பண பிரச்சினையை தீர்த்து வைக்கும் காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பண பிரச்சினையை தீர்த்து வைக்கும் காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்

காஞ்சிபுரத்தில் உள்ள 5 பாடல் பெற்ற சிவத்தலங்கள் 5-ல் ஒன்றாகவும் தொண்டை நாட்டு சிவ தலங்கள் வரிசையில் மூன்றாவதாக உள்ள தலம் ஓணகாந்தன்தளி

இறைவன் பெயர்: ஒணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர்.

இறைவி பெயர்: காமாட்சி அம்மன்

இத்தலத்திற்கு சுந்தரர் பதிகம் ஒன்றும் உள்ளது.

வரலாறு:

வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டு பேறு பெற்ற காரணத்தால், இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.

3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது. ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன்,காந்தன் இவ்விருவரும் வழிபட்ட லிங்கங்கள், அவர்கள் பெயரிலேயே ஒணேஸ்வரர், காந்தேஸ்வரர் என்ற பெயரில், கோயிலில் அடுத்தடுத்து தனி சந் நிதிகளாக உள்ளன.

முதல் சந்நிதியில் ஒணேஸ்வரர் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில், சிவன்- உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஒணேஸ்வரர் சந்நதி அர்த்த மண்டபத்தில், சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனத்தை காணலாம்.

காஞ்சிபுரம்- ஓணகாந்தேஸ்வரர்

அடுத்து இரண்டாவது சந்நிதியில் காந்தேஷ்வர் தரிசனம் தருகிறார். மூன்றாவது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாக சொல்லப்படும் சலே ந் தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி, தனியே சிறு கோயிலாக உள்ளது. இது பிற்கால பிரதிஷ்டையாகும்.

இத் தலத்தில் உள்ள வயிறுதாரி பிள்ளையார் சந்நிதியை சம்பந்தர் தனது பதிகத்தில் இரண்டாவது பாடலில் குறிப்பிடுகிறார். இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியும், காந்தேஷ்வர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் தனது காதை வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் சனகாதி முனிவர்கள் உடன் இருக்க, வலது காலை முயலகன் மீது வைத்தபடி தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். முருகன் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி இல்லை.ஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இல்லை. கோவிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம் உள்ளது.

வன்னிமரமும், புளியமரமும் இத்தளத்தின் தலவிருட்சங்கள் ஆகும்.

காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயிலுக்கு மேற்கே உள்ள சர்வ தீர்தத்துக்கு வட மேற்கே சுமார் 1கிலோ மீட்டர் தொலைவில், பஞ்சுப் பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு எதிரில் கோயில் உள்ளது.

Google Map:

Leave a Comment

error: Content is protected !!