விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: துலாம் ராசி
அசுர குருவான சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருந்த குருபகவான், மே 14ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்திற்கு வருகிறார். மேலும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு செல்கிறார்.மீண்டும் வக்கிரகதியில் பத்தாம் இடத்திலிருந்து டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9ஆம் இடம் வருகிறார்.
ராகு கேதுக்கள் மே 18ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6, 12 ஆம் இட பதினோராம் இடத்தில் இருந்து மாறி 5,11ம் இடங்களில் சஞ்சாரம் செய்வார்கள்.
சனி பகவான் இவ்வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இதனால் இந்த வருடம் வெகு காலம் திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும்.வீடு, மனை, புது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.தொழில் துறையில் நல்ல விருத்தி உண்டு. புதிய முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தாராள பணப்பழக்கம் உண்டு. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க பெறுவார்கள். படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். தெய்வ திருத்தலங்களுக்கு யாத்திரைகள் செய்து நல்ல தரிசனம் கிடைக்க பெறுவீர்கள். வெளிநாடு வேலை வாய்ப்பு, வெளிநாடு பிரயாணமும் செய்யும் வாய்ப்பு உண்டு.குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அதை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று எல்லா சன்னதிகளிலும் நெய் விளக்கு ஏற்றி வர மேலும் நன்மைகள் அதிகமாகும்.
மொத்தத்தில் இந்த வருடம் 80 சதவீதம் நற்பலன்களை நல்கும் வருடமாக உங்களுக்கு அமையும்