ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-தனுசு

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

குரு பகவானின் ஆசி பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!!உங்கள் ராசிக்கு 9வது ராசியில் புத்தாண்டு பிறக்கிறது. குடும்பத்தில் இணக்கமும், இனிமையும் ஏற்படும். குழந்தைகளால் குதூகலம் அதிகரிக்கும். சுப காரியங்கள் சுலபமாக கைகூடும். உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகள் சாதகமாக தீர்வாகும். இந்த சமயத்தில் குடும்பத்தில் உள்ள மூத்த உறவுகளை பகைத்துக் கொள்வது,ம் அவர்கள் மனம் நோக பேசுவதும் கூடவே கூடாது. வீடு, வாகனம் புதுப்பிக்க, வாங்க யோகமுள்ள ஆண்டாக இந்த ஆண்டு அமையும். சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். கல்யாண மேல சத்தமும், மழலை அழுகுரலும் மனம் மகிழும் படி கைகூடும்.

தன்னம்பிக்கை அதிகரித்து தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு இருக்கும். இந்த சமயத்தில் தலைகனத்தை அறவே தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் முழுமையான முன்னேற்றத்தை அடையலாம். உடன் இருப்போர் பாராட்டும், மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். மனம் போல் இடமாற்றம் ,உயர்வுகள் கைகூடும். பணியிடத்தில் எதிர்பாலினருடன் எல்லை வகுத்து பழகுங்கள். யாருக்கும் தனிப்பட்ட முறையில் புத்திமதி எதுவும் சொல்ல வேண்டாம். பணியிடத்தில் ரகசியம் எதையும் உங்கள் நிழலிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

பெண்களுக்கு கனவுகள் நினைவாக கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். தசா புத்திகள் நன்றாக உள்ளவர்களுக்கு பெரும் பொருளும், பெருமையும் சேர வாய்ப்பு உண்டு. பணி புரியும் பெண்களுக்கு உயர்வுகள் கிடைக்க தொடங்கும். உங்கள் வாக்குக்கு செல்வாக்கு உயரும். வாரிசுகளால் பெருமையும் வாழ்க்கைத் துணைவருடன் அன்னோன்யம் ஏற்படும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால், வீண் டென்ஷன், விரயம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வேலை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சந்தேகம், விவாதங்கள் வந்து போகும். சில விஷயங்களை பெரிது படுத்தாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

இந்த ஆண்டு முழுக்க ராகு 4-ம் வீட்டிலும், 10-ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். ராகுவின் சஞ்சார நிலையால் தாயாருக்கு உடல்நிலை பாதிப்படையலாம். வீடு வாங்கும் போது சொத்துக்குரிய தாய் பத்திரத்தை கேட்டு வாங்குங்கள்.

10-ல் கேது அமருவதால் வேலை சுமை, வீண்பழி வந்து செல்லும், சில காரியங்களை போராடி முடிக்க வேண்டிவரும்.

சனிபகவான் இந்த வருடம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால், சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்சனைகளுக்கு எதார்த்தமான தீர்வு காண்பீர்கள். ஏழரைச் சனியில் இருந்து விடுபட போகிறீர்கள். ஆகவே இதுவரை தடைபட்டிருந்த காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

பலன் தரும் பரிகாரம்

ஒரு முறை பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள் உங்களது இன்னல்கள் நீங்கி வாழ்க்கை இனிமையாகும்.

மொத்த பலன் : முற்பாதி சுமார்- பிற்பாதி சூப்பர்

Leave a Comment

error: Content is protected !!