திருபுவனம் சரபேஸ்வரர்
மயிலாடுதுறை சாபேஸ்வரருக்கு கும்பகோணத்திற்கு அருகில் செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது .
திரிபுவன வீரபுரம் என்பதே இத் தலத்தின் பழைய பெயராகும். இப்பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது .இப் பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது.
இது மட்டுமின்றி விவவனம் , திரிபுரவனம் , தேவசேத்திரம் என்ற வேறு பல பெயர்களும் இத் தலத்திற்கு உள்ளன .
ஊரின் நடுவே கிழக்கு நோக்கி இக் கோவில் அமைந்துள்ளது.இதற்கு 3 முக்கிய வாசல்கள் இருக்கிறது . அவைமட்டுமின்றி அர்த்த மண்டபத்தின் தென் பகுதியில் ஒன்றும் , வட பகுதியில் ஒன்றும் ஆக 2 வாசல்கள் இருக்கின்றன . முதல் கோபுரம் 7 நிலைகளுடனும் , 2 – ம் கோபுரம் 3 நிலைகளுடனும் கூடிய வாசல்கள் அழகுபெற செய்கின்றன.
இக் கோவிலுக்கு 2 பிரகாரங்கள் இருக்கிறது . அவற்றுள் முதல் திருச் சுற்றாலையில் திருச்சுற்று மாளிகை இருக்கிறது . இதில் முதல் திருச்சுற்றாலையில் நடுப்பகுதியில் நடுக்கந் தீர்த்த பெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.
கர்ப்ப கிரகத்தின் விமானம் தஞ்சை ராஜராஜேச்சரம் , கங்கை கொண்ட சோழேச்சரம் இவைகளின் விமானங்களை ஒத்தது ஆகும் . இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.
முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும் , அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.
2 – ம் திருச்சுற்றாலையில் வசந்த மண்டபமும் , யாக சாலையும் அமைந்திருக்கிறது .
மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் ஸ்ரீகம்பகரேசுவர் . தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.
திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக் கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும்.
Google Map :