ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவம் பற்றிய குறிப்புகள் !!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பூர்வ புண்ணிய ஸ்தானம்

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்துக்கு 5 ஆம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும். அங்குள்ள கிரகம், கூட்டு கிரகங்கள் முதலியவற்றைக் கொண்டு ஜாதகருடைய மொழியறிவு, வீடு, வாகனம் இலாபம், சமூகத்தில் உள்ள அந்தஸ்து, பதவி, அதிகார பலம், புத்திரர் இலாபம் முதலியவற்றைக் கணக்கிடலாம்.கல்வி அமைப்புகூட இதில் கணக்கிட முடியும்.

பூர்வபுண்ணியாதிபதி உச்சமாவதும், நீச்சமாவதும் நல்லதல்ல. அதே போல் தனித்திருப்பதும் நல்லதல்ல. பூர்வபுண்ணியாதிபதி ஆட்சியானால் நல்லது, மற்ற 11 அதிபதிகளுடன் பரிவர்த்தனையானால் நல்லது. குரு தனித்திருந்தாலும் வர்கோத்தமானமானாலும் நல்லது.

பதவி

மேஷம் லக்னத்துக்குப் பூர்வபுண்ணியாதிபதி சூரியன். லக்னத்தில் சூரியன் உச்சமாகி, லக்கினாதிபதி செவ்வாய் சிம்மத்தில் (சூரியன் வீட்டில்) இருப்பது பரிவர்த்தனை. இந்த அமைப்பு உள்ளவர்கள் கலெக்டர், அனல் மின்நிலையம் மற்றும் க்வாசி கவர்ன்மெண்ட், கார்ப்பரேஷன். வாரியச் சேர்மன்களாக இருப்பர். வர்கோத்தமமானால் பெரும்பதவி உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி கேதுவுடன் அல்லது குரு+கேதுவுடன் இணைந்தால், முடியலங்கார நாவிதர் ஆவார்.

புத்திர சோகம்

5 ஆம் அதிபதி நீச்சமானால் புத்திர சோகம் உண்டு. உச்சமானால் மனநிலை பாதிக்கும்.ஆட்சியுற்றால் இராஜயோகத்துடன் இருப்பார். அதேபோல் லக்கினத்துக்கு 5 இல் கிரகம் நீச்சமானாலும் புத்திர இழப்பு உண்டு. லக்னத்துக்கு 5 இல் கிரகம் நீச்சமாவது ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு. மீனம் ஆகிய லக்னங்களுக்கே உண்டு.

மேஷம்,சிம்மம், துலாம், மகரம், கும்ப லக்னங்களுக்கு 5இல் எந்தக் கிரகமும் நீச்சமாகாது. இதனால் இவரகள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

ரிஷப லக்னம் 11 இலும், விருச்சிக லக்னக்காரருக்கு 5 இலும் புதன் நீச்சமாவதால், ரிஷப லக்னக்காரர் குழந்தை மூச்சிறைச்சலில் உயிர் பிரியும். விருச்சிக லக்னக்காரருக்குப் புதன் தெசை- புதன் புக்தி காலங்களில் மகன்-மகள் பிரிவு நேரும்.

எல்லாக் கிரகங்களும் 5 ஆம் அதிபதிகளும் 5 ஆம் வீட்டில் ஆட்சி பெறுவதால் புத்திரதோஷம் பெறும். மேஷ லக்னத்துக்கு 5 ஆம் அதிபதி சூரியன். ரிஷபம், கும்ப லக்னங்களுக்குப் புதன். கடகம்- தனுசு லக்னங்களுக்குச் செவ்வாய். சிம்மம் – விருச்சிக லக்னங்களுக்குக் குரு. கன்னி-துலாம் லக்னங்களுக்குச் செவ்வாய். சிம்மம் – விருச்சிக லக்னங்களுக்குக் குரு. கன்னி – துலாம் லக்னங்களுக்கு சனி, மிதுனம் – மகரம் லக்கினங்களுக்குச் சுக்கிரன் ஆகியவை. அந்தந்த வீடுகளில் தனித்து ஆட்சியாய் இருப்பது நல்லதல்ல. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைவதால் நலமுண்டாகும்.

குடும்பம்

ஐந்தாம் அதிபதி 4 இல் இருந்தால் தாயாருடன் வசிப்பார். 6, 8, 12 இல் இருந்தால் பிறரால் கௌரவப் பழுது அடைவார். 10, 11 ஆம் வீடுகளில் 5 ஆம் அதிபதி இருப்பது நல்லது. 2, 3, 9 ஆம் வீடுகளில் இருப்பது சுமாரான பலனாகும். 5 ஆம் அதிபதி 7 இல் இருந்தால் கணவர்/மனைவி தருமசிந்தனை உள்ளவராய் கற்பு நிறை உள்ளவராய் இருப்பார். 5 ஆம் அதிபதியுடன் லக்னம் 2, 3, 4 அதிபதிகள் 9 ஆம் அதிபதியும் ஒன்றாகவோ தனித்தோ சேர கூட்டுக்குடும்பம் அமையும்.

மொழிப் புலமை

மேஷ லக்னக்காரருக்குத் தெலுங்கு மொழிப் புலமை உண்டாகும்.

ரிஷப லக்னக்காரருக்குத் தமிழ் மொழிப் புலமை உண்டாகும்.

மிதுன லக்னக்காரருக்கு சமஸ்கிருதம் மொழிப் புலமை உண்டாகும்.

கடக லக்னக்காரருக்குத் துளு மொழி புலமை உண்டாகும்.

சிம்ம லக்னக்காரருக்கு மலையாளம் மொழிப் புலமை உண்டாகும்.

கன்னி லக்னக்காரருக்குக் கன்னடம் மொழிப் புலமை உண்டாகும்.

துலா லக்னக்காரருக்கு மராட்டிய மொழிப் புலமை உண்டாகும்.

விருச்சிக லக்னக்காரருக்கு ராஜஸ்தானி மொழிப் புலமை உண்டாகும்.

தனுசு, மகர லக்னக்காரருக்குப் பஞ்சாபி மொழிப் புலமை உண்டாகும்.

கும்பம், மீன லக்னக்காரருக்கு ஆங்கிலம் மொழிப்புலமை உண்டாகும்.

5 ஆம் அதிபதி நீச்சம்

புத்திரகாரகன் என்னும் குரு எந்த லக்னத்தில் இருந்தாலும் பணிவுமிக்க புத்திரர்களை பெரும் பாக்கியத்தை அந்த ஜாதகர் பெறுகிறார்.

மேஷ லக்னத்துக்கு 5 ஆம் அதிபதி சூரியன் நீச்சமாவதால் பெற்ற மகனே கோர்ட்டில் வழக்கு தொடர்வான்.

ரிஷப லக்னத்துக்குப் புதன் மீனத்தில் நீச்சமானால் குடும்பப் பிரச்சினை உண்டு.

மிதுன லக்னத்துக்கு 5 ஆம் அதிபதி கன்னியில் நீச்சமானால் வாகனத்தால் செலவு உண்டு.

கடக லக்னத்துக்கு 5 ஆம் அதிபதி செவ்வாய் கடகத்தில் நீச்சமானால் பூமி இழப்பு உண்டு.

பொதுவாக, 5ஆம் அதிபதி நீச்சமானால் தாழ்வு மனப்பான்மை, தன்னிரக்கம் உண்டாகும்.

மகரம் லக்னத்துக்கு 5 இல் குரு நீச்சமானாலும், சனி 8 இல் நீச்சமானாலும் உயரமான இடத்தில் இருந்து விழுந்து இறப்பார்.

துலா லக்னத்துக்கும் அதுவே. மகர லக்னத்துக்கு சுக்கிரன் நீச்சமானால் பெண்- பையனால் தொழில் நட்டம் உண்டு.

மீன லக்னத்துக்குச் செவ்வாய் நீச்சமானால் 26 வயதில் மகனை இழந்து புத்திர சோகம் உண்டு.

5ம் அதிபதியும் கல்வியும்

மேஷ லக்னத்துக்கு ஐந்தாம் அதிபதி சூரியனாவதால் வெடி மருந்துகள், கேட்டரிங், கோவில், புரோகிதம், நெருப்பு எஞ்சின், இரயில்வே, அனல்மின் நிலையம் போன்ற நெருப்பின் ஆதிக்கமுள்ள தொழில் அமையும். கல்வி அமையும். சூரியன் மாவட்ட ஆட்சியர், செகரட்ரேடியட் பணி முதலியன தரும்.

ஐந்தாம் அதிபதி சந்திரனானால் கப்பல் போக்குவரத்து, ஏ.சி. மெக்கானிக், குடிநீர் வடிகால் வாரியம், உள்துறை செயலர் போன்ற நீர்மத்தொழில், அமிலம் போன்ற தொழில் கல்வி அமையும். கணினி தொழில் அமையும்.

ஐந்தாம் அதிபதி செவ்வாயானால் மின்னியல், இரசாயனம், மருத்துவம் (எலக்ட்ரிக்கல் கெமிக்கல் மெடிக்கல்) துறை நலம் தரும், தீவில் வசிக்க நேரும். குங்குமம் சிவந்த காய்கறிகள் மூலம் நலமுண்டாகும். பயிர்த்தொழில் கல்வி அமையும்.

மேற்கண்ட சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூவருமே 5 ஆம் அதிபதியாகவும் 10 ஆம் அதிபதியாகவும் அல்லது லக்னாதிபதியாகவும் இருந்தாலே மேற்சொன்ன பலன்களே கல்வி அமைப்பே உண்டாகும்.

நெருப்புக்கு அக்ரிணி என்று வடமொழியில் பெயர், அது தமிழ் மொழியில் அக்கினி என்றானது. அதுவே ஆங்கிலத்தில் அக்ரிக்கல்சர் ஆனது. கடலுக்கு வீங்கு நீர், ஓதம், ஓதாரண்யம் (நீர்க்காடு என்று வடமொழி பெயர். ஔதாரம் நீர் அதனை உள்ளடக்கியதே உத்ரனியானது. நாவாய் என்றால் படகு கப்பல் என்று பொருள், அதுவே ஆங்கிலத்தில் நேவி என்றானது.

லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, தொழில் அதிபதி புதன் என்றால் கணக்கியல். புதன் ஆட்சியானால் முதுநிலை (கணிதம்), உச்சமானால் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். நீச்சமானால் ஆடிட்டர் போன்ற தொழில் கல்வி அமையும். பசு பாக்கியம், பேப்பர். முத்தெடுப்பு, மெரீன், சிமெண்ட் போன்ற துறை கல்வியாய் கல்வி அமையும்.இதில் கல்வி அதிகாரி போன்றவர்கள் வருவர்.

லக்ன பூர்வபுண்ய தொழில் ஸ்தானாதிபதி குருவானால் பேராசிரியர், பொன் உருக்குதல் வெளியறவுத்துறை, கல்வி விரிவுரையாளர், நூலக அறிவியல் முதலிய துறைக்கல்வி அமையும்.

செவ்வாய் +குரு சேரின் சுரங்கம் (மைனிங்), புவியியல் அறிஞராவார்.

செவ்வாய் உச்சமானால் நிலம் விற்பனை அதிகரிக்கும்.

செவ்வாய் நீச்சமானால் நட்டமுண்டாகும்.

குரு உச்சமானால் தங்கம் விலை எகிரும். குரு நீச்சமானால் குறையும்.

குரு + செவ்வாய் ஒரே வீட்டில் நீச்சமானால் (கடகம் அல்லது, மகரத்தில் பூகம்பம் உண்டாகி வீடு பொருள் சேதம் விளையும். குரு உச்சமாகி சனியால் பார்க்கப்பட்டால் பணிமனை தொடர்பான கல்வி அமையும்.

சனி உச்சமாகி லக்கின பூர்வபுண்ய தொழில் அதிபதியானால் முதுநிலை இஞ்சினீரிங், முதுநிலை டெக்னாலஜி (எம்ஈ, எம்டெகி) படிப்பு வரும்.

செவ்வாய்+ இராரு சேரின் சினிமா டைரக்டர் ஆவார். இராகு-கேது 5 இல் இருப்பது சுமாரான பலன்தரும்.

5 ஆம் அதிபதி 3 இல் மறைந்து சூரியன், சந்திரன் இணைந்து லக்னத்துக்கு 6, 8, 12 இல் மறைந்தால் குழந்தை சிற்றப்பா, மாமா வீட்டில் வளரும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் சூரியன்+புதன் சேர்ந்தே இருக்கும். அப்படிப்பட்ட ஜாதகம் குரு பார்வையற்று இருந்தால் இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் படிக்கவல்லது.

சூரியன் சுக்கிரன் + புதன் இருந்தால் தடைபட்ட பட்டப் படிப்பு உண்டு.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரருக்கு செவ்வாய் உச்சமானால் ஜியாலஜி படிப்பு அமையும். புதன் லக்கினத்துக்கு 10 இல் தனித்து இருந்தால் கணக்கு ஆசிரியர் படிப்பு அமையும். புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஆடிட்டர் ஆவார்.

கேது பத்தில் இருந்தால் மருத்துவப் படிப்பு. கேது + புதன் இணைந்து உச்சம், நீச்சமானால் பல் மருத்துவர். லக்கினத்துக்கு 4 ஆம் அதிபதியுடன் கேது சேர்ந்தால் கண் மருத்துவப் படிப்பு. 3 இல் இருந்தால் காது, முக்கு, தொண்டை சிறப்பு மருத்துவப் படிப்பு: 8 இல் தொழில் அதிபதியுடன் கேது இருந்தால் மகப்பேறு (பிரசவம்) மருத்துவப் படிப்பு.

சனி + சந்திரன் வீடுகளில் தனித்தனியே இருந்தால் யோகா ஆசிரியர் படிப்பு. ஹோமியோபதி டாக்டர். சுக்கிரன், கேது சேர்ந்தால் மூலிகை மருத்துவர். சனி + புதன் பார்வை (ஏழாம் பார்வை) சிவில் இன்ஜினியர். கணித ஆசிரியர்,

புதன், சுக்கிரன், செவ்வாய் உள்ளவர் நீதியியல் படிப்பார்.

செவ்வாய்+சனி இணையின் சித்த மருத்துவர்.

இராசிக் கட்டங்களில் சூரியன் + புதன் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தால் அதாவது சூரியன் பின்னும் புதன் முன்னும் (உ.ம்) மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் புதன் இலக்கிய படிப்பு அமையும். இவர்கள் ஆங்கிலம், தமிழ் போன்ற துறையில் அவரவர் தாய் மொழியில் புலமைப் பெற்றிருப்பர். பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக மொழியியல் துறை தலைவராய் இருப்பர்.

சூரியன் + புதன் + சுக்கிரன் இருந்தால் விலங்கியல் (சுவாலஜி) படிப்பும், சூரியன் + புதன் + கேது இருந்தால் உயிரியல் (பையாலஜி) படிப்பும் அமையும். சூரியன் + இராகு + புதன் தாவரவியல் (பாட்டனி) படிப்பு தரும். புதன் + கேது சேரின் மின்விளக்குகள் ஆய்வகத் துறை உதவியாளர் ஆவார். சந்திரன் மீனம், கடகம், விருச்சிகத்தில் இருந்தால் பொருளாதாரம் (எக்னாமிக்ஸ்) படிப்பு வரும். சுக்கிரன் + சூரியன் + புதன் மிதுனத்தில் இருந்தால் எனர்ஜி ஆடிட்டர் ஆவார்.

ரிஷப லக்னக்காரர்கள் எம்.பி.ஏ. படித்தாலும் சிவில் சர்வீஸ் எழுதினாலும் நலமுறும். ரிஷபம், தனுசு, கும்ப இராசிக்காரர்கள் கடக லக்னமாயிருந்தால் எம்.பி.ஏ. (சந்தையியல்) படிப்பார். மேற்சொன்ன மூன்று லக்னக்காரர்கள் மிதுன இராசிக்காரராய் இருந்தால் எம்.பி.ஏ. (பைனான்ஸ்) படிப்பார்.

துலா இராசிக்காரர்கள் எம்.பி.ஏ. (மனிதவள மேம்பாட்டுத்துறை) படிப்பார். கேது சுக்கிரன் இருந்தால் மருத்துவர். தாவரவியல் வல்லுநர்,

அனுஷம், பூசம் நட்சத்திரக்காரர் புள்ளியியல், கணக்கியல் ஆய்வு செய்வார்.

திருவோணம், சதயம், மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர் இயற்பியல் படிப்பார்.

Leave a Comment

error: Content is protected !!