ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-கன்னி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

புதனின் ஆதிக்கத்தால், கேள்வி ஞானம் அதிகம் உள்ள கன்னி ராசி அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. குடும்பத்தில் கசந்த காலம் மாறி வசந்த காலம் உருவாகும். பூர்வீக சொத்து லாபம் தரும். பண வரவு சீராகும். பழைய கடன்கள் சுலபமாக பைசல் ஆகும். வாழ்க்கை துணையுடன் அன்னோன்யம் உருவாகும். வாரிசுகள் வாழ்க்கையில் இருந்த சுப காரிய தடைகள் விலகும்.

இளம் வயதினருடைய காதல் பெற்றோர்களால் ஏற்கப்பட்டு மனம் போல் மணப்பேறு கிட்டும். வீடு ,வாகனம் புதுப்பிக்க சந்தர்ப்பம் அமையும். பெற்றோர்,பெரியோர் ஆசியோட குலதெய்வ வழிபாட்டை செய்து முடிப்பது அவசியம். நீண்ட காலமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள் புதிய வகை மருத்துவத்தால் சீரான உடல் நலத்தை சீக்கிரமே பெறலாம்.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். அலுவலகத்தில் தேக்கமும் ஏக்கமுமாக இருந்த நிலை மாறும். உயர்வுகள் வரும். சமயத்தில் வீண் குழப்பம் வேண்டாத கற்பனையும் கூடாது. அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். என்னதான் அவசரமாக இருந்தாலும் கோப்புகளில் கையெழுத்திடும் போது கொஞ்சமும் அலட்சியமும் கூடாது. பணத்தை கையாளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருங்கள்.

பெண்களுக்கு உறவுகளுடன் இருந்த மனக்கசப்பு மறையும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். பூர்வீக சொத்து அசையும் அசையா சொத்து சேரும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவு நேரத்தில் தேவையில்லாமல் அணிய வேண்டாம். மனம் போல் தாரமாகும் பாக்கியமும், தாயாகும் பெருமையும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் விடுபட்ட முன்னோர் வழிபாடு ஏதாவது இருந்தால் அதை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.

30.04.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். அதே நேரம் எதிர்பாராத பண வரவும் உண்டு. சொந்த பந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் குருபகவான் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு மணமாலை தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் கேதுவும், ஏழாம் வீட்டில் ராகுவும் அமர்கிறார்கள். கேது ராசிக்குள் வருவதால் தலை சுற்றல், குமட்டல், நாக்கில் கசப்பு வந்து நீங்கும். சில நேரங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும்போது யோகம், தியானம் செய்ய தவறாதீர்கள்.

7-ம் வீட்டில் ராகு வருவதால் கணவன் மனைவிக்குள் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை வரும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. காதல் விஷயத்தில் சிறிது எச்சரிக்கை தேவை. ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வாழ்க்கை துணையின் மனதை புரிந்து கொண்டு நடப்பது அவசியம். நிறைய புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் செல்லும்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் எத்தனை பிரச்சனை வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்க கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். வி.ஐ.பிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை வழிபாட்டு வரவும்.

மொத்த பலன் : உங்களது நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

Leave a Comment

error: Content is protected !!