Homeஜோதிட குறிப்புகள்ராகு பகவான் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் கிட்டும் !

ராகு பகவான் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் கிட்டும் !

ராகு

ராகுவும் கேதுவும்(Rahu-Kethu) பாவ கிரகங்கள் இவ்விரு கிரகங்களும் ராசி மண்டலத்தின் தனி வீடுகள் இல்லை. ஆனால் உச்ச வீடு, ஆட்சி வீடு ,பகை வீடு, சம வீடு, நட்பு வீடு ஆகிய அமைப்புகள் மட்டும் உண்டு.மற்ற ஏழு கிரகங்களும் ராசி மண்டலங்களை எப்படி சுற்றி வருகின்றன அதற்கு எதிர்மறையாக இவ்விரு கிரகங்களும் சுற்றி வருகின்றன.இது இவ்விரு கிரகங்களின் இயல்பு.கொடூர குணம் கொண்ட இந்த ராகு கிரகம் எந்த ராசிகளில் அமைந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்

லக்னத்தில் ராகு இருந்தால்

 ஒருவர் ஜாதகத்தில் முதல் பாதத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்றவர்,சரிவர ஆடைகளை அணிய மாட்டார்,குரூர புத்தி, என்றும் சிறுமையான மனம் உள்ளவராகவும்,  கடுமையான சொற்கள் கூறுபவராகவும், விபரீத எண்ணங்கள் கொண்டவர் இருப்பார்.இவருக்கு பற்கள் முன்னே நீட்டியபடி அழகற்று இருக்கும்,வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு,பிறர் உள்ளத்தை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் மிகுந்தவர்,குடும்பத்தில் அமைதி இன்மையாலும் தகுந்த வருமானம் இல்லததாலும் எப்போதும் சண்டை சச்சரவு ஏற்படும்,

2ல் ராகு இருந்தால்  

 இரண்டாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்றவர் பொய் பேசுவார்,பிறரைப் பற்றி எப்போதும் கோள்மூட்டி கொண்டிருப்பார்,இவருக்கு கல்வியில் போதிய ஈடுபாடு இராது,குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவு ஏற்படும்,போதிய வருமானம் இல்லாமல் வறுமை ஏற்படும் அதனால் வாக்கில் நாணயம் தவறும் கடன் தொல்லைகள் மனதிற்கு துன்பத்தை தரும்,

rahu ketu

3ல் ராகு இருந்தால்  

 மூன்றாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்றவர்கள்குறித்த நேரத்தில் சாப்பிட முடியாது ,குறுகிய மனப்பான்மையினால் உடன்பிறந்தார் உடன் அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் சண்டை ஏற்படும்,பார்வைக்கு இவர் எளியவர் போன்று  தோன்றுவார்,ஆனால் இவரிடம் ரகசியமாக பண சேமிப்பு இருக்கும்,

4ல் ராகு இருந்தால்  

 நான்காம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்றவர்செல்வ வளம் அற்ற குடும்பத்தில் பிறப்பார்,வாழ்க்கை முழுவதும் வறுமை ,பிணி ஆகியவற்றை எதிர்த்துப் போரிட நேரிடும்,தொடர்ந்து ஒரு வேலையில் இருப்பது அரிது,இந்த நான்காம் பாவத்தை சுபகிரகங்கள் பார்த்தால் ஓரளவு நன்மைகள் உண்டு,இந்த நான்காம் பாவத்தை தீய கிரகங்கள் பார்த்தால் மேலும் துன்பம் நேரும்,

5ல் ராகு இருந்தால்  

 ஐந்தாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்றவர் வயிற்றில் ஏதாவது ஒரு நோய் இருக்கும் ,மூக்கால் பேசுவது போல பேசுவார்,போதிய வருமானம் கிட்டாது பல பெண் குழந்தைகளை பெறுவார்,குழந்தை பிறந்து  இறந்துவிட வாய்ப்பு உண்டு,வெளி நாட்டுக்கு பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டலாம்,

6ல் ராகு இருந்தால்  

ஆறாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்றவர் எப்போதும் பெண்களிடமும் உறவினர்களிடமும் சண்டையிடுக் கொண்டு இருப்பார்,வறுமை, கடன் தொல்லை, உடலில் ஆயுதங்களால் காயம் ஏற்படல், பெண்களால் இழப்பு, துன்பம் ஆகியன ஏற்படாமல் விழிப்பாய் இருக்க வேண்டும்.

7ல் ராகு இருந்தால்  

ஏழில் ராகு(Rahu)  அமையப்பெற்றவர்பெண்களை கண்டால் எரிச்சல் ஏற்படும் அதனால் மனைவியிடம் சுமூகமான உறவு இராது,இவர் பெண்களை விரும்பமாட்டார்,பெண்களும் இவரை விரும்பமாட்டார்,

8ல் ராகு இருந்தால்  

 எட்டாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்று இருந்தால்,இதய நோய் ஏற்படலாம்,வறுமையினால் துன்பம் உண்டாகும்,போதிய வருமானம் இல்லாமல் வீண் சண்டை ஏற்படும்,மனமயக்கம், எதிரிகளின் மிரட்டல் ஆகியவற்றால் எப்போதும் மனப்போராட்டம் ஏற்படும்,

9ல் ராகு இருந்தால்  

 ஒன்பதாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் அமையப் பெற்றவர்ஏதாவது கடைநிலை அரசாங்க பதவியில் இருப்பார்,இவர் தந்தையின் மரணம்  சந்தேகம் ஏற்படும்படி இருக்கும்,இவர் தம் மனைவிக்கு அடங்கி நடப்பார்,மதப்பற்று இல்லாதவராய் இருப்பார் ,இவர் நடுத்தர வருமானத்தோடு வாழ்வார்,ஊர்மக்கள் உதவியால் வாழ்பவராக இருப்பார்,உறவினர்கள் விரோதியா இருப்பார்,

10ல் ராகு இருந்தால்  

பத்தாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் இருக்கப்பெற்றவர் தொலைதூர நாடுகளில் சென்று வேலை செய்து பிழைப்பார்,பணவசதி கிட்டும்,சுக போக வாழ்க்கையில் ஈடுபடுவார்,மனைவி மக்களிடம் பிரியம் உள்ளவர்,அடிக்கடி பயணங்கள் செல்லக் கூடியவர்,

11ல் ராகு இருந்தால்  

 பதினோராம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் இருக்கப்பெற்றவர் ,கல்வியினால் புகழ் பெறுவார்.காது நோய்களினால் அவதிப்படுவார்கடமைகளை சரியாக செய்து உடமைகளை ஏராளமாக சேர்ப்பார் ,இனிமையாக பழகும் இவருக்கு  நண்பர்கள் பலர் ஏற்படுவர், அவர்களால் இவர் செல்வம் சேர்ப்பார்,

12ல் ராகு இருந்தால்  

 பன்னிரெண்டாம் பாவத்தில் ராகு(Rahu) கிரகம் இருக்கப் பெற்றவருக்கு பெண்  குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு ,சுமாரான அழகுள்ளவர்,எந்த சுகத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியாது,தொல்லை ஏற்படும்,இவர் மனைவி மீது அவ்வளவு அன்பு கொள்ள மாட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!