Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-2023:கடகம் |Sani Peyarchi Palangal 2023

சனி பெயர்ச்சி பலன்கள்-2023:கடகம் |Sani Peyarchi Palangal 2023

சனி பெயர்ச்சி பலன்கள்-2023:கடகம்(அஷ்டம சனி )

கடக ராசிக்கு இதுவரையில் 7-ஆமிடத்தில் இருந்து வந்த சனி, தற்போது அஷ்டமம் எனும் 8-ஆமிடத்திற்கு, கும்பத்திற்கு மாறுகிறார். இவர் கும்பத்தில் அவிட்டம், சதயம், பூரட்டாதி எனும் நட்சத்திரங்களின் வழியே தன் பலனை வழங்குவார், 8-ஆமிடத்திலிருந்து கடக ராசியின் 10-ஆமிடம், 2-ஆமிடம் 5-ஆமிடங்களை பார்வையிடுகிறார்.

8-ஆமிடத்தில் அமர்ந்த சனி எந்தவொரு நன்மையும் செய்யமாட்டார் என எண்ணக் கூடாது. 8-ஆமிடம் ஆயுள் ஸ்தானம். எனவே ஆயுள் சம்பந்த குற்றங்குறை வராதவாறு பாதுகாப்பார். பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் எனவே இந்த சனிப்பெயர்ச்சியில், இதுவரையில் திருமணமாகாமல், தடையான ஜாதகர்களுக்கு திருமணம் நடக்கும். எனினும் 8-ஆமிட சனி எனும்போது கிலிதான்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள்-2023

8-ஆமிடம் அவமான ஸ்தானம்.எனவே மனக் கஷ்டத்திற்கு பஞ்சமிருக்காது. தொழில் போட்டிகள் அதிகமிருக்கும். வாரிசுகளால் கௌரவ குறைச்சல் ஏற்படும் .தொழில் வளர்ச்சி தடைப்படுவதால் பண நடமாட்டம் குறையும்.

இதேபோல், உங்கள் பெயரிலுள்ள தொழிலை, வீட்டில் நல்ல ஜாதக தசாபுக்தி, கோட்சாரம் உள்ளவர்கள் பெயரில் மாற்றி விடுங்கள். குடும்பத்தில் உங்கள் தலையீட்டை குறைத்துக்கொள்ளவும் பணப்பரிவர்த்தனைகளை கவனிப்பதை குறைத்துக்கொள்ளவும். முதலில் பேச்சைக் குறையுங்கள் இந்த சனி உங்களின் தொழில், பணம், அறிவு ஸ்தான துதுைப் பார்த்து. அதனை மழுங்கடிப்பார். முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டாம். வெளிநாட்டுப் பயணங்களில் கவனம் தேவை. கலை, விளையாட்டுத்துறை, பொழுது போக்குத்துறை சார்ந்தவர்கள் மிக கவனம் தேவை யாரையும் சட்டென்று நம்ப வேண்டாம் கல்வி நீதி, சட்டம் போன்ற வேலையில் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடு இருத்தல் வேண்டும்.

சனி பெயர்ச்சி பலன்கள்-2023

சனி பகவான் பார்வை பலன்

சனி 3ம் பார்வை பலன்கள்

சனி தனது 3-ஆம் பார்வையால் கடக ராசியின் 10-ஆம் வீட்டைப் பார்த்து சுருக்குகிறார். சனியின் பார்வை குறுக்கும் வல்லமையுடையது எனவே தொழிலில் சுனக்கம் ஏற்படும்.தொழிற்சாலை வைத்திருப்போர், ஆட்குறைப்பு செய்யும் நிலை ஏற்படும். இதனால் கௌரவ பாதிப்புண்டு நெருப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள் கவனமாக இருத்தல் அவசியம். விளையாட்டுத்துறையின் வீரர்கள் அவசியமே இல்லாமல் நீக்கப்படுவார்கள். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

சனி பார்வை தொழில் ஸ்தானம் பெறும்போது, கடக ராசியார் தொழில் நடத்துவதற்கே மிக சிரமப்படுவார்கள். எனவே நீங்களாகவே உங்கள் தொழிலை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் புதுத் தொழில் தொடங்குவதோ, புது கிளைகள் ஆரம்பிப்பதையோ அறவே தவிர்த்துவிடுங்கள்.

சனி, உங்கள், தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும்போது, ஒருவித சலிப்பு, வெறுப்பு மனப்பான்மையைத் தருவார். விரக்தியும், சோம்பேறித் தனமும், தாமத குணமும் தான காகவே வந்து சேர்ந்துவிடும்.

சனி 7ம் பார்வை பலன்கள்

சனி தனது 7-ஆம் பார்வையால் கடக ராசியின் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். எப்போதுமே கடக ராசியினரின் வாக்கு ஸ்தானாதிபதி சூரியன் ஆதலால், அவர்கள் தீர்க்கமாக், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசுவர். இப்போது சனி தனது நேர் பார்வையால் உங்களின் தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனில், இந்த சனி பார்வை உங்களின் பேச்சில் ஒரு திடமின்மை, தெளிவின்மையை உண்டாக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் குடும்பத்தில் பிரிவினை ஏற்பட்டு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் இதனாலும் குடும்ப வருமானம் குறையும் உங்களையும் அறியாமல் பேச்சில் பொய்மை கூடும்.

சனியின் பார்வையைப் பெறும் 2-ஆம் வீட்டின் இடையூறுகளைத் தடுக்க முதலில் நீங்கள் பேசும்போது வெகு கவனமாக இருங்கள். தயவுசெய்து யாருக்கும் எதற்கும் வாக்கு கொடுக்காதீர்கள்.

சனி 10ம் பார்வை பலன்கள்

சனி தனது 10-ஆம் பார்வையால் கடக ராசியின் 5-ஆம் வீட்டை பார்க்கிறார்.5-ஆம் வீடு என்பது குழந்தைகள் ஸ்தானம். வாரிசு பெறும் முயற்சியில் இருப்பவர்களுக்கு அது சற்று மெதுவான முறையில் நடக்கும். இதனால் மருத்துவச் செலவு கூடும். காதல் கசப்பது மட்டுமல்ல; ரத்தக்களறி உண்டாக்கும். உங்கள் குழந்தைகளின் போக்குவரத்து, அவர்களின் நண்பர்கள் பற்றி மிக கவலை உண்டாகும்.

ஐந்தாம் இடம் சனி பார்வை வரும்போது முதலில் கடக ராசியினர் தங்கள் குழந்தைகளின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் உங்கள் உணவின் மீதும் கவனம் தேவை ஒவ்வாமை பண்டங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் காதல் வேண்டவே வேண்டாம் மது போதைப்பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது நீங்களே கட்டுப்பாட்டுடன் இருந்து உங்கள் குலதெய்வத்தை முழு நம்பிக்கையோடு வணங்கினால் சனியின் பார்வை கொஞ்சமாய் படுத்தும்.

பரிகாரம்

ஒருமுறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, தர்ப்பாரண்யேஸ்வரரை அர்ச்சனை செய்து வழிபட்டுவாருங்கள். சனிக்கிழமை தோறும் ஊனமுற்றவர்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். நவகிரகத்திலுள்ள சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கிவாருங்கள். உங்களுக்கு வரும் பார்வை உங்கள் சங்கடங்கள் தீரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!