சமயபுரம் அம்மன்
அம்பாளுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் செய்து வைத்தால் தீராத வியாதிகளும் தீரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
தேவி கட்கமாலா எனும் அற்புத ஸ்தோத்திரம் உண்டு. என்றால் இந்த ஸ்தோத்திரத்தை சொன்னால் அம்பிகையின் பாதுகாப்பு எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கும்.
இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி சமயபுரத்தாளை வழிபடலாம். நம்பிக்கையோடு இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் கேட்பது அனைத்தும் கிடைக்கும். திருமணம், குழந்தைப்பேறு, கடன் நிவர்த்தி, செல்வ செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும் என எதைக் கேட்டாலும் நம் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே கொடுத்து மகிழ்விப்பாள் சமயபுரத்தாள்.
சமயபுரத்து அம்மனைவீட்டிலேயே வழிபடுவது எப்படி?
விரத நாள்களில் சமயபுரம் வந்து தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து அம்மனை வழிபட்டு வரம் பெறலாம்.
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இளநீர், மோர், பானகம், வெள்ளரிப்பிஞ்சு, துள்ளு மாவு ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபட வேண்டும். பச்சரிசி மாவு நாட்டுச் சர்க்கரையும் கலந்து துள்ளுமாவு செய்வார்கள்.
பூஜைக்கு பின்னர் அந்த பிரசாதத்தை ஏழை குழந்தைகளுக்கு வினியோகித்து நாமும் உண்ணலாம். இதனால் சகல நன்மைகளும் உண்டாகும் சமயபுரத்தாள் எப்போதும் நம்முடன் இருந்து நம்மை காப்பாள்.
நன்றியுடன்!
சிவா.சி
✆9362555266