சனிப்பெயர்ச்சி 2025
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஷக்
சனைச்சராய நமஹ”
மூல மந்திரம்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள்தாதா
சனிதோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
- சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, எள் சாதம், வடைமாலை செய்து வழிபட்டு அனைத்து ஏழைகளுக்கும் விநியோகம் செய்யலாம்.
- சனிக்கிழமை அன்று நன்கொடையாக இனிப்பு, கருப்பு எள் உருண்டைகள் கொடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து காகத்திற்கு உணவு, நீர் வைக்கலாம்.
- ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் சனி பகவானின் அருள் கிட்டும்.
- சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி சனிபகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து அதை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
- கருங்குவளை மலரால் சனி பகவானை அர்ச்சிப்பதோடு எள்சாதம் நெய்வேத்தியம் செய்வதும் நல்லது.
- சனிக்கிழமை அன்று நளன் சரித்திரம் படிக்க வேண்டும்.
- சனி ஸ்தோத்திரத்தை சனி ஜெயந்தி அன்று மட்டும் இன்றி ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவானை வணங்கும் போது சொல்லி வந்தால் சனிபகவானின் அருள் முழுமையாக கிடைக்கும்.
- சனிக்கிழமையன்று குளித்து பூஜை செய்த பிறகு பால், பழம், தண்ணீர் மட்டும் உட்கொண்டு விரதம் மேற்கொள்ள வேண்டும். மாலையில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து இரவில் எளிய உணவுடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் சனிபகவானின் அருள் கிடைத்து வாழ்க்கையில் அமைதி மற்றும் வளம் பெறலாம்.
- சனிக்கிழமை அன்று கருப்பு ஆடை, இரும்பு பொருள்கள் ,எண்ணெய் போன்றவற்றை தானமாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் சிறப்பு.
- கருப்பு நிற குடை, போர்வை மற்றும் விசிறி போன்றவற்றை வழங்கினாலும் சனிதோஷங்கள் குறையும்.

12 ராசிக்கார்களும் சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
மேஷம்
சனிக்கிழமைகளில் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று தாளிக்காத தயிர் சாதம், நல்லெண்ணெய் தானம் செய்யவும்.ஹனுமனை வழிபட்டால் நன்மைகள் விளையும்.
ரிஷபம்
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்தில் சென்று இலுப்பை எண்ணெய் தீபம் இட்டு வழிபட வேண்டும்.
மிருகசீரிடம்,ரோகிணி ஆகிய நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். குழந்தை வரம் வேண்டுவோர் சஷ்டி விரதம் இருக்கலாம்.
மிதுனம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் சக்கரத்தாழ்வார் 12 முறை பிரதட்சணம் செய்து வழிபட்டு பலன் பெறலாம். சுதர்சன அஷ்டகம் படிக்கலாம் இதனால் சகல தோஷங்களும் நீங்கும். மதுரை-திருமோகூர் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டு வந்தால் நன்மைகள் நடக்கும்.
.கடகம்
கடற்கரையோரமாக இருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. திருச்செந்தூர்,ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பூரி, திருப்புல்லாணி போன்ற இடங்களுக்கு அமாவாசை அன்று பித்ரு வழிபாடு செய்து வரலாம்.
ஒருமுறை கேரளாவில் உள்ள வர்காலவுக்கு சென்று அங்குள்ள ஜகத்நாத பெருமாளை சேவிக்கலாம். அமாவாசையில் அன்னதானம் செய்வதும், சிவாலயங்களுக்கு பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை அளிப்பதும் நன்மை தரும்.
சிம்மம்
நவகிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்ச ஹோமம் செய்வது நல்லது. காணிப்பாக்கத்தில் உள்ள கணபதி கோயிலில் நடக்கும் ஹோமத்தில் கலந்து கொள்வது நல்ல பலனைத் தரும். அருகில் உள்ள சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்டு வழிபடுங்கள். அதனால் நன்மைகள் கூடிவரும். ஒருமுறை சுருட்டபள்ளி நஞ்சுண்டேஸ்வரரை தரிசித்து வாருங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகும்.
கன்னி
அஷ்டமி திதிநாள், ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகள் இந்த நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடலாம். அமாவாசை பௌர்ணமியில் சரபேஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். இதனால் கடன் மற்றும் வியாபார பிரச்சனைகள் தீரும். அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட சிறப்பான வாழ்வு அமையும்.
துலாம்
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபடலாம். இந்த ராசியில் சார்ந்த மாணவர்கள் விநாயகர், சரஸ்வதி வழிபாடு பலன் தரும். சனிக்கிழமைகளில் விநாயகர் அகவல் படிக்கலாம்.
உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சனிக்கிழமை மற்றும் அஷ்டமியில் பைரவருக்கு விளக்கேற்றி புனகு சாத்தி வழிபட நிவர்த்தி கிடைக்கும். 6ம் இடத்தில் சனி சஷ்டம சனி… வருமானம் அதிகரித்தாலும் விரயம் உருவாகும் இதற்கு சனிக்கிழமைகளில் காக்கைக்கு உணவிட்டு நிவர்த்தி வரலாம்.
விருச்சிகம்
ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சகல தெய்வங்களையும் வணங்க வேண்டும். சிருங்கேரி சாரதாதேவி தரிசித்து வாருங்கள். துங்கபத்ர படித்துறையில் உள்ள மீன்களுக்கு பொரி இடுங்கள்.
திங்கள்கிழமை தோறும் உங்கள் அருகில் உள்ள ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வர துன்பங்கள் விலகும். கிரக தோஷங்கள் நீங்கும்.
தனுசு
இந்த ராசியைச் சார்ந்த மூல நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையில் அனுமனுக்கு நல்லெண்ணெய் அல்லது உளுந்து நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம்.
பூராடம் அன்பர்கள் சனிக்கிழமையில் சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் மதுரை சொக்கநாதரையும் திருக்கோஷ்யூர் சௌம்ய நாராயணரையும் தரிசித்து வாருங்கள் சகல நன்மைகளும் உண்டாகும்.
மகரம்
ஏழரைச் சனி விடுவதால் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வரலாம். சீர்காழி அண்ணன் பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட ,குபேர யோகம் கிட்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பத்திரகாளிக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது. ஒரு முறை குடும்பத்துடன் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று அங்கு வழிபடுவதும் சிறப்பான வாழ்வை அளிக்கும்.
கும்பம்
சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வெண்ணை காப்பு சாத்தி வழிபடலாம். விஸ்வரூப ஹனுமனை வழிபடுவதும் சனி பாதிப்புக்கான பரிகாரமாக அமையும். கும்பகோணம் அருகில் ஆனந்தமங்கலம் என்ற ஊரில் தசபுஜ அனுமனை வழிபட்டு வாருங்கள் சகல நன்மைகளும் உண்டாகும். அமாவாசை தினத்தில் குலதெய்வத்தை வணங்கி வாருங்கள் குடும்பம் செழிக்கும்.
மீனம்
ஏதேனும் ஒரு சனிக்கிழமை அன்று கரூர் ஐயர் மலைக்கு சென்று,அங்குள்ள ஈசனை தரிசித்து வாருங்கள்.
திருச்சி -வெள்ளாறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபடுங்கள். மீன ராசி மாணவர்கள் புதன்கிழமைகளில் பெருமாளுக்கும், கருடனுக்கும் விளக்கேற்றி வழிபடலாம். வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவரை வணங்கி வழிபடலாம். சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள் சகல நன்மைகளும் உண்டாகும்.