சுக்கிரன் 64 கலைகளுக்கும் அதிபதி அதி காலை உதயமாகி வானில் ஒளி வீசும் இவரை விடிவெள்ளி என்றும் குறிப்பிடுவர். கிழக்கு இவருக்கு உரிய திசை, இந்திராணி அல்லது துர்க்கை இவருக்கு அதிதேவதை. வைரம் இவருக்கு உரிய ரத்தினம்
இவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார் வெள்ளி உலோகமும் வெள்ளை வஸ்திரமும் இவருக்கு உகந்தவை. மனித வாழ்க்கையின் சுகபோகங்களுக்கும் காதல் அன்பு பாசம் ஆசை போன்ற உணர்வுகளுக்கும் சுக்கிரனே மூலகாரகன்
சுக்கிரனை கலத்திரக்காரகன் என்கிறது ஜோதிடம். திருமண பொருத்தம் பார்க்கும் போது சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருக்கிறாரா? என்பதை பார்த்து முடிவு செய்வார்கள். ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்திருந்தால் அவரது உச்ச நீச்ச நிலைகளை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.
இசை, நாடகம், நாட்டியம் முதலான கலைத்திறமை, சரீர சுகம், சயன சுகம், சிம்ஹாசன யோகம், அழகு, ஆரோக்கியம், இளமை, வீடு வாகன வசதி, லட்சுமி கடாட்சம், புகழ், வெளிநாட்டு பயணம் ஆகிய சௌபாக்கியங்களுக்கு சுக்கிரனே காரகன். மனித உடலில் ஜன உறுப்புகளை காப்பவன் சுக்கிரன் அதனால் புத்திர பாக்கியம் தரும் அனுக்கிரக தேவன் சுக்கிரனே.
சுக்கிரனின் அனுக்கிரகத்தை பூரணமாக பெறவும் சுக்கிரனால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷத்தை நீக்கவும் வெள்ளிக்கிழமைகளில் குத்து விளக்கேற்றி அம்பாளை வழிபடுவது நல்லது