திருக்கள்வனூர்
திருமாலுக்கு குறும்பு செய்வது என்றால் படு ஆனந்தம். சிறு வயதில் கண்ணனாக தவழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட குறும்புகள் செய்து எல்லோரையும் கிறங்க அடித்திருக்கிறான். பின்னரும் கூட இந்த குறும்புத்தனம் நிற்கவே இல்லை. இப்படிப்பட்ட குறும்புத்தனமான ஒரு விளையாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கள்வனூர் ஸ்தலத்தில் செய்து பார்வதி தேவி மூலம் ‘கள்வன்’ பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்றால் திருமாலின் விளையாட்டை நாம் என்னவென்று சொல்வது?
இந்த வரலாறு திருக்கார்வன வரலாறு தான் ஆனால் வித்தியாசம் நிறைய உண்டு.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறையின் வலது பக்கத்தில் பெருமாள் சன்னதி ஒன்று உண்டு. மூலவரின் திருப்பெயர்
- ஆதிவாராகப்பெருமாள் நின்ற திருக்கோலம்.
- விமானம் வாமன விமானம்
- தாயார் அஞ்சலை நாச்சியார்
- தீர்த்தம் நித்திய புஷ்கரணி
அச்வத்த நாராயணன் என்பவருக்கு திருமால் தரிசனம் கொடுத்த ஸ்தலம். ஒரு சமயம் பார்வதி தேவியும் லட்சுமியும் தனியே அமர்ந்து காஞ்சிபுரம் ஸ்ரீமன் நாராயணன் காமகோஷ்டத்தில் உள்ள பஞ்ச தீர்த்தக் கரையில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். திருமகளைக் காணாமல் அவளை தேடி வந்தான் நாராயணன். அவர்கள் இருவரும் (லட்சுமி பார்வதியும்) பேசிக் கொண்டிருப்பதை கண்டு அவர்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று ஒட்டு கேட்டார். ஆனால் இதை பார்வதி தேவி கண்டுபிடித்து ‘கள்வன்’ என்று பட்டம் கொடுத்துவிட்டாள். அன்றிலிருந்து இந்த ஸ்தலம் திருக்கள்வனூர் என்று வழங்கலாயிற்று.
இன்னொரு தகவலும் உண்டு
முன்னொரு சமயம் சிவபெருமானுக்கு பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட சிவபெருமான் கோவம் அடைந்து பார்வதிக்கு சாபம் கொடுத்தான். உடனே பார்வதி சிவனடி பணிந்து இதற்கு பிராயச்சித்தம் கேட்டாள் இந்த காஞ்சிபுரத்திற்கு வந்து ஒற்றை காலால் நின்று வாமனரை நோக்கி தவம் செய்தால் தான் கொடுத்த சாபம் நீங்கும் என்றார் சிவபெருமான். அப்படியே காமாட்சி இங்கு வந்து வாமனரை நோக்கி தவம் செய்து ‘காமாட்சி’ என்று பெயர் பெற்றுசிவபெருமானுடன் இணைந்ததாக சொல்லப்படுகிறது.
பரிகாரம்
தாம்பத்திய பிரச்சனையால் பிரிவு ஏற்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு மீண்டும் தம்பதிகளாக இணையவும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் நல்லபடியாக விரைவில் நடக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்பட்டால் அதை சீர் செய்து நல்லபடியாக கொண்டு வரவும், மற்றவர்கள் அந்தரங்க விஷயத்தில் தலையிட்டு கெட்ட பெயர் வாங்கிய மன உளைச்சல் அடைந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நல்ல பெயர் எடுக்கவும், முன்னோர்கள் தோஷம், ராகு கேது தோஷம்விலக்கவும் திருக்கள்வனூர் ஸ்தலத்திற்கு வந்து மனதார பிரார்த்தனை செய்து பெருமாளை வழிபட்டு சென்றால் கெடுதல் அத்தனையும் விலகும். மனதிற்கு சாந்தியும், நிம்மதியும் கிடைக்கும் அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலம் இது..
கோவில் இருப்பிடம் :