லக்னாதிபதிக்கோ, சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஏழாமிடத்தில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் பிறன் மனை விழையக்கூடும்.
லக்னாதிபதி நல்லதொரு வீட்டிலிருந்து சுபகிரக பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகர் நல்லதொரு இடத்தில் தங்கி வாழும் தகுதியை பெற்று இருப்பார்.
லக்னாதிபதி கெட்டதொரு வீட்டிலிருந்து பாவ கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால், ஜாதகர் நிர்பந்தமான சூழ்நிலையில் இக்கட்டான ஓரிடத்தில் தங்கி வாழக்கூடிய தொல்லை உண்டாகும்.
இரண்டாம் வீட்டில் சூரியனும் சந்திரனும் கூடினாலும், சூரியனும் சுக்கிரனும் கூடினாலும் கண் பார்வை மங்க கூடும். இந்த கிரகங்கள் எட்டாமிடத்தில் ஒன்று சேர்ந்தாலும் கண் பழுதுபடக்கூடும்.
இரண்டாம் வீட்டின் அதிபதி, 12ஆம் வீட்டின் அதிபதியுடன் ஒன்றுகூடி பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்று கெட்ட வீடுகளில் இருந்தால் கண் பார்வை கெடும்.
இரண்டாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்குமானால் ஜாதகருக்கு பேச்சு வன்மை ஏற்படும்.
இரண்டில் செவ்வாய் இருந்தால் சினம் ஊட்டுகிற பேச்சும், கேது இருந்தால் பழி தூற்றும் பேச்சும், ராகு இருந்தால் பொய் பேச்சும் ஜாதகருக்கு அமையக்கூடும்.
சூரியனும் சனியும் இரண்டில் நல்ல வலிமையுடன் தனித்து இருந்தால் ஜாதகரின் குரல் கம்பீரமாகவும், பெருமைக்குரியதாகும் அமையும்.
புதன், குரு, சுக்கிரன், சந்திரன் ஆகியோர் இரண்டாம் வீட்டில் இருந்து சுப பலம் பெற்றால், ஜாதகர் முறையே தர்க்கரீதியாகவும், இனிமையாகவும், கவித்துவமாக, கவர்ச்சியாகவும் பேசுவதில் வல்லவர் ஆவார்.
ஐந்தாம் வீட்டு அதிபதி சுப பலம் பெற்று, இரண்டாம் வீட்டு அதிபதி வலுத்து இருந்தால், ஜாதகருக்கு வாக்கு சித்தி ஏற்படும்.
2ஆம் வீட்டில் குரு இருந்தால் ஜாதகர் இனிப்புசுவையை ரசிப்பார்.
2ஆம் வீட்டு அதிபதி புதனுடனோ, குருவுடனோ, சுக்கிரனுடனோ சேர்ந்து திரிகோணம் அல்லது கேந்திரத்தில் இருந்தால் ஜாதகர் தனவான் ஆவார்.
புதன், குரு, சுக்கிரன் ஆகியோருடன் இரண்டாம் வீட்டு அதிபதி ஒன்று சேர்ந்து 6, 8, 12ஆம் இடங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்தால், ஜாதகர் பொருளாதாரத் துறையில் சங்கடத்திற்காட்பட நேரலாம்.
லக்னாதிபதிமற்றும் இரண்டாம் வீட்டு அதிபதி ஒருவர் வீட்டில் மற்றொருவர் இடப் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகர் அதிக முயற்சியோ, உழைப்போ இல்லாமல் சுலபமான நிறைய பொருள் சம்பாதிக்கும் தகுதி உடையவர் ஆவார்.
குருவானவர் இரண்டாம் வீட்டில் தனித்து இராமல், மற்றொரு கிரகத்துடன் கூடி இருந்தால் பொருளாதாரத் துறையில் வளர்ச்சி இருந்து வரும். தனியாக இருந்தால் செல்வநிலை சீர்கெடக்கூடும்
சூரியனும் சந்திரனும் இரண்டாம் இடத்தில் கூடுவது செல்வ நிலைக்கு சாதகமானதாக இருக்காது. இவ்வாறு சூரியன் புதன் ஆகிய இருவரும் இந்த இடத்தில் சேர்ந்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகாது.
சந்திரன் பலம் இல்லாத நிலையில் இரண்டாம் வீட்டில் இருந்து புதனால் பார்க்கப்பட்டால் பொருள் இழப்பு உண்டாகும். இவ்வாறு இரண்டில் புதன் இருந்து பலம் இல்லாத சந்திரனால் பார்க்கப்பட்டாலும் செல்வ நிலையில் சறுக்கல் உண்டு.
2-ஆம் இடத்து சுக்கிரனுக்கு நல்ல பலம் அமையுமானால், செல்வம் குவிய சந்தர்ப்பம் உண்டு
மூன்றாம் வீட்டு அதிபதி சுபக்கிரகத்துடன் கூடி 3ல் இருந்தால் இளைய சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்.
லக்கினாதிபதி சுபர் கிரகத்துடன் கூடி பதினோராம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு மூத்த சகோதரர் மூலம் நலம் உண்டாகும்.