Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: தனுசு

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: தனுசு

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026

தனுசு

குரு பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!! வருகின்ற புத்தாண்டில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனிபகவான் இருக்கிறார். ஜூன் மாதத்தில் வரக்கூடிய பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வருகிறார். வருட கடைசியில் ராகுவும்-கேதுவும் உங்கள் ராசிக்கு முறையே இரண்டாம் இடத்திற்கும், எட்டாம் இடத்திற்கும் வருகிறார்கள். இத்தகைய கிரக அமைப்புகளால் இந்த வருடம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து தடைகள் நீங்க கூடிய ஆண்டாக இருக்கும். அதை தலைகனமாக மாற்றிக்காமல் இருந்தால் உயர்வுகள் தொடர்ச்சியாக இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் உங்கள் தகுதி உரியவர்களால் உணரப்படும். மேலிடத்தின் பாராட்டுகளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே சமயம் உடன் இருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும். 

வீட்டில் படிப்படியாக விசேஷங்கள் வரத் தொடங்கும். விலகி இருந்த உறவுகளும் நட்பும் வந்து சேர வேண்டும் என்றால் விட்டுக்கொடுத்தல் அவசியம். வரவுகள் அதிகரித்தாலும், செலவுகளும் சேர்ந்து வரும். பழைய கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்கள். சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்ப ரகசியங்களை பொது இடங்களில் பேசுவதை தவிருங்கள். 

செய்யும் தொழிலில் முழு கவனமும், முயற்சியும் இருந்தால் மாற்றமும் ஏற்றமும் வரும். தெரியாத வர்த்தகத்தில் பிறரை நம்பி கால் பதிக்க வேண்டாம். 

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 தனுசு

அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு உணர்வு அவசியம். அர்த்தமில்லாத பேச்சும், அனாவசிய வாக்குறுதிகளும் அஸ்திவாரத்தையே அசச்சிடலாம் நிதானம் அவசியம். 

கலை மற்றும் படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். உடன் இருப்போர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். 

பெண்களுக்கு மங்களங்கள் கைகூடி வர கூடிய ஆண்டாக இந்த வருடம் இருக்கும். இல்லத்தில் உங்கள் வாக்கு செல்வாக்கு பெரும். அக்கம் பக்கத்தினர்களை உங்கள் குடும்ப விஷயங்களில் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டாம். பணி புரியும் பெண்கள் அலுவலகத்தில் கவனச் சிதறலை தவிருங்கள். பணத்தை கையாளக்கூடியவர்கள் நிதானத்தை கடைபிடியுங்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்யம் அதிகரிக்கும். வயது முதிர்ந்த பெண்களுக்கு வழுக்கி விழுதல் ஏற்படலாம் எச்சரிக்கை அவசியம். 

உடல் நலத்தில் ரத்த அழுத்தம் மாற்றம், ஒற்றைத் தலைவலி, சக்கரை, பாரம்பரிய உபாதைகள் தலை தூக்க கூடும் கவனம். 

சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை நீக்கி நன்மைகள் யாவும் கொண்டுவரும். முடிந்தால் தேவார பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏதாவது ஒன்றுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் நல்லது நடக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!