திவ்ய தேசம்–திருச்சேறை சாரநாத பெருமாள்
திவ்ய தேசம்-15
வேதத்தை நமக்கு அருளியவன் பெருமான்.வேதத்தின் மூலம்தான் நாம் இந்த முன் ஜென்ம பாவத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறோம்.பகவானை நேரிடையாகக் காணத் துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம்காண முடியும்.அதுதான் நம் அனைவருக்கும் ஜீவநாடி.அப்படிப்பட்ட வேதத்திற்கும் கூட முன்னொரு காலத்தில் மிகப்பெரிய ஆபத்து வந்தபோது அந்த வேதங்களை பிரளயத்திலிருந்து காப்பாற்ற பகவான் ஒரு கடம் செய்து எப்பேர்ப்பட்ட இயற்கைச் சூழ்நிலைகளிலும் அது உடையாதவாறுசெய்து அதனுள் வேதத்தை வைத்துக் காப்பாற்றித் தந்திருக்கிறார்.அவர்தான் ஸாரநாதப் பெருமாள். இத்தகைய அதிசய சம்பவம் நடந்த இடம் திருச்சேறை .இது பஞ்சஸாரக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் குடவாசல் திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்தில் , திருச்சேறை உள்ளது .
ஸார க்ஷேஷத்திரம் , வளநகர் என்ற பெயரும் உண்டு.
கோயிலின் வடக்கில் முடிகொண்டான் ஆறுக்கும் தெற்கே குடமுருட்டி ஆறுக்கும் இடையில் 400 × 300 அடி நீள அகலத்தில் 90 அடி உயர ஏழு நிலை கொண்ட இராஜகோபுரம் உள்ள இந்தக் கோயிலில் 3 நிலை பிராகாரங்கள் உண்டு.
- மூலவர் ஸாரநாதப் பெருமாள்-நின்ற திருக்கோலம்.
- வடபுறத்தில் காவிரி.
- தெற்குப் பக்கத்தில் மார்க்கண்டேயர்.
- தாயார் ஸாரநாயகி.
- புஷ்கரணி சாரா புஷ்கரணி.
- விமானம் ஸாரா விமானம்.
பிரளய காலத்தில் வேதங்களும் அழிந்து விடுமோ என்று பகவானே அச்சப்பட்ட பொழுது இந்த திருத்தலத்திலுள்ள மண்ணைக் கொண்டு செய்த பானையால் வேதங்களை வைத்து மூடிவிட்டால் எப்படிப்பட்ட சூழ் நிலையிலும் வேதம் அழியாது என்று பிரம்மா , விஷ்ணுக்குச் சொல்ல விஷ்ணுவே ஸாரநாதனாக இங்கு வந்து பானை தயாரித்து அதில் வேதத்தை வைத்துக் காப்பாற்றினார்.
ஒருமுறை காவிரியானவள் , ‘ தனக்கு கங்கையை விட அதிக பெருமை வேண்டும் என்று வேண்டி இத்தலத்திலுள்ள சாரா புஷ்கரணியின் மேற்கரையில் அரச மரத்தடியில் ஸார நாதனை வேண்டி தவம் செய்தாள்.தவத்திற்கு மகிழ்ந்த ஸாரநாதன் கருட வாகனத்தில் பூமிதேவி , நீளாதேவி , சாரநாயகி , மஹாலெஷ்மி , ஸ்ரீதேவி சகிதம் வந்து தரிசனம் தந்து காவிரிக்கு அந்த வரத்தை அளித்தார்.
கும்பகோணத்து மகாமகம் போல் , ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் குரு வரும்பொழுது இந்த ஸ்தலத்தில் பெருமாள் 5 தேவியர்களுடன் காட்சி அளிக்கிறார்.இது மகாமகம் புண்ணியத்திற்கு ஒப்பாகும்.சார புஷ்கரணியில் நீராடுவது அன்றைக்கு அவ்வளவு புனிதமாகும்.
மன்னார் குடியிலுள்ள இராஜ கோபாலன் திருப்பணிக்காக நிறைய கற்கள் தேவைப்பட்டது. ‘ நாச பூபாலன் ‘ -என்பவனையும் ஒரு கல்லாக நினைத்து கொண்டு தூக்கி வரப்பட்டான் . அப்போது அரசரும் மற்றவர்களும் தன்னைக் கல்லாக நினைத்து துன்புறுத்துகிறார்களே என்று கண்ணீர் விட்டு திருச்சேறை ஸாரநாதப் பெருமாளிடம் முறையிட்டான்.பெருமாளே நரசபூபாலன் முன்பு தோன்றி உன் கஷ்டம் விலகும். நானே அழகிய மணவாள நாயக்கர் முன்பு உன்பொருட்டு செல்வேன் ‘ என்று சொல்லி இராஜ கோபாலப் பெருமாளாக அந்த அரசனுக்குத் தரிசனம் கொடுத்து நரச பூபாலனை மீட்டதாக சிறப்புச் செய்தி உண்டு .
திருமங்கையாழ்வார் இந்த கோயிலைப் பற்றி 13 பாசுரங்கள் பாடியிருக்கிறார் .
பரிகாரம்
வாழ்க்கையில் பெருமை அடையவும் , தடங்கல்கள் விலகவும் , நினைத்ததை சாதிக்கவும் சொத்து சுகம் கைவிட்டுப் போகாமல் இருக்கவும் . கோர்ட் விஷயங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படவும் , பதவி உயர்வு கிடைக்காமல் தடைபட்டுக் கொண்டிருந்தால் அந்த முட்டுக்கட்டைகள் விலகவும் , பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , உறவினர்களால் எந்தவித அபகீர்த்தி ஏற்படாமல் இருக்கவும் , ஆரோக்கியம் நல்லபடியாக நீடிக்கவும் இந்த தலத்திற்கு வந்து புஷ்கரணியில் நீராடி ஸார நாதனைத் தரிசித்தால் போதும் , சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் .
கோவில் இருக்கும் இடம்