கடக ராசியில் ராகு
கடக ராசியில் ராகு இருந்து தனது தசாபுத்தி நடத்தினால் முற்பாதியில் சொற்பயோகத்தை தரும். பிற்பாதி யோகம் உள்ளவனாகச் செய்யும். சகல பாக்கியமும் தரும்.
ராகு 6 , 8 , 12 – க்குரிய அசுப சாரம் பெற்றால் யோகம் தராது.
கடகராகு – சூரியன் சேர்க்கை , பார்வை , பெற்று திசையை நடத்தினால் , கல்வியில் பாதிப்பு . சகோதர வழித்தொல்லை , நாசம் , தனது குழந்தைகளுக்கு கண்டம் . யோக பங்கம் தரும்.
சந்திரன் பார்வை சேர்க்கை பெற்றால் , நல்ல யோகத்தை தர இடம் உண்டு.தேய் பிறை சந்திரனாக இருப்பின் , தாய்க்கு ஆயுள் பயம் தரும்.
செவ்வாய் சேர்க்கை – பார்வை பெற்றால் எல்லாவிதமான தொல்லைகளையும் தந்து பிறகு சுகத்தைத் தருவார்.
புதன் பார்வை சேர்க்கை பெற்றால் . எதிரிகளால் தன விரையம் , அற்ப கல்வி சொற்ப யோகம்.
குரு சேர்க்கை , பார்வை பெற்றால் நல்ல யோகத்தைத் தந்து இடையிடையில் துக்கம் , விரையம் தரும்.
சுக்கிரன சேர்க்கை பார்வை பெற்றால் , வேறு ஸ்திரீ தொடர்பும் , ஈனகுல தொடர்பும், சொத்து சேர்க்கையும், மனைவிக்கு பயமும் ஏற்படும்.
சனி சேர்க்கை , பார்வை பெற்றால் யோகம் . அவ யோகம் கலந்து தரும்.மன நிம்மதி இருக்காது.
சிம்மத்தில் ராகு
சிம்மத்தில் ராகு இருந்து தசா புத்தி நடந்தால் , சௌக்கியம் , தன , தான்யாதி , லாபம் , புத்திர சோகம் , அறிவின்மை , அரசாங்க பயம் ,நெருப்பு பயம் தந்தைக்கு ஆபத்து போன்றவை தரும்.
சுபர் சாரம் பெற்றால் துன்ப பலன் அதிகம் இருக்காது.
இவரோடு சூரியன் \ சந்திரன் , சனி , சுக்கிரன் , சேர்க்கை , பார்வை இருந்து திசை நடந்தால் பலவித தொல்லைகள் உண்டு.
குரு , செவ்வாய் புதன் சேர்க்கை , பார்வை பெற்றால் சொற்பயோக பலன்.
கன்னியில் ராகு
கன்னியில் ராகு இருந்து தசா புத்தி நடந்தால் ஆபாணக சேர்க்கை , வஸ்திர லாபம்,பூமி வாங்குதல் , வாகனயோகம் , புத்திர பிராப்தி, ஸ்திரீ சௌக்கியம், கைவிட்டு போனது கிடைத்தல் போன்றவை உண்டாகும்.
அசுப சாரம் பெற்றால் , துக்கபலன்கள் உண்டு.
இவருடன் சூரியன், செவ்வாய்,குரு, சேர்க்கை தவறைத் தரும்.
சந்திரன், புதன்,சுக்கிரன் , சனி சேர்க்கை யோகத்தை விருத்தி செய்யும்.
துலாம் ராசியில் ராகு
துலாம் ராசியில் ராகு இருந்து திசா புத்தி நடந்தால் மனைவிக்கு உடல் உபாதை , மூத்திர ரோகம் , மன வியாதி,நடு நடுவில் தன , தான்யம் தாய் – தந்தைக்கு கர்ம காரியம் நடத்தல் போன்ற பந்து துவேசம் , யோகபலம் தொழில் விருத்தி தரும்.
இவருடன் சூரியன் , செவ்வாய் , குரு சேர்க்கை பார்வை நல்ல பலன் தராது .
சந்திரன் – சுக்கிரன் – சனி – புதன் சேர்க்கை , யோகத்தைப் பலம் பெறச் செய்யும். பல ஊர் சுற்றி தனம் தேடுவர்.
விருச்சிக ராசியில் ராகு
விருச்சிக ராசியில் ராகு இருந்து தசா புத்தி நடந்தால் மன நோய் பீடை , தந்தைக்கு தோஷம் , ஜாதகர்க்கு கண்டாதி பீடை , அரசாங்க உதவி, கால்நடையில் லாபம் , எதிரி நாசம்,விஷப்பீடை ஏற்படும்.
இவருடன் குரு – சூரியன் , சந்திரன் , செவ்வாய் சேர்க்கை யோகமும் , அவயோகமும் தருவார்.
புதன் சனி சுக்கிரன் சேர்க்கை , பார்வை பொல்லாத பலன் தரும். சொற்ப யோகம் உண்டு.
தனுசு ராசியில் ராகு
தனுசு ராசியில் ராகு இருந்து தசா புத்தி நடந்தால் , தந்தைக்கு பாதிப்பு , சகோதார விரோதம், தோஷம், சொற்ப தன தான்ய சேர்க்கை ஏற்படும்.
இவருடன் செவ்வாய் சூரியன் – குரு சேர்க்கை சுபயோக பலன்களைத் தரும் . மற்றவர் சேர்க்கை -பார்வை அவயோகத்தை தரும்.
மகர ராசியில் ராகு இருந்து தசா புத்தி நடந்தால் , தொழில் சித்தி, தொழிலால் தன லாபம், புண்ணிய தீர்த்த தரிசனம், பூமி லாபம், அரசாங்க உதவி, தூர தேசப் பயணம் ஏற்படும்.
இவருடன் சுக்கிரன் , புதன் , சனி சேர்க்கை பல வித யோகத்தை தரும்.
குரு , சூரியன் , சந்திரன் , செவ்வாய் சேர்க்கை அவயோகத்தை தரும்.
ஜாதகர் ஏதோ ஒரு வழியில் சிறப்பான அம்சம் பெற்றவராக இருப்பார்.
கும்ப ராசியில் ராகு
கும்பராசியில் ராகு இருந்து தசா புத்தி நடந்தால் , சொற்பமாக தனம் தான்யம் சேரும்.கடன் படுவர் , எதிரி விருத்தியாவர், விஷ பயம், சோகமயமான சம்பவங்கள் நடக்கும்.
இவருடன் சுக்கிரன் புதன் சேர்க்கை நல்ல யோகத்தைத் தரும். மற்ற கிரக சேர்க்கை பார்வை நன்மை தராது.மன பயம் ஏற்படும்.
மீன ராசியில் ராகு
மீன ராசியில் ராகு இருந்து திசா புத்தி நடந்தால் , சகல சொத்துக்களும் கிடைத்தலும் அப்படியே அவற்றின் அழிவும் . அற்ப அளவு தான்ய தனாதிகள் வரவும் , வெகு துக்கமும் உண்டாகும் .