தசா புத்தி பரிகாரங்கள்-சூரிய திசை-சந்திர திசை

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

தசா புத்தி பரிகாரங்கள்-சூரிய திசை-சந்திர திசை

 
உங்களில் பெரும்பாலானோர் உங்கள் ஜாதகத்தை படித்திருப்பீர்கள் சில சமயங்களில் ஜோதிடர் உங்களுக்கு நல்ல தசை ஆரம்பித்து விட்டது இனி யோக நேரம்தான் என்பார் சில சமயங்களில் கவனமாக இருங்கள் மோசமான தசை ஆரம்பித்துள்ளது என்பார் கூடவே அதற்குரிய பரிகாரங்களையும் கூறுவார்
 
 சில பரிகாரங்களை குறிப்பிட்ட கோவிலுக்கு செய்யவேண்டி வரும் சில பரிகாரங்களுக்கு குறிப்பிட்ட மனிதர்களிடம் சென்று யாகம் ,பூஜை செய்ய வேண்டி வரும் சில சமயம் தானதர்மங்கள் செய்யும்படி அமையும்
 
இனி எல்லாம் தசாபுத்திகளும் ஏற்ற மிக எளிய பரிகாரங்களை காணலாம்
 
சூரிய திசை
 
சூரிய திசையின் கால அளவு 6 ஆண்டுகள் இந்த திசை ஆரம்பித்தவுடன் தினமும் சூரிய வழிபாடு, ஆதித்யஹ்ருதயம் பிரயாணம் சிறப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகாரம் செய்ய வேண்டும் 
 
சூரிய திசை- சூரிய புத்தி(3மாதம் 6நாள்) 
ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்த அளவு கோதுமை அல்லது கோதுமை மாவை காலை 6மணி முதல் 7 மணிக்குள் வயதானவருக்கு கொடுக்கவும்
 
 சூரிய திசை- சந்திரபுத்தி(6மாதம்)
ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் 10 மணிக்குள் வயதான பெண்ணுக்கு அரிசி தானம் கொடுக்கவும் 
 
சூரிய தசை -செவ்வாய் புத்தி(4 மாதம் 6 நாள்)
 ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி முதல் 1மணிக்குள் சிறிய பையனுக்கு மயிலிறகு வாங்கி கொடுங்கள் 
 
சூரிய திசை- குரு புத்தி (10மாதம்24 நாள்)
 ஞாயிற்றுக்கிழமை ராகு நேரத்தில் மாலை 4.30மணிக்கு மேல் 6.00மணிக்குள்  பிற மதத்தினருக்கு மெழுகுவர்த்தி கொடுங்கள் 
 
சூரிய திசை-சூரிய புத்தி ( 9 மாதம் 18 நாள்)
 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பசுவுக்கு ஏதாவது கொடுங்கள் 
 
சூரியன்
 
சூரிய தசை-சனி புத்தி (11மாதம் 12 நாள்)
 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல்11 மணிக்குள் உங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கு கொஞ்சம் மிளகு கொடுங்கள் 
 
சூரிய தசை-சனி புத்தி (10 மாதம் 6 நாள்)
 காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சிறுகுழந்தைகளுக்கு பச்சைப்பயிறு சுண்டல் செய்து கொடுங்கள் 
 
சூரிய திசை கேது புத்தி (4 மாதம் 6 நாள்)
 உங்களுக்கு முடிந்த நேரத்தில் அல்லது மாலைப்பொழுதில் ஆட்டிற்கு தீவனம் கொடுக்கவும் 
 
சூரியதிசை-சுக்கிரபுத்தி(1வருடம்)
ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் இளம்பெண்ணுக்கு கொஞ்சம் சந்தனம் கொடுக்கவும் 
 
 
 
சந்திர திசை
 
சந்திர திசை பத்துவருடங்கள் ஓடும் திங்கட்கிழமை தோறும் அம்பாள் வழிபாடும், பாலாபிஷேகமும் அரிசிதானமும் நன்று. லலிதா சஹஸ்ர நாம பிரயாணம் மிகச்சிறப்பு.
 
 சந்திர திசை-சந்திர புத்தி (10 மாதம்
திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வயதான பெண்ணுக்கு பச்சரிசி தானம் நல்லது
 
சந்திர திசை-செவ்வாய் புத்தி(7 மாதம்)
 திங்கட்கிழமை காலை 9மணி முதல் 10 மணிக்குள் தோட்ட வேலை செய்பவருக்கு ஒரு ஈயப் பாத்திரம் வாங்கிக் கொடுக்கவும்
 
 சந்திர திசை-ராகு புத்தி (1வருடம் 6 மாதம்)
  திங்கட்கிழமை காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் ஆட்டுக்கு தீவனம் கொடுக்கவும். அல்லது மனநிலை சரியில்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் 
  
சந்திர தசை-குரு புத்தி(1வருடம் 4 மாதம்)
 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அருகிலுள்ள அந்தணர் குடும்பத்திற்கு ஒரு தேங்காய் வாங்கிக் கொடுக்கவும் 
 
சந்திர தசை-சனி புத்தி(1வருடம் 7 மாதம்) 
திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் வேலை செய்யும் பெண்ணுக்கு சாதம் கொடுக்கவும் 
 
கைலாச நாதர் சிவன்
 
சந்திர தசை-புதன் புத்தி(1வருடம் 5 மாதம்)
 திங்கட்கிழமை பகல் 12மணி முதல் 1:00மணிக்குள் ஏதேனும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு முடிந்த தீவனம் கொடுங்கள் 
 
சந்திர திசை-கேது புத்தி(7மாதம்)
 திங்கட்கிழமை எந்த நேரமானாலும் வயதான எளியவர்க்கு பசியறிந்து உணவு அளிக்கவும் 
 
சந்திர திசை-சுக்கிர(1வருடம் 8 மாதம்)
 திங்கட்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் யாருக்காவது சாம்பிராணி அல்லது ஒரு பாக்கெட் சாம்பிராணி வாங்கி கொடுங்கள் 
 
சந்திர திசை-சூரியபுத்தி(6மாதம்)
 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் யாருக்காவது முருங்கைக்காய் அல்லது கொஞ்சம் நெய் வாங்கி கொடுங்கள் அல்லது தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கலாம்..
                      

Leave a Comment

error: Content is protected !!