தாம்பூல பிரசன்னம்
ஜோதிடப் பார்வைக்கு பல பேர் பல விதிகளில், பல முறைகளைப் பின்பற்றி பலன்கள் கூறுகிறார்கள். சாஸ்திரங்களை கொண்டே பல அற்புதமான பலன்களைத் தெள்ளத் தெளிவாக கூறலாம். இறையருளும், குரு சிந்தனை இருந்தால், அவன் அருளால் அவன் தாள் வணங்கிப் பலன்களை எடுத்துரைக்கலாம்.
“தாம்பூல பிரஸ்னம்” என்பது பலன் கேட்க வருகிறவர்கள் கொண்டு வரும் வெற்றிலைகளின் எண்ணிக்கையை மற்றும் தரும் விதிகளின் அடிப்படையில் பலன் கூறும் முறையாகும்.
இம்முறையில் பலன் கூறுவது மிகவும் எளிதாகும். “தாம்பூல பிரஸ்னம்” பார்க்கும் முறை “பிரஸ்ன மார்க்கம்” எனும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. தாம்பூல பிரஸ்னத்தில் சிறப்பு அதிகம் என்பதனால் பிரஸ்ன கேட்பவரின் கும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான குடும்ப தோஷங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இரவு, பகல் எந்த நேரமானாலும், தாம்பூல பிரஸ்னம் பார்க்கலாம்.எவ்வித கால நேர கட்டுப்பாடும் கிடையாது.தேவ பிரசன்னம் பார்க்கும் போது தாம்பூல பிரஸ்னத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
பிரஸ்னம் பார்க்க வருகிறவர்கள் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், நெய்திரம், ஊதுபத்தி, சந்தனம் ஆகியவற்றை வாங்கி வர வேண்டும். வாங்கி வரும் வெற்றிலைகள் 12க்கு மேல் இருக்க வேண்டும்.
பிரஸ்னம் பார்க்க வந்தவர் கொண்டு வந்த வெற்றிலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு வந்த தொகையை 2ஆல் பெருக்க வேண்டும். பின் பெருக்கி வந்த தொகையை 5ஆல் பெருக்க வேண்டும். பெருக்கி வந்த தொகையுடன் 1ஐ கூட்ட வேண்டும். அவ்வாறு கூட்டி வந்த தொகையை 7ஆல் வகுக்க வேண்டும்.
இவ்வாறு வகுத்துக் கண்ட ஈவு போக மீதமுள்ள வெற்றிலைகளின் எண்ணிக்கைக்கு உரிய அதிபதி கிரகங்களும் அதற்குரிய பலா பலன்களும் கீழே தரப்பட்டுள்ளன.
1 – எனில் சூரியன், இதன் பலன் துக்கம்
2 – எனில் சந்திரன், இதன் பலன் சுகம்
3 – எனில் செவ்வாய், இதன் பலன் கலகம்
4 – எனில் புதன், இதன் பலன் லாபம்
5 – எனில் குரு, இதன் பலன் பணம்
6 – எனில் சுக்கிரன், இதன் பலன் விருப்பம் நிறைவேறும்
0 – எனில் சனி, இதன் பலன் தடை, கண்டங்கள்
இப்படி மேற்கண்டவாறு கணித்து கண்ட மீதி எண்ணிக்கையாக பிரஸ்னம் பார்க்கும் சமயத்தில் ஜோதிடத்தில் எந்த இராசியில் நிற்கிறாரோ அந்த இராசியே தாம்பூல ஆருட இலக்கினமாகும்.
பிரஸ்னம் பார்க்கும் சமயத்திற்குரிய கிரக நிலைகளைப் பஞ்சாங்கத்தின் உதவியுடன் கணித்து கொண்டு அவற்றை ராசி கட்டத்தில் அடைத்துக்கொண்டால் பிரசன்னம் பார்ப்பதற்கு தாம்பூல ஆருட சக்கரம் தயார்.
அடுத்த பலன் கேட்க வந்தவர், மதியம் 12 மணிக்கு முன்பு வந்திருந்தால் வெற்றிலைகளை மேலே இருந்து கீழாக ஒவ்வொன்றாக எடுத்து ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுக்கும் 12 வெற்றிலைகளின் நிலையை கொண்டு பலன் கூறலாம்.
பலன் கேட்க வந்தவர் மதியம் 12 மணிக்குப் பிறகு வந்திருந்தால் வெற்றிலைகளை கீழிலிருந்து மேலாக ஒவ்வொன்றாக எடுத்து ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுக்கும் 12 வெற்றிலைகளின் நிலையை கொண்டு பலன் கூறலாம்.
பலன் கேட்க வந்தவர் கொண்டு வந்த வெற்றிலைகளின் எண்ணிக்கையை 24க்கு மேல் இருந்தால் வந்தவர் தங்கள் பூர்வீக இடத்தை விட்டு தற்போதைய இடம் வந்து குடியேறி இரண்டு தலைமுறைகளாகிறது எனலாம்.
எண்ணிக்கை 36க்கு மேல் இருந்தால் மூன்று தலைமுறை ஆகிறது எனலாம். வெற்றிலைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கும்போது முதல் வெற்றிலை முதல் பாவத்தையும் இரண்டாம் வெற்றிலை இரண்டாம் பாவத்தையும் இப்படியே வரிசைப்படி 12 பாவங்களையும் குறிக்கும்.
எந்த வெற்றிலை வாட்டமில்லாமல், துவாரம் இல்லாமல், கீறல் இல்லாமல், அழுகல் இல்லாமல் இருக்கிறதோ, அந்த வெற்றிலைக் குறிக்கும் பாவத்திற்கு சுப பலன்களை கூற வேண்டும்.
எந்த வெற்றிலையில் மேற்கண்ட குறைபாடுகள் உள்ளதோ அந்த வெற்றிலைக் குறிக்கும் பாவத்திற்கு அசுப பலன்களை கூற வேண்டும். எந்த வெற்றிலையில் ஏதாவது ஒரு பொருள் துடைத்தால் நீங்கும் விதமாக ஒட்டிக் கொண்டிருக்கிறதோ அந்த வெற்றிலை குறிக்கும் பாவம் சம்பந்தமான பிரச்சனை சரியாகிவிடும்.
வெற்றிலையில் கிழிசல், இருந்தால் முன்னோர் செய்த பூர்வ புண்ணிய தோஷம் உண்டு. பிரேத தோஷம், சர்ப தோஷம் உண்டு எனவும் கூறலாம்.
எந்த வெற்றிலையின் நுனி கிழிந்தோ, சிதைந்தோ காணப்படுகிறதோ அந்த வெற்றிலை குறிக்கும் பாவத்தின் காரக தன்மைகள் பாதிப்படையும். நடுவில் துவாரம் இருந்தால் பிரேத தோஷம்.
வெற்றிலையின் அடிப்பாகத்தில் பெரிய நரம்பு உள்ள பகுதியில் துவாரம் இருந்தால் கர்ப்பிணி பெண் மரணத்தால் உண்டான தோஷம்.முதல் வெற்றிலையை விட ஆறாவது வெற்றிலை பெரியதாக இருந்தால் நோய், கடன் உண்டு.
முதல் வெற்றிலையை விட எட்டாவது வெற்றிலை பெரியதாக இருந்தால் அற்ப ஆயுள். எட்டாவது வெற்றிலையை விட ஒன்பதாவது வெற்றிலை பெரியதாக இருந்தால் பாவத்தை விட புண்ணியம் அதிகம். தெய்வ அனுகூலம் உண்டு. பிரார்த்தனைகள் மூலம் பரிகாரம் கிடைக்கும் என்று பலன் உரைக்கலாம்.
தாம்பூல பிரஸ்னம் பார்க்கும் போது, தாம்பூல ஆருட சக்கரத்தை கொண்டு பலன்களைப் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
தாம்பூல ஆருடலக்கினத்திற்கு 3–6-8–12 மற்றும் நிற்கும் கிரகங்களின் காரகத்துவம் மற்றும் ஆதிபத்ய பலன்களை தற்காலத்தில் தடைபட்டுள்ளது என்று பொருள்.
ஆருட சக்கரத்தில் எந்த பாபாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று வலுவாக அமைந்துள்ளதோ, அந்த பாவம் விருத்தி அடையும். அந்த கிரகத்தின் காரகத்துவமும் விருத்தி அடையும்.
தாம்பூல ஆருட சக்கரத்தில் எந்த பாவாதிபதி நீசம் ,பகை பெற்று பலமிழந்து உள்ளதோ, அந்த பாவமும், அந்த பாவாதிபதியின் காரகத்துவமும் நசிந்து விட்டது என்று பொருள்.
எந்தப் பாவத்திற்கு அல்லது எந்த பாவாதிபதிக்கு பாதகஸ்தானம் அல்லது பாதகாதிபதி தொடர்பு ஏற்படுகிறதோ அந்த பாவமும் அந்த பாவாதிபதியின் காரணமும் பாதிப்படையும் சரள லக்னத்திற்கு பதினோராம் இடமும் ஸ்திர லக்கினத்திற்கு ஒன்பதாம் இடமும் உபய லக்னத்திற்கு ஏழாம் இடமும் பாதகஸ்தானங்கள் ஆகும்
எந்த பாவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்று நிற்கிறார்களோ அல்லது எந்த பாவத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் பார்க்கிறார்களோ அந்த பாவம் மேலும் நலியும்
எந்த பாவத்தில் சுப கிரகங்கள் நிற்கிறார்களோ அல்லது பார்க்கிறார்களோ அந்த பாவம் விருத்தி அடையும்.
குரு நின்ற பார்த்த இடங்களில் தோஷம் விலகும். தாம்பூல ஆருட லக்னத்திற்கு 1-5-7-9 இடங்களுக்கு கோச்சார குரு வரும் காலம் தோஷம் விலகும்.
பலன் கேட்க வந்தவர் கொண்டு வந்த பாக்குகளின் எண்ணிக்கையை கொண்டும் அவர் மனதில் உள்ள கேள்விகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம்.
பாக்கு கொண்டு வரவில்லை எனில் அவர் தன் குலதெய்வத்தை மறந்து விட்டார் என்று பொருள் பலன் கேட்க வந்தவர் பாக்கு வெற்றிலையைத் தவிர வேறு எந்த பொருளும் கொண்டு வரவில்லை என்று பொருள் பரிகாரங்கள் பரிதம் தராது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும் இது போல் வெற்றிலையை கேட்க வந்தவரும் சமயத்தில் உள்ள சகுனங்களை வைத்தும் பலன் கேட்க வந்தவர் ஈரத்துணி, கிழிந்த துணி, அழுக்குத் துணி அணிந்திருந்தாலும், சிவப்பு அல்லது நீலநிறை ஆடை அணிந்து இருந்தாலோ சிவப்பு மலர்களை சூடிக்கொண்டு வந்திருந்தாலோ அசுப பலன்கள் நடைபெறும்.
திருமணம் சம்பந்தமாக கேள்வி கேட்கும் சமயத்தில் எருமை, யானை இவற்றின் சத்தம் கேட்டால் திருமணம் தடைப்படும் சில சமயங்களில் பிரசன்னம் பார்ப்பதற்கு நாம் சிலர் வீட்டுக்கு செல்ல நேரிடும்.
அப்போது அழைப்புக்கு வந்த வீட்டிற்குள் ஜோதிட நுழையும்போது அந்த வீட்டில் கட்டில் நாற்காலி முதலியவற்றை மல்லாக்க புரட்டிப் போட்டிருப்பதை கண்டாலோ இதேபோல் வண்டி வாகனங்களை புரட்டி போட்டு இருப்பதை கண்டாலோ கண்டம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அச்சமயம் வீட்டில் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் அதே போல் ஜோதிடர்கள் வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாராவது பலம் கேட்க வந்தால் கேட்டு வந்த காரியத்தில் தாமதம் உண்டாகும். ஜோதிடர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது யாராவது பான் பலன் கேட்க வந்தால் கேட்டு வந்த காரியம் நிச்சயமாக நடக்கும்.