ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- கன்னி ராசி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- கன்னி ராசி

புதன் பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் ‘ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ வரும் புத்தாண்டு உங்களுக்கு மாற்றம் தருமா? அல்லது ஏற்றம் தருமா? என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டின் வருடத்தின் ஆரம்பத்திலேயே வசந்த காற்று வீசத் தொடங்கும். அதேசமயம் செயல்களில் திட்டமிடலும், நேரம் தவறாமையும் அவசியம். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைச் செயல்படுத்தினால் நன்மைகள் அதிகரிக்கும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். இதுவரை நிலவி வந்த இறுக்கமான சூழல் விலகும். உங்கள் பொறுப்புகள் அதிகரித்தாலும், ஆதாயமும் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் யாருடைய தவறான வழிகாட்டுதலுக்கும் தலையாட்டாமல் செயல்பட்டால் மனம்போல இடமாற்றம், உயர்வுகள் கிட்டும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் சட்டென்று கைகூடிவரும். அதைத் தேர்வு செய்வதில் முழு கவனம் தேவை.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்க்கையில் இருந்த சுபகாரிய தடைகள் விலகும். இளம் வயதினருடைய காதல் பெற்றோர்களால் ஏற்கப்பட்டு மனம்போல் மணப்பேறு கிட்டும். குழந்தை பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்கு மனம் மகிழும் படி மழலை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்கச் சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்களில் ஆடம்பரத்தை தவிருங்கள்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்

செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சியும், ஆதாயமும் ஏற்படும். எதிர்பார்த்த அரசு அனுமதி, வங்கிக் கடன் நிச்சயம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் வரும் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். கடன் அட்டைகளை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். நிரப்பப்படாத காசோலைகளை ஒருபோதும் கையெழுத்திட்டு வைக்காதீர்கள்.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். இதுவரைக்கும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவர்கள் கூடப் புதிய பொறுப்புகளால் பிரகாசிக்க வாய்ப்பு வரும்.

மாணவர்களுக்கு மனம்போல் மதிப்பெண்கள் கிடைக்கும். சோம்பல் கூடவே கூடாது. வெளிநாட்டு கல்வி வாய்ப்புக்கான முயற்சி பலன் தரும். பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள்.

கலை, படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் வீடு தேடி வரத் தொடங்கும். படைப்பு சார்ந்த ரகசியங்களைப் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறருக்கு வாக்கு தரும் சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

பணி சார்ந்த பயணங்களில் கோப்புகளை உடனெடுத்துச் சென்றால் தகுந்த பாதுகாப்பு அவசியம். வாகனத்தை ஓட்டிச் செல்லும் சமயத்தில் போதுமான ஓய்வு இல்லாமல் வெகுதூரம் இயக்க வேண்டாம். விஷ ஜந்துக்கள், விஷ ஜுரம் இவற்றால் பாதிப்பு வரலாம். உணவே நஞ்சாகலாம். பழைய கெட்டுப்போன உணவுகளைத் தவிருங்கள் வயிறு, கல்லீரல், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி பிரச்சனைகளில் அலட்சியம் காட்டக் கூடாது

ஆலய வழிபாடு

இந்த வருடம் ஒருமுறை சிங்கக்குடி, பரிக்கல், பூவரசன் குப்பம் நரசிம்மர்களை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். மாதம் ஒரு முறை பக்கத்து பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மரை பானகம் நிவேதனம் செய்து ஆராதியுங்கள். ஏழை மாணவர்களுக்குப் படிப்புக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!