பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இந்த இறைவனை தரிசிக்க முடியும்.

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை அருள்மிகு உமாமகேஷ்வரார் திருக்கோவில்

கோவில் தல வரலாறு

பூமா தேவி பூஜித்து பேறு பெற்ற தலம்

முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக்கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட, உலகைக்காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள்.

அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை  அருள்மிகு உமாமகேஷ்வரார் திருக்கோவில்

பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரசமரம் இருந்தது. புள்ளினங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்மதீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்கவேண்டிய தலம் இதுவென உணர்ந்த்தாள் பூமாதேவி. தேவசிற்பியான விஸ்வகர்மா அங்கே ஆலயம் அமைத்தார்.

வைகாசி மாதத்தில், குருவாரத்தில் ரோகிணியும், பஞ்சமியும் கூடிய சுப நாளில் தேவகுருவான பிரகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி, நாள்தோறும் தொழுது வரலானாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்தார். பூமாதேவியே இந்த உலக உயிர்களின் சகல பாவங்கலையும் போக்கும் தீர்த்தம் ஒன்றை உருவாக்கு என்று பணிக்க அதன்படி உருவானதே இங்குள்ள பூமிதீர்த்தம்.

அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை  அருள்மிகு உமாமகேஷ்வரார் திருக்கோவில்

உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில் அருள்பாளிப்பதால் திருமணத்தடை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடைகள் நீங்க இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்குள்ள இறைவனை வணங்கினால் பொல்லாத் துயரும் பொடிப்பொடி ஆகும் என்று திருநாவுக்கரசர் அருளி இருக்கிறார். அதற்கேற்ப புரூவர மன்னனின் குஷ்ட நோயைப் போக்கிய ஸ்ரீவைத்தியநாதர் தனி சந்நிதி கொண்டு காணப்படுகிறார். இங்குள்ள நடராஜர் சன்னிதி பெருமைவாய்ந்த ஒன்று. ஆறடி உயரத்தில் கம்பீரமாக காணப்படும் இந்த மூர்த்தம் அந்தக்கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது.

பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்க முடியும்

இத்திருக்கோவில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்புடையது இக்கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமாள் தானாக தோன்றி உலகிலேயே மிகப்பெரிய வடிவமாக காட்சி தருகின்றார் இத்தளத்தை பூர்வ புண்ணிய பிரார்த்தம் இருந்தால் தான் அடைய முடியும் என்பது திருநாவுக்கரசர் அருள் வாக்கு இங்குள்ள கல்யாண சுந்தரர் கல்யாண கோலத்துடனும் ஸ்ரீ மகாவிஷ்ணு பார்வதியை தாரை பார்த்து கொடுக்கும் காட்சியுடனும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர் மூலவர் சுவாமி உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அங்கவளநாயகி அம்பாள் கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள்

அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை  அருள்மிகு உமாமகேஷ்வரார் திருக்கோவில்

ஜாதகத்தில் ஏற்படும் திருமண தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலின் கல்யாண சுந்தரரையும் ஸ்ரீ நடராஜரையும் வழிபட்டு வந்தால் திருமண தோஷம் புத்திர தோஷம் நீங்கும் இங்குள்ள ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமியை நெய் பால் தேன்கொண்டு 48 நாட்கள் அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு பலதரப்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

இத்தலவிருட்சம் அரசமரம் இத்தளத்தில் ஸ்ரீ நடராஜ பெருமான் சுயமாக காட்சி தருகிறார் அவர் உடம்பில் மருவு ரேகை தழும்பு போன்றவைகளை காண்பது அதிசயம் நடராஜருக்கு சித்திரை ஆணி ஆவணி புரட்டாசி மார்கழி மாசி ஆகிய மாதங்களில் அபிஷேகம் நடைபெறும்.

அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை  அருள்மிகு உமாமகேஷ்வரார் திருக்கோவில்

பேருந்து வழித்தடம்:
கும்பகோணம் காரைக்கால் செல்லும் வழியில் எஸ். புதூரில் இருந்து தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கோனேரிராஜபுரம் உள்ளது.

Google Map

Leave a Comment

error: Content is protected !!