விஜயவாடா கனகதுர்க்கை அம்மன்
வரலாறு:
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள கனகபுரி என்னும் ஊரில் இந்திர கீழதிரி மலையின் உச்சியில் கனகதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
துர்க்க மாசுரன் என்ற அரக்கனை அழிக்க இந்த அம்மன் தோன்றினாள்.
சிறப்பு:
தன்னுடைய எட்டுக் கரங்களிலும் வலிமைமிக்க ஆயுதங்கள் கொண்டு, அரக்கனின் தலையில் காலை வைத்தபடி இந்த அம்மன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். வேண்டிய வரங்களை விரைவில் பக்தர்களுக்கு அளிப்பதால் இந்த அம்மனுக்கு ‘ஷிப்ர பிரசாதினி’ என்ற பெயரும் உண்டு.
கனகம் என்றால் தங்கம் என்று அர்த்தம் தங்கத்தைப் போல பிரகாசமாக இருப்பதால் இந்த அம்மனுக்கு கனகதுர்க்கை அம்மன் என்று பெயர்.
பரிகாரம்:
கல்யாணத்தில் தடை, கிரகதோஷம், வியாபாரத்தில் தோல்வி, உடல் நோய்கள், இவற்றை சரிசெய்து வாழ்வில் மேன்மை அடைய இந்த அம்மனுக்கு சாந்தி கல்யாணம் என்ற பூஜையை கோவிலில் முறைப்படி செய்ய வேண்டும்.
வழித்தடம் :
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் கனகபுரி என்னும் ஊரில் இந்திர கீழதிரி மலையின் உச்சியில் இத்தலம் அமைந்துள்ளது. விஜயவாடாவில் இருந்து பேருந்துகள் செல்கின்றன.
Google Map :