Homeஆன்மிக தகவல்ஜோதிடரீதியாக கடனை எந்த நேரத்தில் கொடுத்தால் விரைவாக கடன் அடையும்?

ஜோதிடரீதியாக கடனை எந்த நேரத்தில் கொடுத்தால் விரைவாக கடன் அடையும்?

ஜோதிடரீதியாக கடனை எந்த நேரத்தில் கொடுத்தால் விரைவாக கடன் அடையும்?

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டி கட்டியே சிலர் பரிதவிப்பார்கள்.

வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பிக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனையும் திருப்பிக் கொடுக்கும் வல்லமையும், வாய்ப்பு வசதிகளும் உருவாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பபட்டுள்ளது.

அத்தகைய நாட்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

  • அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் மேஷ லக்னம் நடப்பில் இருக்கும் போதும், அனுஷம் நட்சத்திரம் வரும் நாளில், விருச்சக லக்னம் வரக்கூடிய காலத்தில் கடனை திருப்பி கொடுக்கலாம்.

இந்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு தொகையைக் கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருப்பினும் அக்கடன் முழுவதும் விரைவில் தீர்ந்துவிடும்.

  • செவ்வாய்கிழமையும், நவமி திதியும், ஞாயிற்று கிழமையும், சதுர்த்தி திதியும், சனிக்கிழமையும், சதுர்த்தி திதியும் சேர்ந்து விடும் நாளில் ,குளிகன் உதயமாகும் சமயத்தில் கொடுக்க வேண்டிய கடன் தொகையில் சிறிதளவு கொடுத்தாலும் ,மிக மிக விரைவில் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
கடனை எந்த நேரத்தில் கொடுத்தால் விரைவாக கடன் அடையும்
  • சனிக்கிழமை பிரதோஷ காலத்தில், சர லக்கினங்களான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்கினங்கள் உதயமாகும் சமயத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.(அந்நேநேரத்தில் சிவ வழிபாடே சிறப்பு)
  • செவ்வாய்க்கிழமை பிரதோஷ காலத்தில் சூரிய அஸ்தமானத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.
  • சூரிய சந்திர கிரகணம் ஏற்பட்டு கிரகணம் விலகும் சமயம் கடனைத் திருப்பித் தரலாம்.
  • செவ்வாய்க் கிழமை ,செவ்வாய் ஓரையில் கடனைத் திருப்பித் தரலாம்.அதாவது குறிப்பிட்ட செவ்வாய் கிழழைமை சூரிய உதயத்தை குறித்து கொண்டு அன்று மதியம் அந்த நாளில் சூரிய உதயத்தை கணக்கிட்டு மதியம் அந்நேரம் முதல் 8 நிமிடம் 57 விநாடிக்குள் பணத்தை திரும்ப கொடுக்கலாம்.

உதாரணமாக அன்றைய நாளில் சூரிய உதயம் 6 மணி 5 நிமிடம் என வைத்துக் கொள்வோம்.

அதே நாளில் மதியம் 1 மணி 5 நிமிடத்திற்கு மேலே முதல் 8 நிமிடம் 57 வினாடிகளுக்குள் அந்த கடனை செலுத்தலாம்.

கோடி ரூபாய் கடன் இருந்தாலும் அந்நேரத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அது ஆயிரமோ இரண்டாயிரமோ எதுவாகவும் இருக்கலாம்.

அந் நேரத்தில் கடனை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடுவதை அனுபவத்தில் உணரலாம் .

வங்கியில் நகைக்கடன் பெற்றோரும் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று எல்லோர் கையிலும் ஆன்லைன் அக்கௌன்ட் உள்ளது .

பணப் பரிமாற்றம் செய்வது மிக எளிதாக எளிதாகி விட்டது .

ஆதலால் இக்குறிப்பிட்ட காலத்தைப் பயன்படுத்தி கடன் விரைவில் அடைபட பயன்படுத்திக் கொள்ளவும் .

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!