சித்தர்களின் வரலாறு
18 சித்தர்களின் ஜீவ சமாதி கோவில்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு
1.அகத்தியர்
- குரு: சிவபெருமான்,
- காலம்: 4யுகம் 48 நாட்கள் ,
- சீடர்கள்: போகர் ,மச்சமுனி,
- சமாதி: திருவனந்தபுரம்
முக்கிய குறிப்புகள்
18 சித்தர்களில் முதன்மையானவர்.சித்தர்களின் தலைவர் ,தமிழுக்கு பல சித்த வைத்திய முறைகளை வழங்கியவர்,கடும்தவம்மியற்றி பல சித்திகளை பெற்றவர்.தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர்.போகர்,மச்சமுனி இவரின் சீடர்களாவார்கள்.திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது .
2.போகர்
- குரு: அகத்தியர்
- காலம் : 300 ஆண்டுகள்18நாட்கள்
- சீடர்கள்: கொங்கணவர்,கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர்
- சமாதி: பழனி
முக்கிய குறிப்புகள்
அகத்திய முனிவரின் சீடர் ஆவார்.சித்த வைத்திய மற்றும் ரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000,போகர் 12000,சப்த காண்டம் 7000,போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.நவ பாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுறுவச்சிலையை செய்தவர்.இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்..
3.திருமூலர்
- குரு : நந்தி
- காலம்: 3000ஆண்டுகள் 13 நாட்கள்
- சமாதி : சிதம்பரம்
முக்கிய குறிப்புகள்
63நாயன்மார்களில் ஒருவர்.மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் விதமாக 3000 பாடல்களை கொண்டு திருமந்திரம் என்ற நூலை வழங்கினார்.சிதம்பரம் நடராஜர் சன்னதியில் சமாதி அடைந்தார்.
4.வான்மீகர்
- குரு : நாரதர்
- காலம்: 700ஆண்டுகள் 32 நாட்கள்
- சமாதி: எட்டிக்குடி ,திருவையாறு
முக்கிய குறிப்புகள்
நாரத முனிவரின் சீடர், ராமாயண இதிகாசத்தை அளித்தவர். எட்டிக்குடி எனும் ஊரில் சமாதி அடைந்தார்
5.தன்வந்திரி
- காலம்: 800 ஆண்டுகள் 32 நாட்கள்
- சமாதி : வைத்தீஸ்வரன் கோவில்
முக்கிய குறிப்புகள்
இவர் திருமாலின் அம்சமாக போற்றபடுகிறார்.ஆயுர்வேத மருத்துவ முறைகளை மக்களுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவில் சமாதி அடைந்தார்.
6.இடைக்காடர்
- குரு- போகர், கருவூரார்
- காலம்- 600ஆண்டுகள் 18 நாட்கள்
- சீடர்கள்: குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
- சமாதி: திருவண்ணாமலை
முக்கிய குறிப்புகள்
இவர் இடைக்காடு என்னும் ஊரில் வவாழ்ந்தவர், இவரது பாடல்கள் உலகவியல்பிணை,நிலையாமை ,உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமைப் பொதுவாக அடிப்படை கருத்தாகஉடையனதாண்டவகோனே,கோனாரே ,பசுவே குயிலே என விளித்து பாடிய பாடல்கள் ,நாட்டுபுற பாடல் மரபினை காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார் .
7.கமல முனி
- குரு- போகர், கருவூரார்
- காலம்- 4000ஆண்டுகள் 48 நாட்கள்
- சீடர்கள்: குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
- சமாதி: ஆரூர்
முக்கிய குறிப்புகள்
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று சித்தர் கூட்டத்திக்குள் ஒருவராய் புகழ் பெற்றார் .“கமல முனி 300” என்னும் மருத்துவ நூல் ,ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாக தெரிகின்றது.
8.கருவூரார்
- குரு- போகர்,
- காலம்- 300ஆண்டுகள் 42நாட்கள்
- சீடர்கள்: இடைக்காடர்
- சமாதி: கரூர்
முக்கிய குறிப்புகள்
இவர் போகரின் சீடர் ,தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் உறுதுணையாக இருந்தார் .கருவூரார் பூசாவிதி என்னும் நூலை செய்தவர் .
9.கொங்கணர்
- குரு- போகர்,
- காலம்- 800ஆண்டுகள் 16நாட்கள்
- சீடர்கள்: 557 சீடர்கள்
- சமாதி: திருப்பதி.
முக்கிய குறிப்புகள்
இவர் போகரின் சீடர்.அத்தோடு பல மஹான்களை சந்தித்து ஞானம் அடைந்தார்.கொங்கணர் கடைக்காண்டம் ,ஞானம், குளிகை ,திரிகாண்ட என பல நூல்களை இயற்றியுள்ளார்.
10.கோரக்கர்
- குரு- தத்தாத்ரேயர், மச்ச முனி,அல்லமா பிரபு
- காலம்- 800ஆண்டுகள் 32நாட்கள்
- சீடர்கள்: நாகர்ஜுனா
- சமாதி: போயூர்
முக்கிய குறிப்புகள்
மச்ச முனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர் .அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார் .போயுர் என்ற இடத்தில் சமாதிஅடைந்தார்.
11.குதம்பை சித்தர்
- குரு- அழுகுணி சித்தர்
- காலம்- 1800ஆண்டுகள் 16 நாட்கள்
- சமாதி: மாயவரம்
முக்கிய குறிப்புகள்
இவர் பாடல்களில் குதம்பை என்ற பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடல்கள் பாடியுள்ளார் .இவரது பாடல்களில் இவர் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல்கள் சிறப்பு மிக்கவை .
12.மச்சமுனி
- குரு: அகத்தியர், பிண்ணாக்கீசர், பசுண்டர்
- காலம் :300 ஆண்டுகள் 62 நாட்கள்
- சீடர்கள்: கோரக்கர்
- சமாதி :திருப்பரங்குன்றம்
முக்கிய குறிப்புகள்
பிண்ணாக்கீசரிடம் மாணவராக இருந்து உபதேசம் பெற்றார்.ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை இயற்றியுள்ளார்.
13.பாம்பாட்டி சித்தர்
- குரு: சட்டை முனி
- காலம்: 123ஆண்டுகள்,32நாட்கள்
- சமாதி: மருதமலை,
“ஆடு பாம்பே “என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கப்படுகிறார் .பாம்பாட்டி சித்தர் பாடல்கள் ,சித்தாரூடம், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
14.பதஞ்சலி
- குரு :நந்தி
- காலம் : 5யுகம்7 நாட்கள்
- சீடர்கள்: தெரியவில்லை
- சமாதி :ராமேஸ்வரம்
முக்கிய குறிப்புகள்
இவர் ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தார் வியாக்ரபாதர் உடன் தில்லியிலிருந்து சிவதாண்டவம் கண்டார் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலைஇயற்றினார்.
15. ராமதேவர்
- குரு :புலஸ்தியர் ,கருவூரார்
- காலம்: 700 ஆண்டுகள் 6 நாட்கள்
- சீடர்கள்: சட்டை முனி, கொங்கணவர்
- சமாதி: அழகர்மலை
முக்கிய குறிப்புகள்
இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கலானர் அங்கு இவர் யாக்கோபு என்று அழைக்கப்பட்டார். தமது ஞான சக்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார் அதன்பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகருக்கு தரிசனம் அளித்தார் போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்த சட்ட நாதரை வணங்கி தாம் அறிந்த தமிழில் தமிழை நூலாக இயற்றினார்.
16.சட்டைமுனி
- குரு: போகர் காலம் 880 ஆண்டுகள் 14 நாட்கள்
- சீடர்கள்: பாம்பாட்டி சித்தர்
- சமாதி :ஸ்ரீரங்கம்
குறிப்பு :
சட்டைமுனி சிங்கள நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது போகரின் சீடரான இவர் வேதியலில் சிறந்து விளங்கினார் வேதியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார்
17.சிவவாக்கியர்
- சமாதி: கும்பகோணம்
குறிப்பு :
சிவசிவா என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என்று அழைக்கப்பட்டார் வைத்தியம் ,வாதம் ,யோகம் ஞானம் பற்றி பல பாடல் ஏற்றியுள்ளார் இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது
18.சுந்தரனார்
- குரு :சட்டை முனி ,கொங்கணவர்
- காலம்: 880 ஆண்டுகள் 14 நாட்கள்
- சமாதி: மதுரை
முக்கிய குறிப்புகள்
இவர் சட்டை முனியின் சீடர் அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர் அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார்.