மும்பை மும்பா தேவி அம்மன்
வரலாறு:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தெற்கு மும்பையில் சாவேரி பஜாரில் மும்பா தேவி ஆலயம் அமைந்துள்ள. மும்பாதேவியின் பெயரை கொண்டுதான் இந்நகருக்கு மும்பை என பெயர் சூட்டப்பட்டது. மும்பை நகரின் காவல் தெய்வம் இவள். இவள் மகாலட்சுமியின் அம்சம் உடையவள்.
சிறப்பு:
இக்கோவிலில் நவராத்திரியின் ஆறாவது நாளன்று தேங்காய் மற்றும் வெண்ணெயை கொண்டு ஒரு பசை தயாரிக்கப்படும். அது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அதை பக்தர்கள் தங்களது புருவங்களின் மீது தடவி கொள்வர். பத்தாவது நாளன்று சோள செடிகள் சிலருக்கு வழங்கப்படும். இச்செடிகள் செல்வவளத்தை அள்ளித் தரகூடியன. மும்பாதேவி சிறுமியாக இருந்தபோது தனக்கு ஒரு வசிப்பிடத்தை தேடி பல ஊர்களுக்கு சென்றாள் ஆனால் எந்த ஊரும் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. மும்பை நகரம் மட்டுமே அவனை வரவேற்றது. எனவே மும்பா தேவி இங்கே குடியிருந்தாள். இங்கு வாழும் மக்களை காத்து ஆசீர்வதித்து உறுதுணையாக இருக்கிறாள்.
பரிகாரம்:
நம் வாழ்வில் இன்னல்கள் ஏற்படும் போது மும்பா தேவியை முழு நம்பிக்கையுடன் தினமும் தீபம் ஏற்றி பூஜித்து வர சூழ்நிலையி நமது விருப்பத்திற்கு ஏற்ப மாறி நன்மையைத் தரும்.
வழித்தடம்:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தெற்கு மும்பையில் சாவேரி பஜார் என்னுமிடத்தில் இவ்வாலயம் உள்ளது.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …