மேஷ ராசியில்-ராகு
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
மேஷ ராசியில்-ராகு
- மேஷ ராசியில் ராகு இருந்து தனது தசா புத்தி நடந்தால் , தாமத புத்தியும் , பின் புத்தியும் சரீரத்தில் தோல் வியாதி ,நோய் பயம் தருதலும் ,மிருகங்களால் பயமும் , தன விரயம் , ஸ்தான நாசம் , தந்தைக்கு மரண பயம் , அற்ப கல்வியும் ஏற்படும். சுபவர்க்க பலம் பெற்று இருப்பின் மன சந்தோஷத்தையும் , மங்கள காரியம் நடத்தல் . பூமி சேர்க்கை ,பெண்கள் , புத்திராதி சேர்க்கை சுகமான வாழ்க்கை தரும்.
- மேஷத்தில் ராகு இருந்து , செவ்வாய் சேர்க்கை பெற்று தனது திசையை நடத்தினால் , தனம் செளக்கியம் சம்பத்து , வித்தை கற்றல் , புத்திர பாக்கியம் கிடைத்தல் , அடுத்த மதத்தை விரும்புதல் போன்றவை உண்டாகும். சார கதியில் அசுபத் தன்மை வந்தால் மேற்படி பலன்கள் நாசம் அடையும்.
- மேஷத்தில் ராகு இருந்து , சந்திரன் , சேர்க்கை பார்வை பெற்று ( சந்திரன் சித்திரை நட்சத்திரம் 3 , 4 – ம் பாதம் துலாம் ராசியில் பெற்றால் தான் ராகு திசை வரும் ) தனது தசா புத்தி நடந்தால் வீடு , வாகனம் , பல ஊர்களை சுற்றி வரும் பாக்கியம் கிட்டும். அதனால் தன வரவு போன்றவைகளைத் தரும். , அசுப நட்சத்திரம் பெற்றால் தாய்க்கு ஆயுள் பயம், வாகன விபத்து, வீடு இழந்து விடுதல் போன்றவை நடக்கும்.
- மேஷத்தில் உள்ள ராகு சூரியனுடன் சேர்க்கை பெற்று தசா நடந்தால் அரசாங்க பயம்,தந்தைக்கு ஆபத்து, புத்திர தோஷம் , புத்திர சோகம், வெகு கோபம், சொற்ப யோகத்தையும் தரும்.
- மேஷத்தில் உள்ள ராகு புதன் பார்வை . சேர்க்கை . பெற்று திசை நடத்தினால் வித்தியாபலம் , சொத்து சேர்க்கை,நோய் பயம், எதிரிகளின் தொல்லை, எதிர்பாராத லாபம் தரும்.
- குருவின் பார்வை சேர்க்கை பெற்றால் தன வசதி பெருகும்,திருமண பலம் , புத்திர பலம், பாக்கிய விருத்தி ஏற்படும்.அசுபர் சாரம் பெற்றால் பலன் மாறி விடும்.
- சுக்கிரன் பார்வை-சேர்க்கை பெற்றால் சம்பத்தை தந்தாலும், களத்திர வகை பாதிப்பு, மனக்கஷ்டம் தருவார். சொற்ப யோகமும் தரும்.