Homeஜோதிட குறிப்புகள்சில நூறு ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ கிரகமாலிகா யோகம்

சில நூறு ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம்

இவ்வருடம் ஆனி மாதம் 18 ந்தேதி ( 02-07-2022 ) சனிக்கிழமை காலை 9-45 மணிமுதல் ஆனி மாதம் 19 ந்தேதி ( 03-07-2022 ) ஞாயிற்றுக்கிழமை காலை 6-29 மணிவரை கும்ப ராசி முதல் கடக ராசி வரை வரிசையாக 6 ராசிகளில் உள்ள எல்லா ஸ்தானங்களிலும் கிரகமாலிகா யோகத்துடனும் கிரகங்கள் ஆட்சி பலத்துடனும் இருக்கிறது.

கிரகமாலிகா யோகம்

🟢ராகு ஆட்சி பலத்துடன் கூடிய செவ்வாயுடன் இருக்கிறது.

🟢சூரியன் ஆட்சி பலத்துடன் கூடிய புதனுடன் சேர்ந்து புதாதித்ய யோகம் பெறுகிறார்.

🟢கேது விசாகம் 2 ம் பாதத்தில் அமர்ந்து புஷ்கர நவாம்சம் பெறுகிறார்.

🟢சந்திரனுக்குக் குருபார்வை கிடைப்பதால் ஆயில்ய நட்சத்திர தோஷம் உண்டாகாது.

ஆக , அனைத்துக் கிரகங்களும் வலுத்து உள்ள இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறப்பான அந்தஸ்தையும், புகழையும், பூமியை ஆளும் யோகத்தையும் பெறுவார்கள்.

இக்காலங்களில் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் , லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் , சுந்தரகாண்ட பாராயணம் , ஏகாதச ருத்ரஹோமம் , பஞ்ச ஸுக்த பாராயணம் மற்றும் ஹோமம் , ஸுதர்ஸன அபை ஹோமம் , சோடஷ மஹா கணபதி ஹோமம் , சர்ப்ப சாந்தி ஹோமம் , திலஹோமம் , சர்வாரிஷ்ட சாந்தி ஹோமம் , மஹா சண்டி ஹோமம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட தனி மனிதர்களுக்கும் லோகத்திற்கும் க்ஷேமத்தைத் தருகின்ற அனைத்து ஹோமங்களும் பாராயணங்களும் செய்வதால் ஹோமம் மற்றும் பாராயணத்தின் பலன்கள் பரிபூரணமாகக் கிடைத்துச் சகல விதத்திலும் நன்மைகள் பெறலாம்.

கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் அன்று மரணயோக தோஷம் கிடையாது.

அன்று பூஜைகள் , ஹோமங்கள் செய்ய சந்தர்ப்பம் இல்லாதவர்கள் ஆனி மாதம் 12ந் தேதி ( 26-06-2022 ) ஞாயிற்றுக்கிழமை முதல் ஆனி மாதம் 22 ந் தேதி ( 06-07-2022 ) புதன்கிழமை வரை திட்டமிட்டுச் செய்யலாம் . அதே நல்ல பலன்கள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!