ஜோதிட குறிப்புகள்
- லக்னத்திலிருந்து கேந்திரங்களில் குருவும்-சந்திரனும் இருந்தால், ஜாதகருக்கு சுபிக்ஷங்கள் உண்டாகும்.
- சந்திரனுக்கு 6, 8, 12ஆம் இடங்களில் குரு இருந்தால் ஜாதகருக்கு நன்மையும் தீமையும் மாறி மாறி வரும். சந்திரன் லக்னத்திலிருந்து கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் இந்த அவல நிலை அகலும்.
- சந்திரனும்-குருவும் சொந்த வீடுகளில் இருந்தாலும், அந்த வீடுகள் கேந்திர திரிகோண வீடுகளில் ஏதேனும் ஒன்று ஆகுமானால், ஜாதகருக்கு சுகமான வாழ்க்கையும், அரசாங்க கௌரவமும் உண்டாகும்.
- சந்திரனும்-செவ்வாயும் ஒன்று சேர்ந்து நல்ல இடங்களில் இருந்தால் ஜாதகர் தனவந்தர் ஆவார்.
- வளர்பிறை சந்திரன் 4 அல்லது 7 அல்லது 10-ம் இடத்தில் இருந்து, குரு-சுக்கிரன் ஆகிய சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் ஜாதகர் உன்னதமான பதவியை அடைந்து, வாழ்வில் ஒளிச்சுடராக திகழ்வார்.
- வளர்பிறை சந்திரன் ரிஷப லக்னத்தில் இருந்து, சுக்கிரன் துலாத்திலும், புதன் 4-ம் வீட்டிலும் இருந்தால் ஜாதகர் உயர்ந்த பதவியில் தனது வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்வார்.
- கடகத்தில் பலம் பெற்ற சந்திரன் இருந்து ,லக்னத்தில் இரண்டு கிரகங்கள் இருக்கும் நிலை பெற்று- ஒரு கிரகத்திற்கு அது உச்ச வீடாகவும், மற்றொரு கிரகத்திற்கு சொந்த வீடாகவும் இருக்குமானால் ஜாதகர் அரசனுக்கு நிகரான பாக்கியங்களை அடைவார்.
- கடகத்தில் பலமுள்ள சந்திரன் இருந்து ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சியோ ,உச்சமோ பெற்று அந்த கிரகம் லக்கினத்தில் இருக்குமானால் மேற் சொன்ன யோகத்தில் கொஞ்சம் குறைந்தாலும் அந்த யோகம் நிச்சயமாக அமையும்.
- வளர்பிறை சந்திரன் 4லிருந்து ,அல்லது 7-ல்அல்லது 10-ல் இருக்கப்பெற்று ,ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற ஒரு கிரகத்தால் பார்க்கபட்டால் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் கூட உயர்ந்த நிலையை அடைய பெறுவான்.
- சந்திரன் லக்னத்தில் இருந்து 2,9 ,11 ஆகிய வீடுகளின் அதிபதிகள் ஒருவர் கேந்திரத்தில் இருந்தாலும், குருவானவர் 2,5 அல்லது 11-க்கு அதிபதியாகி பலம் பெற்றாலும் ஜாதகர் செல்வமும், சுபிட்சமும் அடைவார். வாழ்க்கையில் உயர்ந்த ஸ்தானமும் பெறுவார்.
- மீனத்தில் வளர்பிறைச்சந்திரன் இருந்து ஒரு நட்பு கிரகத்தால் பார்க்கப்பட்டால் அரச யோகம் உண்டாகும்.
- சந்திரன் உச்சம் பெற்றால் சிறப்புகள் ஜாதகருக்கு உண்டாகும்.
- மேஷம் ,சிம்மம், தனுசு ராசிகளில் ஐந்தாவது அம்சத்தில் சந்திரன் இருந்தாலும், ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் எட்டாவது அம்சத்தில் இருந்தாலும், கடகம் அல்லது மீனத்தில் இரண்டாவது அம்சத்தில் இருந்தாலும், சுப கிரகங்கள் பாவ கிரகங்களுடன் சேராமல் கேந்திரத்தில் இருந்தாலும், ஜாதகர் அரசனுக்கு நிகரான அந்தஸ்தை பெறுவார்.
- சந்திரன் லக்னத்தின் அதிபதி ஜென்ம லக்னத்தின் அதிபதியுடன் கூடி லக்னத்தில் இருந்து ஒரு கேந்திரத்தில் இருந்தாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், லக்னத்தை பலமுள்ள ஒரு கிரகம் பார்த்தாலும், இம்மாதிரி அமைப்புகள் உள்ள ஜாதகர் செல்வராகவும், புகழும்- பெயரும் அடைபவராகவும், விளங்குவார். அரசாங்கத்தாலும் போற்றப்படுவார்.
- சந்திரன் உச்சம் அல்லது ஆட்சி பெற்ற ஜாதகர் பகலில் பிறந்து, சந்திரன் குருவினால் பார்க்கப்பட்டால் ஜாதகர் ஐஸ்வர்யம் அடைவார்.
- ஜாதகர் இரவில் பிறந்து சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஜாதகர் நிறைய செல்வம் திரட்டுவார்.
- ஓர் ஆடவர் பகல் நேரத்தில் பிறந்து ஜென்ம லக்னமும்-சந்திர லக்னமும்- சூரியலக்னமும் ஒற்றை படை ராசியாக இருக்குமானால் ஜாதகர் ஏராளமான செல்வம் திரட்டுவார். புகழ் அடைவர். நல்ல ஸ்தானம் அடைவார்.
- இரவு நேரத்தில் பிறந்த பெண்ணுக்கு ஜென்ம லக்னமும், சந்திர லக்னமும், சூரிய லக்னமும், இரட்டைப் படை ராசியாக அமையுமானால் அந்த ஜாதகி வாழ்வில் சுகம் பெற்று அதிர்ஷ்டமும், சுபிட்சமும் அடைபவளாக இருப்பாள். நல்ல மக்கள் செல்வங்களையும் அடைவாள்.
- சந்திரன் மேஷத்தில் இருந்து அதுவே லக்னமாகி சூரியன் லக்னத்தில் பலம் பெற்றிருந்து செவ்வாய் மகரத்திலும்,குரு தனுசிலும், சனி கும்பத்திலும் இருந்தால் அந்த ஜாதகர் மகாபாக்கியவனாவார். அரசு அந்தஸ்து பெறுவார்.
- ஓர் ஆண் ஜாதகத்தில் அவர் பகலில் பிறந்தவராகி லக்னமும், சூரியனும், சந்திரனும் ஆண் நட்சத்திரங்களில் இருக்கப் பெற்றால், அந்த ஜாதகர் மதிப்புக்குரியவராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாவர். மக்கள் செல்வங்களைப் பெறுவார். அஸ்வினி, புனர்பூசம், பூசம், அஸ்தம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை ஆண் நட்சத்திரங்கள் ஆகும்.
குறிப்புகள் தொடரும்….