சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்கினமோ , சந்திரனோ , லக்கினத்தின் அதிபதியோ அமைந்தால் ஜாதகருக்கு சுக்கிரன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காமல் போகும்.
அவரவர் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவத்தின் அதிபதி சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் இருப்பின் அப்பாவத்திற்கு சுக்கிரன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் தடை படும்.
1.இதன் பலன்கள் : காதல் வசப்பட்டு அதனால் ஏற்படும் துன்பங்கள் , இல்லற வாழ்வு சிறப்பில்லாமை , மன விரக்திசொல்லொண்ணா துன்பங்கள் , திருமண தடை அபவாதம், வீண் பழி.
2. இதன் பலன்கள் : நித்திய சோதனை குடும்பத்தில் வாக்குவாதம் சுகமின்மை , உடல் பாதிப்பு , தீராத நோய்களால் ஏற்படும் பயம் . வீரியமின்மை , உடல் சுகத்தில் தடை மர்ம செய்கையால் வரும் விளைவு.
3. இதன் பலன்கள் : வாழ்க்கையே வெறுத்து வெளியேறும் நிலை . திருமணவாழ்வு கசக்கும் . வீரிய பலம் கெடுவது , பால்ய வயதில் விளையாடிய விளையாட்டால் ஏற்படும் பாதிப்பு , கணவன் மனைவி , பிரிவினை . திருமணத்தடை துறவறம் , சன்னியாசம் மேற்கொள்வது .
1 முதல் 3 வரையில் சொல்லப்பட்ட பலன்கள் சுக்கிரன் தசாபுக்தி அந்திர காலங்களிலும் பரணி – பூசம் பூராடம் நட்சத்திரம் வரும் நாளிலும் , வெள்ளிக்கிழமைகளிலும் சுக்கிர ஓரைவரும் நேரங்களிலும் நடைமுறையில் வரும்.
சுக்கிரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர அட்டவணையை பெற கீழே சொடுக்கவும்.