இன்றைய ராசி பலன் –11.01.2025
இன்றைய ராசி பலன் : மேஷம்
குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.
இன்றைய ராசி பலன் : ரிஷபம்
குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.
இன்றைய ராசி பலன் : மிதுனம்
குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை குறையும்.
இன்றைய ராசி பலன் : கடகம்
பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
இன்றைய ராசி பலன் : சிம்மம்
குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
இன்றைய ராசி பலன் : கன்னி
நீங்கள் மன உறுதியோடு செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பெற்றோர்களால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் : துலாம்
நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
இன்றைய ராசி பலன் : விருச்சிகம்
வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் : தனுசு
நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி பலன் : மகரம்
நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண முயற்சிகளில் சற்று தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
இன்றைய ராசி பலன் : கும்பம்
வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
இன்றைய ராசி பலன் : மீனம்
குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.