Homeஜோதிட குறிப்புகள்ரிஷப ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

ரிஷப ராசியில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

ரிஷப ராசி திருமண வாழ்க்கை

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவரின் 7 – ஆம் வீடு விருச்சிகம். அதிபதி செவ்வாய்.இதில் குரு , சனி , புதன் சாரம் வாங்கிய விசாகம் , அனுஷம் , கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம்பெறும். குரு , புதன் ஆகிய சுப சார நட்சத்திரங்கள் இருப்பதால் இவர்கள் வாழ்க்கைத் துணைவருக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும்.

சனி சார நட்சத்திரம் இருப்பதால் சற்று சோம்பேறியாக இருப்பர் .7 – ஆம் வீடு செவ்வாய் வீடென்பதால் கோபம் வந்தால் அதிகமாக வரும். பொதுவாக அதிகம் பேசாதவராக இருப்பார்.

இங்கு சந்திரன் நீசமாவதால் சிலசமயம் எண்ணங்களில் குழப்பம் உண்டாகி தனது வாழ்க்கைத் துணையையும் சங்கடத்தில் ஆழ்த்துவார்.ரிஷப லக்ன வாழ்க்கைத் துணைவர்கள் தங்கள் பூர்வீக குடும்பப் பெருமை பேசுவதில் மிகவும் விருப்பம் உடையவர்.

இவர்கள் பிறந்த இடத்துக்கருகில் சிலசமயம் மதுபானக் கடைகள் இருக்க வாய்ப்புண்டு. அல்லது குறுகிய சந்தில் அமைந்திருக்கும்.

ரிஷப ராசி

இவர்களின் 7 – ஆம் அதிபதி உச்சமானால் மிகுந்த யோகமும் , வீரம் , பாக்கியம் , தன்னம்பிக்கை , வெளிநாட்டுப் பயணம் என்று சிறப்பான வாழ்வும் திருமணத்தின் மூலம் அமையும்.

இதுவே 7 – ஆம் அதிபதி நீசமானால் கோழையாகவும் , தாய்க்கு மிக பயந்தவராகவும் , தன்னம்பிக்கை குறைந்த வராகவும் இருப்பர்.

மாமியார்- அழுத்தமானவர். மாமனார் பயண விருப்பமும் சுறுசுறுப்பும் கொண்டவர்.

ரிஷப லக்னத்தாருக்கு வாழ்க்கை துணை வடக்கு அல்லது தெற்கு திசையில் அமையும்.

தோ, ந, நி, நு,நே, நோ, ய, இ,பூ(T,N,Y,I,P) ஆகிய எழுத்துக்கள் மற்றும் சா(S) என்ற எழுத்திலும் பெயர் ஆரம்பிக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!