Homeஅம்மன் ஆலயங்கள்பாவங்களை போக்கும் பெரியபாளையம் பவானி அம்மன்

பாவங்களை போக்கும் பெரியபாளையம் பவானி அம்மன்

பெரியபாளையம் பவானி அம்மன்

சென்னை அருகே பெரியபாளையத்தில் பக்தர்களின் பாவம் போக்கும் வகையில் ‘பவானி அம்மன்’ அருளாட்சி செய்து வருகிறாள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். இங்கு அம்பிகையின் கட்டளைப்படி அனைவரும் ஒன்றாக சேர்ந்து பெரியபாளையத்து அம்மனுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார்கள். மூல கர்ப்ப கிரகத்தில் உள்ள அம்பிகையின் தலைப்பகுதியில் வளையல்கார வியாபாரி ஒருவர் இரும்பு கம்பி கொண்டு துலாவியதால் உண்டான வடுவை இன்றும் காணலாம்.

சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளி இருக்கும் அன்னையானவள் கவசம் இடப்பட்டு முன்புறமாய் அமர்ந்திருக்க பின்புறமாய் அன்னையின் திருவுருவம் சுதவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகமானது குடைபிடித்திடும் வண்ணம் அன்னையின் சன்னதி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.

பெரியபாளையம் பவானி அம்மன்

உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் வண்ணம் அன்னையானவள் நான்கு கரங்கள் கொண்டு திகழ்கிறாள். வலது முப்புற கரத்தில் சக்தி ஆயுதமும், பின்புற கரத்தில் சக்ராயுதமும் ஏந்தியுள்ளாள். இடது முன்புற கையில் கபாலமும், பின்புற கையில் சங்கும் ஏந்தியுள்ளாள். இடது முன்புற கையில் ஏந்தப்பட்டுள்ள கபாலத்தில் மூன்று தேவிகளும் இருப்பதாக கூறப்படுகின்றது.

பவானி அம்மனின் முக அமைப்பு எல்லோரையும் கவர்ந்து இழுத்திடும் வண்ணம் அமைந்துள்ளது. எடுப்பான மூக்கும், அதில் மின்னி உடைந்திடும் மூக்குத்தியும், இதழ்களில் தவழும் புன்னகையும் அன்னையைப் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழக்கும் வண்ணம் இருக்கிறது. அவளுக்கு அனுவிக்கப்பட்டு இருக்கும் பட்டுப் புடவையும், ஆபரணங்களும் அவளின் தெய்வீக எழில் தோற்றத்துக்கு மேலும் அழகினை சேர்க்கின்றன.

அம்பிகையின் பக்தர்கள் தங்கள் திருமணத்தின்போது ஒரு புதிய சடங்கு ஒன்றினை நடத்தி வருகின்றனர். திருமணத்தன்று மணமகன் மணமக்களுக்கு கட்டிய தாலியை கழற்றி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். பின் அன்னையின் அருள்மிகுந்திருக்கும் மஞ்சளும் ,மஞ்சள் கயிறும் பெற்றுக்கொண்டு அதனை அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்வதை இன்றும் காணமுடிகிறது. இப்படி தாலி காணிக்கை செலுத்துவதால் காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமை தந்தருளும் அன்னையாக பவானி அம்மன் திகழ்கிறார்.

ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் இக் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவது நன்று. இவள் பகவான் கிருஷ்ணனின் சகோதரி ஆவாள். இவள் கம்சனிடம் , நீ கிருஷ்ணனால் கொல்லப்படபோகிறாய் என்று கூறி , அவனது மார்பில் எட்டி உதைத்துவிட்டு வானத்திற்குள் பறந்து , பின்பெரிய பாளையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

பெரியபாளையம் பவானி அம்மன்

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பவானி அம்மனுக்கு அங்கப்பிரதக்ஷிணம் செய்வர். இக்கோவிலில் வேப்பஞ்சேலை அணிவது விசேஷமாகும். இக்கோவிலில் வழங்கப்படும் குங்குமமும். தீர்த்தமும் . பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் கொண்டவையாகும்.

பெரியபாளையம் பவானி அம்மன்

சென்னை மாநகரம் கோயம்பேடு . பிராட்வே பேருந்து நிலையங்களிலிருந்தும் , புறநகர் பகுதியிலிருந்தும் கோவிலுக்கே நேரடியாக பேருந்துகள் வந்து செல்கின்றன.

கோவில் இருப்பிடம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!