காசி விசாலாட்சி அம்மன்
வரலாறு:
காசி விசாலாட்சி அம்மன் ஆலயம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. (விசாலாட்சி என்றால் விசாலமான கண்களைக் கொண்டவள் என்று பொருள்) தன் விசாலமான கண்களால் இவ்வுலகையே அன்புடன் காத்து வருகிறாள். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
சிறப்பு:
பார்வதி அம்மன் கண் விழுந்த இடத்தில் இக்கோவில் உருவானது. ஐந்து தேவர்களையும் ஐந்து தேவிகளையும் கொண்ட ஒரே ஸ்தலம் என்பதால் இக்கோயிலுக்கு பஞ்சலிங்க ஆலயம் என்ற பெயரும் உண்டு.
விசாலாட்சி சன்னதியின் நுழைவு வாயில் மிகவும் சிறியதாகும் கடவுள் முன் மக்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள் என்பதை உணர்த்துவதற்காக இக்கோவில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வம்மனை வழிபடுவதற்கு முன் இக்கோயிலின் அருகில் அமைந்துள்ள புனித கங்கையில் நீராடிவிட்டு செல்வது வழக்கம்
பரிகாரம்:
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை இங்கு சிறப்பானதாகும்.
இன் நாட்களில் கன்னிப்பெண்கள் கங்கை நதியில் நீராடி விட்டு முறைப்படி விரதமிருந்து இக்கோயிலில் வழிபட்டால் திருமணம் கைகூடும் மற்றும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தான் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
கோயில் அமைந்துள்ள இடத்தை கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்..
Shri Vishalakshi Mata Shaktipeeth Temple, Kashi