திருவெம்பாவை பாடல் 17
செங்கண வன்பால் திசைமுகன்பால்
தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
பொருள் :
கொங்குண் கருங்குழலி ==== மணம் வீசும் அழகிய, கருங்கூந்தலை உடைய பெண்ணே !!
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
பாலதாக=எங்கும் இலாததோர் இன்பம்நம் -செந்நிறமான விழிகளையுடைய திருமாலிடத்தும், பிரம்மனிடத்தும், தேவர்களிடத்தும் இல்லாத ஓர் பேரானந்தம் நம்மிடத்துப் பொருந்தும்படியாக,
நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மைச் செம்மைப்படுத்தி, நம் இல்லங்கள் தோறும் (தானே உவந்து) எழுந்தருளி,
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ்
சேவகனை ==== சிவந்த தாமரை மலர் போன்ற
திருவடிமலர்களைத் தந்தருளும் வீரனை
அங்கண் அரசை அடியோங்கட்
காரமுதை ==== எப்போதும் சுரக்கும் அருளால்
அழகு பெற்ற திருவிழிகளை உடைய அரசனை,
அடியார்களுக்கு அமுதம் போன்றவனை,
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்= தலைவனாகிய எம்பிரானைப் பாடி, நலம் திகழ, தாமரை மலர்களால் நிறைந்துள்ள பொய்கையில் குதித்து நீராடுவோமாக!