Homeஅம்மன் ஆலயங்கள்மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்கள்

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்கள்

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அறிய தகவல்கள்

1. அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் நான்கு திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

3. நான்கு கரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிளம்பு உள்ளது.

4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.

5. கோயிலுக்கு நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.

7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.

8. இக்கோவிலில் இருக்கால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும் போது அவ்வபோது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்ரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

மேல்மலையனூர் அங்காளம்மன்
மேல்மலையனூர் அங்காளம்மன்

11. திருக்கோயிலின் தெற்கு பகுதியில் மல்லாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாட்டானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.

14. இந்த இடத்தில் வழிபடும் பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதிகம்.

15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பௌர்ணமி தினங்களில் ஆலயம் இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுகிறது.

16. சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.

17. வேண்டிதல் நிறையவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.

18. ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

19. எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

மேல்மலையனூர் அங்காளம்மன்
மேல்மலையனூர் அங்காளம்மன்

21. மயானத்தில் அன்னையே ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள்.

22. இதனால் ஏவல் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பதில் பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.

23. பிரம்மனின் ஐந்தாம் தலையை கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தத் தலை சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது.

24. என்ன முயற்சி செய்தும் கையை விட்டு அகலாததுடன், சிவனுக்கு இடப்படும் உணவு வகைகளையும் அத்தனையும் உண்டு வந்தது.

25. மஹா விஷ்ணு அறிவுரைப்படி பார்வதி தேவி, மூன்று கவளம் அன்னத்தை எடுத்து, இரண்டு கவளத்தை சிவன் கையில் இட, பிரம்ம கபாலமே வழக்கம் போல் உண்டு விடுகிறது.

26. மூன்றாம் கவளத்தை தவறுதலாக போடுவது போல் மண்ணில் போட்டுவிடுகிறாள் பார்வதி தேவி.

27. உணவின் ருசியில் மயங்கிய கபாலம், மண்ணை நோக்கிப் பாய, விஸ்வரூபம் எடுத்த அங்காளம்மன் அந்த கபாலத்தைக் காலில் போட்டு மிதித்து அடக்கிவிடுகிறாள்.

28. பின்னர் கோபம் தணிந்த அம்மன் தனது சுய உருவம் எடுத்து அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூர் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

29. இதுவே ஸ்தல வரலாறு ஆகும். அங்காளம்மனை மகா மண்டபத்தில் புற்றாகவும், மூலஸ்தானத்தில் திருவுருவத்துடனும் காட்சி அளிக்கிறாள்.

30. அமாவாசையன்று அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது. இதனைக் காண லட்சோப லட்சம் பக்தர்கள் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!