கார்த்திகை தீபம் 2022
கார்த்திகை மாதமும் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் ரிஷப லக்னமும் விளக்கேற்றும் மாலை நேர வேளையில் இணைந்து வருவது மிக மிக அபூர்வம்.
அப்படி அமைந்து தீபம் ஏற்றும் வாய்ப்பு கிடைத்தால் அதைவிட புண்ணியமான விஷயம் எதுவும் இல்லை வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நாட்டில் வாழ்வோருக்கும் அது நன்மையை தரும்.
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி எந்த நாளில் வருகிறது என்பதை பொறுத்துதான் சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்படி புனிதமான செயற்கை நிகழும் இவ்வாண்டு (7.12.2022) காலை 8 37 மணிக்குப் பிறகு பௌர்ணமி தொடங்குகிறது. முதல் நாள் ( 6.12.2022) மாலையிலும் சரி இந்த நாள்( 7.12.2022) மாலையிலும் சரி மாலை 4:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் ரிஷப லக்கின வேலையில் கிருத்திகை ,ரோகிணி முதலிய இரண்டு நட்சத்திரங்களும் வந்துவிடு வந்துவிடுவது இந்த ஆண்டு சிறப்பு.
கிருத்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் நிறைந்த சாயங்கால வேளையில் வீடுகளிலும், கோயில்களிலும், மாட்டு கொட்டகைகளிலும் தீபம் ஏற்றுவது உத்தமம். அதுவும் சுக்கிரனுடைய ரிஷப லக்ன வேலையில் தீபம் ஏற்ற வேண்டும்.
ரிஷப ராசி என்பது மகாலட்சுமிக்கு உரிய சுக்கிரனுடைய ராசி. அங்கே சூரியனுக்குரிய கார்த்திகை நட்சத்திரம், சந்திரனுக்குரிய ரோகிணி நட்சத்திரமும், செவ்வாய்க்குரிய மிருகசீரிஷ நட்சத்திரமும் உள்ளன. இதில் சூரியனுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் ரிஷப லக்ன நேரத்தில் தீபம் ஏற்றுவது உத்தமம் என்று ஆகம விதி சொல்லுகின்றது.
காரணம் விருச்சகத்தில் இருக்கும் சூரியன் ரிஷப லக்கினத்தை பார்ப்பார். அந்த ஆசியில் சந்திரன் உச்சம் பெறுவார். சகல எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பூர்த்தியாகும்.ஆகையினால் ரிஷப லக்னத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
6.12.2022 ஆண்டு மாலை 6 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கார்த்திகை மகா தீப தரிசனம் நடைபெறும். 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காகவே உள்ள பிரத்தியோகமான தீபக் கொப்பரையை மலைக்கு கொண்டு செல்வார்கள்.
பொதுவாக தீபம் ஏற்றுவதற்காக 1000 மீட்டர் திரி, 3500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். மாலை நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீப மண்டபத்திற்கு எடுத்துவரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத் தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.
அதற்கு அடுத்த நாள் 7.12.2022 புதன்கிழமை இரவு 9 மணிக்கு அய்யன் குளத்தில் ஸ்ரீ சந்திரசேகர் தெப்ப உற்சவமும், டிசம்பர் 8-ம் தேதி அருள்மிகு உண்ணாமலை உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் கிரி பிரதட்சணமும் நடைபெறும்.
அன்று இரவும் அய்யங்குளத்தில் பராசக்தி அம்மனின் தெப்ப உற்சவம் உண்டு. டிசம்பர் மாதம் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு அய்யன் குளத்தில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம் உண்டு. நிறைவாக டிசம்பர் மாதம் 10-ம் தேதி சனிக்கிழமை இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வர திருவண்ணாமலை தீபத் திருவிழா நிறைவு பெறும்.