சனி பெயர்ச்சி பலன்கள் 2025 -மீனராசி
(பூரட்டாதி 4ம் பாதம் ,உத்திரட்டாதி ,ரேவதி)
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மீன ராசி
இதன் அதிபதி: குரு
உருவம்:இரட்டை மீன்
வகை:உபய ராசி
நிறம்:வெள்ளை நிறம்
கடவுள்:அன்ன வாகன தேவி
குறிப்பு : புதன் நீசம் ,சுக்ரன் உச்சம்.
மீன ராசியும் சனியும்
சனி பகவான் மீன ராசியின் 11 மற்றும் 12-ஆம் அதிபதி ஆவார். அவர் இவ்வளவு நாளும், மீன ராசியின் விரய வீட்டில் அமர்ந்திருந்தார். இப்போது மீன ராசிக்கே மாறி ஜென்மச் சனியாக அமர்கிறார்.
சனி இருக்கும் இடத்தின் பலன்கள்
மீன ராசியிலேயே சனி அமர்கிறார். ராசி எனும்போது, அது முழுக்க, முழுக்க, ஜாதகரை பற்றி மட்டுமே எடுத்துரைக்கும். அவரின் தோற்றம், எண்ணங்கள், லட்சியம், அழகு, நிறம் குணம் இவை பற்றியே கூறும் அந்த இடத்திற்கு சனி வந்து அமர்கிறார்.
2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை
இக்காலத்தில், மீன ராசியில், சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வார். இந்த சனிப்பெயர்ச்சி ஆரம்பித்த வுடன் உங்கள் தொழிலை மாற்றிவிடுவீர்கள். அரசியலில் உள்ளோர், உடனடியாக வேறு கட்சிக்குத் தாவிவிடுவர். வேறு ஓட்டலில் சமையல் கலைஞராக இடம் பெயர்வீர்கள். பதவி உயர்வுடன், மாறுதல் உண்டு. உங்கள் மாமியார் இடப்பெயர்ச்சி பெறுவார்.
சிலர் வெளிநாட்டு வர்த்தகம் ஆரம்பித்து விடுவீர்கள். தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஆகலாம். கட்சி மாறிய அரசியல்வாதிகள் பெரிய கௌரவம் பெறுவர். தொழில் முதலீடு பெருகும். உங்கள் மூத்த சகோதரன், வெளிநாடு செல்வார். மறுமணம், இடம் மாறுதல் தரும். பலர் தொழிலில் வரும் லாபத்தை, முதலீடு செய்துவிடுவீர்கள். கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், வெளிநாடு சென்று, அதிக பணப் பெருக்கம் பெறுவர்.சனி தொழில், லாப பெருக்கத்தை யும், அதிக முதலீடு செய்யும் திறமையையும் கொடுப்பார்.
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை
இக்கால நேரத்தில், சனிபகவான்உத்திரட்டாதி நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வார். இந்தக் காலகட்டத்தில், மீன ராசியினர் தங்களது லட்சியம் நிறை வேற வெகு பாடுபட்டு, நிறைவேற்றியும் விடுவர் தொழில் லாபம் அதிகரிக்க, உள்நாடு மட்டுமல்ல வெளிநாடும் அலைந்து திரிவர் இதில் சிலருக்கு, உங்களோடு முத்த சகோதரனும் இணைந்து கொள்வார் அரசியல்வாதிகள் ஓரிடத்தில் உட்கார முடியாது எப்போதும் அலைந்து கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலை அமையும் அத்தனையும் உங்கள் அரசியல் தொழில் சார்ந்ததாக இருக்கும்.
நிறைய சமையல் செய்து வீணடிக்கும் நிலை உண்டு நீங்கள் தலைவராக இருக்கும் இடங்களில் அதிக செலவு செய்து பார்ட்டிகள் கொடுப்பீர்கள். நிறைய மனிதர்களின் பழக்கம் கிடைப்பதால், அதனளவு கௌரவமும், அதைவிட அதிகளவு செலவும் உண்டு உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் சற்று கவனமாக இருக்கவும். சனி மீள ராசியின் ஜென்மத்தில், சுய சாரம் பெற்று செல்லும்போது, கௌரவம், லாபம், செலவு அனைத்தையும் அதிகரிக்கிறார்.
2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை
இப்போதுகளில், சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வார் பழைய வீட்டை, வாங்கி, புதுப்பிக்க செலவு செய்வீர்கள் பழைய வாகனம் வாங்கி, அதனை புதுசுபோல மாற்றுவீர்கள் பழைய வியாபார கூட்டாளி, மறுபடியும் உங்களுடன் வந்து சேர்ந்துகொள்வார். அரசியல்வாதிகளில் சிலர் தங்களது தாய் கட்சிக்கு திரும்புவார். ஆசிரியர்கள், சற்று பதவி உயர்வு பெற்று வேறிடம் செல்வர் வீட்டில் கிணறை விட்டுவிட்டு, புது போர் வெல் தோண்டுவீர்கள்.
முன்பு நிராகரித்த வரனை, மீண்டும் திருமணத்திற்கு முடிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணையின் தொழிலில் மாறுதலும், முன்னேற்ற மும் செய்வீர்கள் கல்வி பிரிவை மாற்றக் கூடும். உங்களில் சிலர் வெளிநாட்டிலிருந்து, தாய் நாட்டுக்கு திரும்பிவிடுவீர்கள்சிலர் உங்கள் தொழிலை, வேறிடத்திற்கு மாற்றிவிடுவீர்கள் தொழில், வியாபாரம் இவை சொந்த, பிறந்த ஊருக்கு மாற்றம் செய்ய முற்படுவீர்கள்.
மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
சனியின் ஆதிக்கம் உங்களுக்கு அதிகமாக தென்படும். உறவு நிலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நெருக்கமான உறவுகள் பிரிவின் காரணமாக விலகி செல்வதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்! அதனால் சமாதான போக்கை கடைபிடித்து விடுவது நன்மையை தருவதாக இருக்கும்
உடல் நிலையில் சின்ன சின்ன பாதிப்புகள் உருவாகும்
நிதி நிலைமை சீராக இருக்காது. ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் வராது என்று சொல்லலாம்
எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி, நிதி உதவி, கடன் உதவி கிடைப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அதனால் கடனை எதிர்பார்த்து தொழில் மற்றும் செலவுகளை திட்டமிட வேண்டாம்.
மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயத்தில் சோம்பல் அதிகமாகும். மற்றபடி பாதிப்பு எதுவும் இருக்காது
உயர்கல்வி முயற்சிகளின் கூடுதலான சிரமங்கள் இருக்கும். மற்றபடி தடைகள் இருக்காது. சரியான தகவல் கிடைக்காமல் தடுமாறும் நிலை உருவாகும்.
வெளியூர் பயணங்கள் பலன் தரும். ஆனால் அலைச்சல் அதிகம் கொடுத்த பிறகுதான் பலன் கைக்கு கிடைக்கும்.
கணவன் மனைவி உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நம்பிக்கை தன்மை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடங்களில் இருந்து புதிய சிக்கல்கள் உறவுகளில் உருவாகும்.
திருமண முயற்சிகளில் தடை எதுவும் இருக்காது. ஆகவே மனம் கலக்கம் அடையாமல் தைரியமாக முயற்சி செய்யலாம். திருமணத்தை சனி நடத்திக் கொடுப்பார் என்று நிச்சயம் சொல்லலாம்.
வியாபாரிகள் மந்தமான சூழ்நிலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மற்றபடி லாபத்தில் பாதிப்பு இருக்காது. லாபம் குறையலாம், ஆனால் பாதிப்பு எதுவும் இருக்காது என்று சொல்ல முடியும். சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும், அல்லது இடமாற்றத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அது சங்கடமான சூழ்நிலை தரும் இடமாற்றமாகவே இருக்கும். தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம். வந்தால் ஏற்றுக் கொண்டு சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
மிகுந்த சோதனையான காலகட்டம் என்று நிச்சயம் சொல்ல முடியும். அளவு கடந்த பயத்தினை சனி உருவாக்குவார். இதுவரை வெற்றி கொடி மட்டுமே ஏற்றி வந்த சாதனையாளர்களையும் தோல்வி தழுவி கொள்ளும் காலம். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு மிகவும் நஷ்டமான காலம். கைப்பொருள் தொலைந்து போகும். முதலுக்கு மோசம் வரும் காலம் என்று சொல்ல வேண்டும். உற்பத்தி போன்ற வியாபாரம் செய்பவர்கள் அதிக இழப்பை சந்திப்பார்கள்.
உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் உடல் நிலம் பின்னடைவு ஏற்படுவதற்கு காரணம் இருக்கிறது. முன்கூட்டியே மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. மாணவர்கள் கடுமையான முயற்சிக்குப் பிறகே வெற்றி அடைய இயலும். கடன் தொல்லை அதிகமாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி கிடைக்காது.
இத்தனை சோதனையான காலகட்டமாக இருந்தாலும் மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய அளவில் நட்புகளின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அனுகூலம் என்று சொல்ல வேண்டும்.
யார் ஆதாயமான நண்பர் யார் சரியான ஆலோசனை சொல்லக்கூடிய நண்பர் என்பதை முன்கூட்டியே ஆலோசித்து அவர்களுடன் நல்ல உறவு நிலைகளை கடைபிடியுங்கள். அதுதான் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு துணையாக இருக்கும்
வாடிக்கையாக பங்கு சந்தை போன்ற வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் கவனமாக இருந்து விடுங்கள். பிறரின் பொருளை வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்யும் வியாபாரத்தில் இருக்கும் ஏஜென்ட் போன்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் .பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டி இருக்கும். வியாபாரத்தில் இதுவரை நீங்கள் கட்டிக் காத்து வந்த நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் காலமாக இருக்கிறது.
கணவன் மனைவி உறவு சஞ்சலம் கொண்டதாக இருக்கும். பெரிய அளவில் பிரிவுகள் எதுவும் ஏற்படாது என்றாலும் வாய் சண்டை முற்றி அதிக அளவு சங்கடங்களை உருவாக்கும். பிள்ளைகளுடன் மனஸ்தாபம் உருவாகும். புதிய கடன் வாங்குவதை தவிர்க்கவும். சொத்து விற்பனை போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது
மனவலிமையை மிகவும் சோதிக்கும் அளவுக்கு தொடர் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
நெருங்கிய உறவினை பிரியும் சூழல் உருவாகும். நண்பர்கள் விலகிச் செல்வார்கள். உறவினர்கள் விலகிச் செல்வார்கள். கணவன் மனைவி உறவில் விரிசல் அதிகமாகும். உங்கள் எதிர்பார்ப்பை உங்கள் வாழ்க்கை துணை நிறைவேற்றாத தன்மையை சனி அதிகமாகி தருவார். ஆகவே கவலைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் குறித்த அவர்கள் எதிர்காலம் குறித்த சோதனையான காலம் போல சங்கடங்கள் உருவாகி மறையும். ஆனால் அந்த சங்கடங்கள் பெரிதாகாது என்றாலும் தொடர்ந்து தொடர்ந்து வந்து மனதை குழப்பம் அடையச் செய்யும்
சோதனையான சனி பெயர்ச்சி காலத்திலும் சனி அனுகூலமான சோதனையையும் முன் வைப்பார்; அளவுக்கு மீறிய சக்திக்கு மீதிய பொறுப்புகளை தலை மீது கொண்டு வந்து வைப்பார் தவிர்க்கவும் முடியாது ஏற்கவும் முடியாது என்று இருதலைக்கொல்லி எறும்பு போல தவிக்க வைப்பார். ஆனால் தைரியமாக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் சனி உங்களிடம் எதிர்பார்க்கும் பக்குவம்.
பெரிய பதவியில் இருப்பவர்கள் குடும்பத்தைப் பிரிந்து தூர தேசங்களுக்கு பயணமாக வேண்டிய கட்டாயம் உருவாகும். இந்தப் பயணம் நன்மையானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பிரிவு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களுக்கு அனுகூலமான காலம் என்று சொல்ல வேண்டும். முன்னேற்ற படிக்கட்டுகளில் சனி உங்களை ஏற்றி உட்கார வைத்திருப்பார். பொறுமையுடன் முயற்சி செய்து வெற்றி என்று சொல்லக் கூடிய அளவில் உங்கள் முன்னேற்றம் இருக்கும் .
ஏழரை சனி காலமாக இருந்தாலும் ஜென்ம சனி என்றாலும் நடத்திக் கொடுக்கும் சாதகமான நிலையைதான் திருமண விஷயத்தில் சனி உருவாக்கி தருகிறார். திருமண தடை அவசியம் விலகி நல்லபடி திருமணம் நடக்கும்
உடல் நிலையில் இருந்து வந்த பயமான சூழ்நிலை விலகி விடும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்
கடன் வாங்காதீர்கள், கடன் கொடுக்காதீர்கள், ஏற்கனவே கொடுத்த கடனும் வசூல் ஆகாமல் இழுத்தடிக்கும் நிலை தான் இருக்கும். ஆகவே அதனை எதிர்பார்த்து எந்த முடிவும் எடுக்காதீர்கள். ரேவதி நட்சத்திர அன்பர்களுக்கு கடனால் அதாவது கொடுத்த கடனால் வாங்கிய கடனால் அவமானங்களை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கும் எச்சரிக்கையாக இருங்கள்
சனி பார்வை பலன்
சனி பகவானுக்கு 3, 7, 10 எனும் விசேஷ பார்வை பலனுண்டு மீன ராசியில் அமர்ந்துள்ள சனி மீன ராசியின் 3, 7, 10-ஆமிடங்களைப் பார்க்க இயலும்.
சனியின் 3-ஆம் பார்வை பலன்
மீன ராசியின் 3-ஆமிடத்தை சனி பார்ப்பார். 3-ஆமிடம் என்பது தைரிய, வீர்ய ஸ்தானம் இந்த சனிப்பெயர்ச்சி ஆனவுடன், கொஞ்சம் தைரியக் குறைவை உணர்வீர்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டீர்கள். உதார் விட்டு சமாளித்து விடுவீர்கள். இளைய சகோதரியுடன் மன பேதம் தோன்றும். சினிமா கலைஞர்களின் ஒப்பந்தம் ரத்தாகும்.
சினிமா தியேட்டர் குத்தகை கை மாறும். கைபேசி தவறும். அல்லது கைபேசி தகவல்கள் உங்களை நஷ்டப்படுத்தும். எப்போதோ போட்ட ஜாமீன் கையெழுத்து, இப்போது வந்து மிரட்டும். பத்திரிகையில் உங்களை பற்றிய வதந்தி பரவும். ஞாபக மறதி வந்து பாடாய்ப்படுத்தும், வீடு விற்கும் விஷயம் சற்று எரிச்சல் தரும். சிறு தூரப் பயணம் கடுப்பாகும். பக்கத்து வீட்டுக்காரர்கள் பலமாக சண்டையிடுவர். இளம் பெண்கள் விஷயம் தகராறு தரும். காது பிரச்சினை தரும். கம்மல் காணாமல் போய்விடும்.
சனியின் 7-ஆம் பார்வை பலன்
சனி தனது 7-ஆம் பார்வையால், மீன ராசியின் 7-ஆம் வீட்டை ஏக்கமாகப் பார்க்கிறார். எப்போதும் சனி, ஏழாம் வீட்டைப் பார்த்தால், திருமணம் தாமதப்படும் என்பது விதி. ஆனால் இந்த சனிப் பெயர்ச்சியில், சனி காதல் திருமணங்களை நடத்திக் கொடுப்பார். இந்த காதல் திருமணம் நடந்தவுடன், இந்த தம்பதிகளுடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள். பிறமனிதர்களின் தொடர்பை, சனி கட் பண்ணி விடுவார். ஏற்கெனவே திருமணமான தம்பதி களுக்கு, சண்டை வரும் அது அரசு வேலை சம்பந்தமாக இருக்கும்.
வணிக பங்குதாரர் டாட்டா காட்டிவிட்டுப் போய் விடுவார். உங்கள் இரு சக்கர வாகனத்தை, யாரோ எடுத்துக்கொண்டு போய்விடுவர். அரசு சம்பந்த வரி, கட்டண விஷயம் இம்சை தரும். திருமண விஷயத்தில், உங்கள் வாரிசும் நீங்களும் மன வேற்றுமை கொள்வீர்கள். குடும்பத்தில், பண விஷயமாக இன்னல் வரும். மனை சம்பந்த வழக்கில், உங்கள் தந்தை யோடு பிணக்கு ஏற்படும். உங்களின் சில காதல் விஷயங்களால், உங்கள் பெற்றோருக் கும், உங்களுக்கும் பெரிய கருத்து வேறுபாடு வரும். உங்களில் சிலர் வீட்டைவிட்டு வெளியேறக்கூடும்.
சனியின் 10-ஆம் பார்வை பலன்
சனி தனது 10-ஆம் பார்வைமூலம், மீன ராசியின் 10-ஆம் வீட்டைப் பார்க்கிறார். 10-ஆம் வீடு என்பது தொழில் ஸ்தானம். சனி என்பவர் தொழில் காரகர். எனவே ஒரு காரக கிரகம், தனது காரக ஸ்தானத்தை நாசம் செய்யாது. எனவே சனி பார்த்தாலும் தொழில் என்னமோ நடந்து கொண்டுதான் இருக்கும். என்ன ஒன்று, தொழிலில் முன்பிருந்த வேகம் இப்போது இருக்காது. சுணக்கம் ஏற்படும். அது உங்கள் தொழில்மீது விசப்பட்ட களங்க மாக இருக்கும் அல்லது அரசாங்கத்தாரால் போடப்பட்ட வழக்கு சம்பந்தமானதாக அமையும்.
ஒரு இளம் பெண்மூலம், உங்கள் தொழில் நசிவு பெற வாய்ப்புண்டு. சிலரின் தந்தை வாங்கியிருந்த கடன், உங்கள் தொழில் வேலையைப் பாதிக்கும். சில சினிமா கலைஞர் கள் கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் ஊரைவிட்டு விலகிவிடுவர். நிறைய மீன ராசியினர், மிகப்பெரிய கௌரவப் பாதிப்பை பெறுவர். அரசு அதிகாரிகள், கோவில் வேலை செய்வோர், தர்ம ஸ்தாபனம் நடத்து வோர், நீதித்துறையினர், புண்ணிய விஷயம் நடத்துவோர் என இவர்கள் ரொம்ப கவன மாக இருக்கவேண்டும்.

சனியின் மொத்த பலன்கள்
மீன ராசியில், ஜென்மச் சனியாக அமர்ந்தசனி, நிறைய மாறுதல்களை தருகிறார். அதில் சில தீமைகளையும் சில நன்மையையும், சில தருகிறார். மேலும் சனிபகவான், ஜென்மத் திலேயே, ராசியிலேயே அமர்ந்துள்ளதால், அதன் பலாபலன்களை அனுபவித்துதான் ஆகவேண்டும்.
சனி வக்ர கால பலன்கள்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் ஆகிறார். இந்த வக்ரகதி காலத்தில் நீங்கள் செய்யும் செலவும் அலையும் அலைச்சலும் ரொம்ப லாபம் தராது. உங்கள் தொழில் லாபத்துக்கும் வெகுவாக உதவாது. வக்ரம் நிவர்த்தியானவுடன், நல்ல பலன்கள் நடக்க ஆரம்பித்துவிடும்.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம் ஆகிறார். உங்கள் வாழ்க்கையின் செயல்பாட்டில் நிறைய மாற்றங்கள் செய்யும்போது, இந்நேரத்தில் அதில் தொய்வு ஏற்படும். தேக்கநிலை உண்டாகும். வக்ரம் நீங்கியவுடன் மாற்றங்கள் செயல்பாட்டில் தொடரும்.
வக்ரசனி காலத்தில் திருவாரூர் திருக்குவளை கோளிலிநாதர் வழிபாடும், ஆஞ்சனேயர் வழிபாடும் சிறப்பு.
பரிகாரங்கள்
சேந்தமங்களம் சனிபகவானை வழிபடவும். அருகிலுள்ள சனீஸ்வரர் சந்நிதிக்கு சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபமேற்றவும். வேலூர் மாவட்டம், ஆம்பூர்- ஆஞ்சனேயரை வழிபடவும். ஐயப்பன் கோவில் செல்பவர் களுக்கு நீலம் அல்லது கருப்பு நிற வஸ்திரம் வாங்கிக்கொடுங்கள். காகத்திற்கு, எள் கலந்த அன்னம், குறிப்பாக சனிக்கிழமை வைக்கவும். ஊனமுற்ற அந்தணருக்கு அவரின் தேவை கேட்டறிந்து உதவவும்.