கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் தரும் கிரக நிலைகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் தரும் கிரக நிலைகள்!!! 

கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகத்தை பெற்று மகிழ்வோடு வாழ அதற்குரிய கிரகநிலைகள் எப்படி இருக்க வேண்டும் சற்று ஆராய சற்று ஆராய்வோம்..

  •  ஒருவர் ஜாதகத்தில் 2-ம் அதிபதியுடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
  •  ஒருவரின் ஜாதகத்தில் 4ம் அதிபதியுடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் ஆட்சி ,உச்சம் பெற்று சுபர்களின் தொடர்பும் இருந்துவிட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
  •  ஜாதகத்தில் 9ஆம் அதிபதி பலம் பெற்று அவருடன் லக்னாதிபதியும் குருபகவான் இணைந்துவிட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3, 6, 9, 10, 11 இல் செவ்வாய் நின்று அவரை 9-ம் அதிபதி பார்த்துவிட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற பணி அமையும்.
  •  ஒருவரின் ஜாதகத்தில் குருவும் செவ்வாயும் இணைந்து 3, 6, 9, 10, 11 இல் நின்று இருவரில் ஒருவர் அல்லது இருவரும் பலம் ஆனாலும் அவருடன் 9-9-ம் அதிபதி சம்பந்தப்பட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற அதிகார உத்தியோகம் கிடைக்கும்..

உத்தியோகம் தரும் கிரக நிலைகள்

இனி ஒருவரின் ஜாதகத்தில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாமல் மனக் கசப்புடன் மாற்று உத்தியோகம் பார்ப்பதற்கு உரிய கிரக நிலைகளை காண்போம்.

  •  ஒருவரின் ஜாதகத்தில்  2-ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்து அவருக்கு 9-ம் அதிபதியின் தொடர்பு இல்லை எனில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
 ஜாதகத்தில் 4-ம் அதிபதி 6,8,12 ல் பலவீனமடைந்து  9-ம் அதிபதியின் தொடர்பு இல்லை எனில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது.
  •  ஒருவரின் ஜாதகத்தில் 9-ம் அதிபதி 6,8,12 நீசம், அஸ்தங்கம், வக்கிரம் பெற்று இருந்தாலும் லக்னாதிபதி தொடர்பு இல்லை எனில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
  •  ஒருவரின் ஜாதகத்தில் 9ஆம் வீட்டில் திதி, சூனியம் அடைந்த கிரகம் நின்றாலும் அல்லது 9-ம் அதிபதி குருவுடன் கூடி திதி, சூன்ய ராசிகள் இருந்தாலும் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
  •  ஒருவரின் ஜாதகத்தில் உத்தியோக காரன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவான் லக்னத்திற்கு ஒன்பதிலிருந்து அந்த வீடு சூனிய ராசியாக வந்தாலும் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது.
  •  ஒருவர் சஷ்டி,நவமி, தசமி திதியில் பிறந்து அவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு சூரியன் அல்லது செவ்வாய் பகவான் இருந்தாலும் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது
  • ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதியும் 9-ம் அதிபதியும் இணைந்து இருவரில் ஒருவர் பலவீனமடைந்து 6 ,8, 12 ல் மறைந்தால் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9-ம் அதிபதியும் ராசிக்கு 9-ம் அதிபதியும் இணைந்து லக்னத்திற்கும் ராசிக்கும் 6,8,12 பலவீனம் அடைந்தால் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது…
  • ஒருவரின் ஜாதகத்தில் 9-ம் அதிபதி இருந்த வீட்டோன் லக்னத்திற்கு 6, 8, 12ல் மறைந்து பலவீனமானளும் அவர் ராசிக்கும்  மறைந்தாலும் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
  •  ஒருவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 9-ம் வீட்டில் அமர்ந்து 9-ம் அதிபதி 6,8,12ல்  நீசம், அஸ்தங்கம், வக்கிரம் அடைந்து சுபர் பாராவில் தான் கற்ற கல்வி ஏற்ற உத்தியோகம் அமையாது ..
  • ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டு அதிபதி லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதி 6, 8, 12ல் வீட்டில் நீசம் ,அஸ்தங்கம், வக்கிரம் பெற்று சுபர் பாராவில் வாய்ப்புகள் நிறைய வந்தாலும் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..
  •  ஒருவர் ஜாதகத்தில் 9ஆம் அதிபதியும் குரு பகவானும்  இணைந்து  6, 8, 12ல் மறைந்து இருவரில் ஒருவர் அல்லது இருவருமே பலவீனமடைந்து அவர்களை சுபர்  பாராவிடில்  தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது
  •  ஒருவரின் ஜாதகத்தில் 9ஆம் வீட்டில் ஜென்ம சத்துருக்கள் அமர்ந்து ஒன்பதாம் அதிபதி 6, 8, 12ல் மறைந்து 9ஆம் அதிபதி சுபக் கிரகங்கள் பாராவிடில்  தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது..

உத்தியோகம் தரும் கிரக நிலைகள்

  •  ஒருவரின் ஜாதகத்தில் 9ம் அதிபதியுடன் அஷ்டமாதிபதி சம்பந்தப்பட்ட இருவரும் 6 ,12 அல்லது எட்டில் அமர்ந்து விட்டால் தான் கற்ற கல்விக்கு ஏற்ற உத்த் யோகம் அமையாது. அப்படியே அமைந்தாலும் நிலைக்காது பதவி இழப்பு, பதவியால் அவமானம் ஏற்படுதல் போன்றவை சந்தித்தாக வேண்டும்..
  •  ஒருவரின் ஜாதகத்தில் 9ம் அதிபதியுடன்ஆரோன்  சம்பந்தப்பட்டால் இருவரும் இணைந்து 6, 8, 12ல் மறைந்தாலும் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது. மேலும் பணியில் வழக்கு பழிச்சொல் வரும்.
  •  ஒருவரின் ஜாதகத்தில் 9ம் அதிபதியுடன் பன்னிரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் 6, 8, 12ல் மறைந்து விட்டால் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாது. விருப்பமில்லாத துறையில் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் என பணிபுரிய நேரிடும் அடிக்கடி பணி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்..
  •  குறிப்பாக ஒருவரின் ஜாதகத்தில் 1,2,4,9 ஆம் அதிபதிகள் பலம் பெற்று குருவின் தொடர்பும் இருந்து விட்டால் அவர்கள் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் பார்க்க முடிகிறது என்பது மறுப்பில்லா  உண்மையாகும்.
 அதேநேரத்தில் லக்னாதிபதியும் 2 ,10ம் அதிபதியும் இணைந்து 11ஆம் அதிபதியும் தொடர்பும் கிடைத்துவிட்டால் இவர்களுக்கு ஒன்பதாம் அதிபதியின் தொடர்பு இல்லை என்றாலும் கூட கற்ற கல்விக்கு மாறான துறைகளில் ஈடுபட்டு பல கோடிகளை சம்பாதிக்கிறார்கள் என்பது அனுபவம் உணர்த்தும் ஆதார உண்மையாகும்….

Leave a Comment

error: Content is protected !!