புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன்
சிறப்பு:
இந்த அம்மன் எட்டு கைகளை உடையவனள். தனது எட்டு கரங்களில் உடுக்கை மற்றும் சூலாயுதமும்,இடது கரத்தில் சாட்டை ,மணி, பரம், குங்கும கிண்ணம் வைத்திருக்கிறாள். ஒரு காலைத் தூக்கியும், ஒரு காலை தொங்கவிட்டும் அமர்ந்திருக்கிறாள். தொங்க விட்ட காலில் சூரனை மிதித்துக் கொண்டிருக்கிறாள். தலையில் சுடர் உள்ளது.
பரிகாரம்:
கருணை கடவுளாக விளங்கும் அரியநாச்சி தாயாரை நாம் திருமணப்பேறு பெறுவதற்கும், சுபகாரியங்களை செவ்வனே நடத்தி கொடுப்பதற்கும், வெள்ளிக்கிழமை தோறும் பல்வேறு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வழிபட்டு வர, நம் வாழ்வில் மங்கலம் பெருகும். பிரார்த்தனை நிறைவேறியவுடன் அரியநாச்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜை செய்து வழிபட நம் வாழ்வில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி நம்மை கண் போல் காப்பார் என்பது ஐதீகம்.
வழித்தடம்:
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் கீழராஜவீதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.