கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கேது தரும் பலன்கள்
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கேது தரும் பலன்கள்
கடகத்தில் கேது
- கடக லக்னத்தில், எதிரியான சந்திரனின் ராசியில் கேது பகவான் இருந்தால் உடலில் அடிக்கடி காயங்கள் உண்டாகும்.
- ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார்.
- உடல்நலத்தில் சிறிய குறைகள் இருக்கும்.
- புகழுக்காக சிறிது கூட கூச்சமே இல்லாமல் எந்த வழிக்கும் செல்ல ஜாதகர் தயாராக இருப்பார்.
சிம்மத்தில் கேது
- 2-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு பல நேரங்களில் பண இழப்பு உண்டாகும்.
- அதனால் கடனாளியாவார்.
- எனினும் பல வழிகளை கையாண்டு வெற்றி பெறுவார்.
கன்னியில் கேது
- 3-ஆம் பாவத்தில் கன்னி ராசியில் கேது பகவான் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்.
- பல வித்தைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்.
- பல மறைமுக செயல்களைச் செய்வார்.
துலாம் கேது
- 4-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலாம் ராசியில் கேது பகவான் இருந்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
- பலருக்கு அடிக்கடி இடம் மாறுதல் உண்டாகும்.
- வீட்டை அடிக்கடி மாற்றுவார்கள்.
- ஜாதகர் கடுமையாக உழைத்து குடும்பத்தை காப்பாற்றுவார்.
விருச்சிகத்தில் கேது
- 5-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் கேது பகவான் இருந்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருக்கும்.
- பிள்ளைகளால் தொல்லைகள் உண்டாகும்.
- படிப்பில் தடங்கல் ஏற்படும்.
- ஜாதகர் பல கஷ்டங்களை கடந்து வெற்றி பெறுவார்.
தனுசில் கேது
- 6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகன் பகைவர்களை வெல்வார்.
- பல கஷ்டங்களை மிகவும் துணிச்சலுடன் எதிர் கொள்வார்.
மகரத்தில் கேது
- 7-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் கேது பகவான் இருந்தால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும்.
- வர்த்தகத்தில் போட்டி இருக்கும்.
- பிறப்புறுப்பில் நோய் ஏற்படும்.
- ஜாதகர் காமம் மிகுந்தவராக இருப்பார்.
கும்பத்தில் கேது
- 8-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகனுக்கு பல நோய்களின் பாதிப்பு இருக்கும்.
- பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்படும்.
- வயிற்றில் நோய் வரும். எனினும் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.
- சில நேரங்களில் தேவையற்றதை பேசுவார்.
மீனத்தில் கேது
- 9-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறுவார்.
- மனதில் பல சிக்கல்கள் இருக்கும்.
- பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது.
- அதிஷ்டத்தில் தடங்கல் இருக்கும்.
- பலர் வீணாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
மேஷத்தில் கேது
- 10-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
- அரசியல்வாதிகளால் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
- வர்த்தகத்தில் கடுமையான போட்டி நிலவும்.
- பல போராட்டங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபத்தில் கேது
- 11-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் கேது பகவான் இருந்தால் ஜாதகருக்கு பண வரவு இருக்கும்.
- ஆனால் அதற்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.
- பலர் சுயநலவாதிகளாக இருப்பார்கள்.
- தைரியசாலிகளாக இருப்பார்கள்.
மிதுனத்தில் கேது
- 12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் கேது பகவான் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும்.
- வெளித் தொடர்பு காரணமாக வீணான செலவுகள் உண்டாகும்.
- பலர் தேவையற்றதை பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.