சொந்தத்தில் திருமணம்
ஒவ்வொரு ஆண்களும் தங்களுக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனையுடன் திட்டமிட்டு கொண்டிருப்பார்கள். அது போல் பெண்களும் தனது கணவன் குணம், பணம், வேலை, நிறம், அழகு உள்ளவராக இருக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள்.
ஒரு மகனைப் பெற்ற தாய் தந்தையர் சிலர் தங்களது மகனின், படிப்பு, பதவி, நிறம், திறமைக்கேற்ற அழகுடையவளாக, வேலை பார்க்கும் பெண்ணாக, வீடு, வாகனம், பணம் ,நகை என அதிக வரதட்சணை தரும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று தன் மகன் அரைக் கிழவன் ஆகும்வரை பெண் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள்.
பெண்ணை பெற்ற தாய் தந்தையர் தங்கள் மகளுக்கு அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேண்டும் அவன் வீட்டிற்கு ஒரே மகனாக இருக்க வேண்டும், அதிகமான சீர்வரிசை கேட்கக்கூடாது என்ற எண்ணத்துடன் மாப்பிள்ளை தேடுவார்கள் ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அவ்வாறு அமைவது சாத்தியம் இல்லை.
பொதுவாக திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் ஆனால் ஒரு ஆண் நல்ல மனைவியோ அல்லது துரோகம் செய்யும் குணமுடையவளையோ அடைவதும், அதே போன்று ஒரு பெண் நல்ல கணவனையோ அல்லது மனைவியை மதிக்காத காப்பாற்றாத வரையோ அடைவதும், அவரவர் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் என்பதே நடைமுறை உண்மை.
- ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு 7 ஆவது ராசியில் லக்னத்திற்கு மூன்றாவது ராசிக்குரிய கிரகம் இருந்தால் அத்தைமகள் ,அத்தையின் பேத்தியை மணம் புரியக் கூடும்.
- ஏழாவது ராசியில் லக்கினத்திற்க்கு பதினொன்றாவது ராசிக்குரிய கிரகம் இருந்தாலும் அத்தை மகளை மனம் புரிவார்.
- ஏழாவது ராசியில் ஆறுக்குரிய கிரகம் இருந்தால் ஜாதகர் தாய்மாமன் மகளை திருமணம் புரிவார் சிலருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக சூழ்நிலையும் அமையும் அந்தப்பெண் ஆணவம் அகங்காரம் அடக்கியாளும் குணம் கொண்டவளாக இருப்பாள்.
- 7-ல் 10-க்குரிய கிரகம் இருந்தால் தாய் மாமன் மகளையோ தாய்வழி உறவு பெண்ணையோ மணப்பார்.
- 7-ல் ராகு இருந்தால் அந்நிய இனம் அல்லது வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை மணம் புரியக் கூடும்.
- 7-க்குரிய கிரகம் லக்னத்திற்கு 3 ,11வது ராசிகளில் இருந்தால் ஜாதகரின் தாய் தந்தையரின் குடும்ப நண்பர் மகளை மணம் புரியக் கூடும் அல்லது தனது சகோதரியின் தோழியை திருமணம் செய்யலாம்.
- லக்னத்திற்கு ஏழாவது ராசிக்குரிய கிரகம் லக்னத்திற்கு 2 ,3, 6 ,7 ,10 ,11 தனித்திருந்து அந்த ஏழாவது ராசி கிரகத்திற்கு 1,4,5, 8 ,9 ,12 ஆகிய ராசிகளுக்கு உரிய கிரகங்களின் தொடர்பு இல்லாமல் இருந்தால் உறவு பெண்ணை திருமணம் புரிவார்.
- ஏழாவது ராசியில் லக்கினத்திற்கு 2, 3, 6 ,7, 10 ,11 ஆகிய ராசிகளுக்குடைய கிரகங்கள் சேர்ந்திருந்தால் உறவு பெண்ணை திருமணம் புரிவார்.
- ஏழுக்குரிய கிரகம் லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால் போன ஜென்மத்தில் யார் மனைவியாக இருந்தாளோ அவளே இந்த ஜென்மத்திலும் மனைவியாக வருவாள் .பெண் ஜாதகத்தில் இது போன்று இருந்தால் போன ஜென்மத்தில் இருந்த கணவனை இந்த ஜென்மத்திலும் கணவனாக வருவார்.
- ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால் அந்த ஜாதகர் போன ஜென்மத்தில் யார் மனைவியாக இருந்தாளோ அவளையே இந்த பிறவியில் மனைவியாக அடைந்த வாழ்வார்.
- ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு முந்தைய ராசியில் அதாவது 12-வது ராசியில் சுக்கிரன் இருந்தால் கடந்த ஜென்ம மனைவியையே இந்த பிறவியிலும் திருமணம் புரிந்து வாழ்வார்
- ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால் அந்தப் பெண் கடந்த பிறவி கணவனையே இந்தப் பிறவியிலும் கணவனாக அடைவாள்.
- ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு முந்தைய ராசியில் செவ்வாய் இருந்தால் முற்பிறவி கணவனே இப்பிறவியிலும் அடைவாள்.பூர்வ ஜென்மத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து அவர்கள் இந்தப் பிறவியிலும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழும் அமைப்பு ஒருவித சாபத்தால் உண்டானது பூர்வ ஜென்மத்து மனைவியை சந்திக்கும் வரை அந்த ஆணின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும் அதேபோல் பூர்வ ஜென்ம கணவனை காணும் வரை பெண்ணின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும்.
- லக்னத்திற்கு 7, 11வது ராசிக்குடைய கிரகங்கள் 1 ,4 ,7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு இருதார யோகம்
- 7-ல் லக்னத்திற்கு 7 ,9 ராசிக்குரிய கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜாதகர் தன் மனைவியின் தங்கையின் திருமணம் புரிந்து கொள்வார்.
- ஆண் பெண் ஜாதகத்தில் குரு சுக்கிரன் புதன் கேது சேர்ந்திருந்தால் காதலித்து திருமணம் செய்துகொள்வார்கள்.