் நம்பி வர்த்தக கடன்களுக்கு குறுக்கு வழியில் முயற்சி கொள்ள வேண்டாம் வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்து எடுக்கும் முன் முழுமையாக படித்துப் பார்த்து கையெழுத்திடுவது அவசியம்.
அரசு -அரசியல்
அரசியல் அரசுத் துறையினருக்கு ஆதரவு நிலைக்கும் திடீர் பதவி வந்தால் அது உங்கள் திறமையை பரிசோதிப்பதற்கான வாய்ப்பு என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்படுவது அவசியம் சட்டபுரமான செயல்களை கனவாக கண்டாலும் நினைவில் பெரும் சங்கடத்தை சந்திக்க நேரம் கவனமாக செயல்படுங்கள்.
உடல் நிலை
உடல்நிலை சிறப்பாக இருக்க உணவுப் பழக்க வழக்கத்தில் நேரம் தவறாமையை அவசியம் கடைபிடியுங்கள் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் சுவாச சிக்கல் அலர்ஜி அவஸ்தைகளை உடனே கவனியுங்கள்
பலன் தரும் பரிகாரம்
ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று ரங்க நாதரையும் தாயாரையும் தரிசித்து விட்டு கொடி மர கருடனை வணங்கி விட்டு வாருங்கள் வாழ்க்கையில் இன்னல்கள் குறைந்து நல்லெண்ண நடக்கும்