பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:மகர ராசி
ஆயுள்காரனாகிய சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே! குருபகவான் ஜூன் 1ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் இருந்து 7ம் இடம் வருகிறார். மேலும் அக்டோபர் 31ம் தேதி முதல் குருபகவான் அதிசாரமாக 8ம் இடம் வருகிறார். பிறகு மீண்டும் 24-ம் தேதி முதல் வக்ரகதியில் 7ம் இடம் வருகிறார்.
சனிபகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
டிசம்பர் 5ம் தேதி முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திலிருந்து ராசிக்கும்,கேது பகவான் எட்டாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு வருகிறார்கள்.
இதன் மூலம் இவரிடம் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. விரும்பிய இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.வீடு, மனை, புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்க பெறுவீர்கள். கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். பிரிந்தவர்கள் கூடுவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதர வழியிலும்,நண்பர்கள், உறவினர்கள் மூலமும் அனுகூலம் உண்டு.
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வரவும். மொத்தத்தில் இந்த வருடம் 75% நற்பலன்கள் கிடைக்கும்.