தமிழ் திருமணம்
பொதுவாக 7 ம் பாவம் என்பது களத்திர ஸ்தானம் ; கணவன் அல்லது மனைவியைப் பற்றிக் கூறுவது . 7 ம் பாவத்தைப் பற்றி தனி புஸ்தகமே எழுதலாம் ; அவ்வளவு விஷயங்கள் உள்ளன . ” பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது மகரிஷிகளாலும் மஹான்களாலும் உபதேசிக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் நாளடைவில் பல மாறுதல்களுக்குள்ளாகிவிட்டது . அதற்கேற்ப மக்கள் நிலையை அனுசரித்து நமது அனுபவத்தினால் கட்டுரை எழுதலாமே தவிர ஜோதிட சாஸ்திரம் பொய்யென்று கூறவோ , அதனை மாற்றியமைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை.
இந்த அடிப்படையில் ஜோதிட சாஸ்திரத்தில் திருமணம் பற்றி கீழ்க்காணும் தலைப்புகளில் ஆராயலாம் .
1. திருமணத் தடை அல்லது தாமதம் 2.காலாகாலத்தில் திருமணம்
3. எப்படிப்பட்ட திருமணம் ( arranged or otherwise )
4. மணவாழ்க்கை
5. நடைபெறும் காலம்
ஆதி நூல்களில் நூற்றுக் கணக்கான விதிகள் சொல்லப் பட்டுள்ளன . அவைகளை நினைவில் வைத்துக் கொண்டு பலன் சொல்லுவது கஷ்டம் . ஆகையால் அடிப்படை விதிகளை ( fundamental principles ) கொண்டு பலன் சொன்னால் ஓரளவு சரியாக வரும்
திருமணத்துடன் சம்பந்தப்பட்ட பாவங்கள் :
2,7,8 மற்றும் 12.
2 – குடும்பம் ;
7 – களத்திரம் ;
8 பெண்களுக்குமாங்கல்ய ஸ்தானம் ;
12 அயன , சயன , போக , பாக்கிய ஸதானம்.
சம்பந்தப்பட்ட கிரகங்கள் ;
சனி ( களத்திர காரகன் ) ;
குரு ( புத்திர காரகன் ; பெண்களுக்கு பதி காரகன் ) ;
செவ்வாய் ( பெண்களுக்கு மாங்கல்ய காரகன் ) . மேற்படி பாவங்கள் , பாவாதிபதிகள் , காரக கிரகங்கள் வலுக்க வேண்டும் ; கெடக் கூடாது.
திருமணம் உண்டா என்பது கேள்விக்குறி
1. லக்னாதிபதியும் 7 – ம் அதிபதியும் தனித்தோ அல்லது சேர்ந்தோ 6,8,12 ல் மறைவது.
2 . சனி சூரியன் சம்பந்தப்பட்டு மேற்படி பாவங்களுடன் தொடர்பு கொள்வது.
3.சூரியன் சுக்கிரன் சேர்க்கை
4. சனி சந்திரன் கூட்டு அல்லது 7/7
5. 7 – ல் அசுபர்கள் , 6,7 அல்லது 8 – ம் அதிபதியுடன் இருப்பது.
தாமதத் திருமணம்
1 .சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது போன்ற பாவிகள் 7 – ல் அல்லது 7 – ம் அதிபதியுடன் சேர்க்கை.
2.சூரியன் சுக்கிரன் கூட்டு
3. சூரியன் 7 அல்லது 8ம் அதிபதியுடன் இணைவது .
காலாகாலத்தில் திருமணம் நடைபெறும்
1.2,7 மற்றும் 8 – ம் இடங்கள் சுத்தம் அல்லது சுபர்களின் சேர்க்கை அல்லது பார்வை
2. சுக்கிரன்தனித்து அல்லது சுபர்களின் பார்வையுடன்
3.2,7 – ல் சுபர்கள் இருத்தல்
4.2,7 – ம் அதிபதிகள் வலுத்திருத்தல்.
களத்திரத்தின் திசை
7 – ம் இடம் , 7 – க்குடைய கிரகம் மற்றும் 7 – க்குடையவர் நின்ற ராசி ஆகியவைகளைக் கொண்டு அறியலாம் .
சூரியன் , சுக்கிரன்-கிழக்கு
சந்திரன் -தென்கிழக்கு
செவ்வாய்-தெற்கு
புதன்-வடகிழக்கு
சனி-மேற்கு
ராகு-தென்மேற்கு
குரு- வடக்கு
கேது- வடமேற்கு.
களத்திரம் தூரத்திலா அல்லது அருகிலா ?
1. சூரியனுக்கும் 7 -ம் அதிபதிக்கும் உள்ள இடைவெளி
2. லக்னத்திற்கும் 7 -ம் அதிபதிக்கும் உள்ள இடைவெளி
3. லக்னாதிபதிக்கும் 7 – ம் அதிபதிக்கும் உள்ள இடைவெளி
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
1. 2 அல்லது 7 – ம் இடம் சுபர் சேர்க்கை
2.2 அல்லது 7 – க்குடையவர் ஆட்சி , உச்சம் , கேந்திரம் அல்லது கோணத்தில்
3. 2 அல்லது 7 – ம் இடங்களைக் குரு பார்ப்பது
வாழ்க்கை துணையை தானே தேர்ந்தெடுப்பது
1.2,7 மற்றும் 8 – ம் இடங்கள் பாபிகளின் சம்பந்தம் பெறல்
2. சூரியன் மற்றும் சுக்கிரன் சம்பந்தம்
3.சந்திரன் மற்றும் சுக்கிரன் 7 / 7 ல்
4.5 மற்றும் 9 – ம் அதிபதிகள் கூடி 3 , 5 , 9 , 10 மற்றும் 11 – ல் இருத்தல்
5.சூரியன் 5 – ம் அதிபதியோடு கூட்டு சேர்தல்
6. 5 அல்லது 7- ம் அதிபதியுடன் 9 – ம் அதிபதி சேர்தல்
திருமண காலம்
1.2,7 மற்றும் 12 – ம் ம் அதிபதிகள் மற்றும் சுக்கிரனின் தசா புத்திகளில்.
2. ( பெண்களுக்கு ) கூடுதலாக , 8 – ம் அதிபதி மற்றும் சனி ஆகியோரின் தசா புத்திகளில்
3. குருவும் சனியும் 2 , 7 அல்லது 12 – மிடத்தைப் பார்க்கும் காலத்தில் பெண்களுக்கு 2 , 7 , 12 மற்றும் 8 – மிடத்தைப் பார்க்கும் காலத்தில்
4 . ( அ ) ஆண் அல்லது பெண் எந்த லக்னமாகிலும் புதன் திசை ராகு புத்தியில் அல்லது ராகு திசை புதன் புத்தியில்
( ஆ ) 7 1/2 நாட்டுச்சனி 12 அல்லது 2 – ல் 9.
பெண் ஜாதகத்தில் சில விசேஷ அம்சங்கள்
1. 7 மற்றும் 8 – ம் இடங்களில் பாபிகள் இருந்தால் மாங்கல்ய பலம் கெடக்கூடும் . ஆனால் 9 – ம் இடத்தில் ஒரு கிரகம் இருந்தால் அது பிரவிரஜ்ய யோகத்தைக் கொடுப்பதால் மாங்கல்ய பலம் வலுக்கும் ; வைதவ்யம் ஏற்படாது . ( சாராவளி )
2. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தால் , அந்தப் பெண்ணை அசுவினி , கார்த்திகை , ஆயில்யம் , மகம் , பூரம் – 1 , பூரம் -3 , உத்திரம் அனுஷம் , மூலம் , சதயம் ஆகிய தீர்க்காயுள் உள்ள நட்சத்திரங்களில் பிறந்த ஆணுக்குத் திருமணம் செய்து வைத்தால் வைதவ்ய தோஷம் நீங்கி சுமங்கலியாக வாழ்வாள் . ( சிவாஜி தொகுத்த நூல் )
3.9 – மிடம் பார்த்தா பாக்கிய ஸ்தானம் . 9ம் அதிபதிக்கு 10மிடம் அல்லது 10ம் அதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டால் அந்தப் பெண் தன் ஆயுள் உள்ளவரை தன் கணவனுக்கு அதிர்ஷ்டத்தை அளிப்பாள்.
4. நட்சத்திர தோஷம் : மூலம் , ஆயில்யம் , கேட்டை மற்றும் விசாகம் ஆகியவை பெண்களுக்கு அவபாதம் சொல்லப்பட்டவை . இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் குரு கேந்திரம் அல்லது கோணத்தில் இருந்தால் தோஷம் நீங்கும்.பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டும் செல்வ செழிப்புடன் அபிவிருத்தி அடையும்.
மஹா சௌபாக்கியவதி யோகம்
1. 9 – ல் சுபர்கள் இருத்தல் 2.
2.7 -ம் அதிபதி 6 – ல் அல்லது 6 மற்றும் 7 ம் அதிபதிகள் 12 – ல் அல்லது 6 மற்றும் 7 ம் அதிபதிகள் ஒரே நட்சத்திரத்தில் அல்லது ஒரே நவாம்சத்தில் இருந்தால் அந்தப்பெண் கற்பு , பண்பு , ஒழுக்கம் மற்றும் அடக்கம் உடையவள் .
3.7 – ம் அதிபதி லக்னத்திலும் 6 – ம் அதிபதி 7 அல்லது 12 – லும் இருக்க , 7 மற்றும் 12 – ம் அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் அல்லது பரஸ்பர பார்வையுடன் இருந்தால் அந்தப் பெண் கற்பு , பண்பு , ஒழுக்கம் மற்றும் அடக்கம் உடையவள்.
4. மகரம் லக்னமாகி சந்திரன் ராசியின் கடைசி நவாம்சத்தில் 6 – ம் அதிபதி பார்வையுடன் இருந்தால் அவள் கற்பு மற்றும் தர்ம சிந்தனை உடையவள்.
5. திரிகோணங்களில் சுபர்கள் இருப்பின் அவள் புத்திர பாக்கியம் மற்றும் சௌபாக்கியம் உள்ளவள்.
6. லக்னம் மற்றும் ராசி இரண்டும் இரட்டைப்படை ராசி என்றால் அவள் சீரும் சிறப்பும் உள்ளவள்.
7.இரவில் பிறந்தவர்களுக்கு விதி , மதி , கதி மூன்றும் இரட்டைப்படை ராசி என்றால் அவள் தனம் , புத்திர – பாக்கியம் உள்ள கற்புக்கரசி ஆவாள்.
8.விதி , கதி , மதி மூன்றும் தத்தம் பதிகளால் பார்க்கப்பட்டால் ராஜயோகம் கிடைக்கும் . ( உம் ) இந்திரா காந்தி – கடக லக்னம் – மகர ராசி – லக்னத்தில் சனி ; விருச்சிகத்தில் சூரியன் ; சிம்மத்தில் செவ்வாய்.
இஷ்ட கன்யா சித்தி ( இஷ்டம் போல் மனைவி அமைதல்)
1.சுக்கிரன் வலுவாக இருத்தல்
2.குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருத்தல்
3.குரு 2 அல்லது 7 அல்லது 8 – ம் இடத்தைப் பார்த்தல்.
திருமணம் உறவிலா அல்லது அன்னியமா ?
( அ ) உறவில் திருமணம் நடக்க வாய்ப்பு :
1. சுக்கிரன் புதன் சம்பந்தம்
2.7 – ம் அதிபதி 6 – ம் அதிபதி சேர்க்கை
இந்த கிரக சேர்க்கையில் சந்திரன் சம்பந்தப்பட்டால் தாய் வழியிலும் சூரியன் சம்பந்தப்பட்டால் தந்தை வழியிலும் திருமணம் நடக்கும் .
( ஆ ) உறவில் இல்லை :
1. 2 , 7 , 8 – ல் பாவிகள் 2. சுக்கிரனும் சூரியனும் 6 , 7 – க்கு ஆதிபத்தியம் பெறாமல் சேர்ந்தால்
3. புதனும் சூரியனும் 6 , 7 – க்கு ஆதிபத்தியம் பெறாமல் சேர்ந்தால்