விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025
மேஷம் (அசுவனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்)
பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி வீடாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3மிடம் செல்கிறார். மேலும் அதிசாரமாக அக்டோபர் 18ந் தேதி முதல் 4மிடம் செல்கிறார். பிறகு, வக்ரகதியில் மீண்டும் டிசம்பர் 5ந் தேதியன்று 3மிடம் வருகிறார்.
ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 12, 6மிடங்களிலிருந்து 11, 5மிடமித்திற்குச் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சனி பகவான் இவ்வருடம் முழுவதும் 71/2 சனியாக உங்கள் ராசிக்குப் 12மிடம் சஞ்சாரம் செய்கிறார்.
இதனால், தொழில் துறையில் பண வருவாயில் தாமதமுண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். கண்களிலும், கால்களிலும் நீர் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு ஏற்ப சிகிட்சை செய்யவேண்டி இருக்கும். கருத்தரித்த பெண்கள் பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.
பூர்வ புண்ணிய சொத்துக்களைப் பற்றி இவ்வருடம் பேச வேண்டாம். தனக்கு குருபலம் இல்லாவிட்டாலும் வரனுக்கு குருபலம் இருந்தால் திருமணம் முடிவாகும். திருமணம் முடிவானால் கால தாமதம் செய்யாமல் திருமணத்தை முடிப்பது நல்லது.
வரவுக்கு ஏற்ற செலவினங்கள் உண்டு. பிறருக்குக் கடன் கொடுப்பதையும் ஜாமீன் போடுவதையும் தவிர்க்கவும், வெளிநாட்டு வேலை விரும்புபவர்களுக்கு இவ்வருடம் கிடைக்கும். தூக்கம் குறையும். முடிந்தவரை இரவு நேரப் பயணங்களையும், இரவு நேர அலுவல்களையும் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்
பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் வைக்கவும்.
மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.